Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

முதலையுடன் விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் டார்வின் பகுதியிலிருக்கும் முதலைக் காட்சியகம், மிகவும் பிரபலமானது. 2011-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்த முதலைக் காட்சியகத்தில் முதலைகளை மிக மிக அருகில் சென்று காணலாம். மிகப்பெரிய தொட்டியில் 16 அடி நீளமுள்ள முதலை இருக்கும். பார்வையாளர்கள் கட்டணம் செலுத்திவிட்டு, கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டிமூலம் தொட்டிக்குள் இறங்கலாம். முதலையை மிக அருகில் பார்த்துவிட்டுத் திரும்பலாம். அந்தப் பெட்டிக்குள் இருந்தவாறு 360 டிகிரியில் முதலையைக் கண்டு ரசிக்கலாம். இந்த த்ரில் அனுபவத்துக்காகவே இங்கேவரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

10 வயது நாய்க்குட்டியின் கின்னஸ் சாதனை!

‘ஜப்பானைச் சேர்ந்த 10 வயது பெண் நாய், ப்யூரினுக்கு (Purin) கின்னஸ் சாதனை படைப்பது என்பது சர்வ சாதாரணம். யோகா பந்தின்மீது நின்று உருட்டிக்கொண்டே, 10 மீட்டர் தூரத்தை 11.9 செகண்டுகளில் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, தனது பின்னங்கால்களில் நின்றுகொண்டு 14 சிறிய பந்துகளை உள்ளங்கால்களினால் பிடித்து, சாதனை படைத்தது. அது மட்டுமா? சறுக்குப்பலகையில் ஜாலி சவாரி செய்வது, இரண்டு கால்களில் நடப்பது, கயிற்றைத் தாண்டுவது என ஏதாவது ஒரு சாகசத்தைச் செய்துகொண்டே இருக்கும். பந்துமீது பியூரின் செய்த சவாரியை https://www.youtube.com/watch?v=iZWjI61vnAE என்ற வீடியோவில் நீங்களே பாருங்களேன்!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

குகைகள்... சில குறிப்புகள்!

குகைகளில் பல வகைகள் உண்டு. 1. கரைசல் குகைகள்: பாறைகளில் வேதியியல் பொருள்களால் வேதிவினை நிகழ்ந்து, அப்பாறைகள் கரைந்து உருவாவது. 2.லாவா குகைகள்: எரிமலைப் பாறை வெடிக்கும்போது அதில் வெளிப்படும் லாவா, குளிர்ந்து ஏற்படும் குகை. 3.கடல் குகைகள்: கடல் அலைகள் வேகமாகக் கொந்தளிக்கும்போது பாறைகளின்மீது மோதி, அந்தப் பகுதியில் உண்டாவது. 4.பனிக்கட்டிக் குகைகள்: பனிப் பாறைகள் உருகி அந்த இடத்தில் உருவாவது. இது தவிர, நீர்ப் பெருக்கு மற்றும் காற்றின் மூலம் நீரோடைக் குகை, காற்றுக் குகை போன்ற குகைகள் உண்டாகின்றன. குகை ஆராய்ச்சியாளரை ஸ்பிலியோலாஜிஸ்ட் (Speleologists) என்பர். மனிதன் கடவுள் வழிபாட்டினைக் குகையிலிருந்தே ஆரம்பித்தான். அவனது ஆரம்பகாலக் கோயில் குகைகளே. அதுவே உலகம் முழுவதும் குகைக்கோயில்கள் எனப்படுகின்றன. நம் நாட்டிலும் அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா போன்ற பிரபலமான குகைக்கோயில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சித்தன்னவாசல் குடைவுக் குகைகள் அற்புதமானவை.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

புத்தக வடிவில்... நூலகம்!

புத்தகம் படிக்க நூலகத்துக்குச் செல்வது என்றாலே, சிலருக்கு மகிழ்ச்சிதான். அப்படிச் செல்லும் நூலகத்தின் அமைப்பே புத்தக வடிவில் இருந்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா? அமெரிக்காவின் கான்சஸ் சிட்டி பொது நூலகத்தின் முகப்புப் பகுதிதான் இப்படி இருக்கிறது. குழந்தைகளுக்கான பல்வேறு துறைகளில் புத்தகங்கள் இங்குள்ளன. குறிப்பாக, 18 மாதக் குழந்தைகளுக்காகவே ஒரு சிறப்புப் பகுதி இந்த நூலகத்தில் உள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

சிரிக்கும் பறவை

மரங்கொத்திப் பறவைகளின் ஒரு வகையே, கூக்குபரா. ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும் இவற்றில் பெரும்பாலானவை, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். செம்பழுப்பு மார்பு கூக்குபரா, மினுக்கும் கூக்குபரா, நீலச் சிறகு கூக்குபரா, சிரிக்கும் கூக்குபரா எனப் பல வகைகள் உள்ளன. மனிதர்கள் சிரிப்பதுபோலவே சத்தமிடும் திறன் இவற்றுக்கு உண்டு. எலி, தவளை, பாம்பு, பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணக்கூடியவை. வசந்த காலத்தில், மரப்பொந்துகள் மற்றும் கரையான் புற்றுகளில் கூடுகளை அமைக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

தலையை உள்ளிழுக்காத ஆமை!

கடலில் வாழும் ஆமைகளில் மிகப்பெரியது, பச்சைக்கடல் ஆமை (Green Sea Turtle). மிக அகலமான வழுவழுப்பான ஓடுகள்கொண்ட இது, வெப்ப மண்டலக் கடல் பகுதிகளில் காணப்படும். இதன் ஓட்டின் கீழ்ப்புறம், பச்சை நிறக் கொழுப்புப் பகுதி இருப்பதால், ‘பச்சை ஆமை’ என்று பெயர். சிறிய பச்சை ஆமைகள்... சிறு நண்டு, ஜெல்லிமீன், கடல் பஞ்சு, சிறு மீன்கள் போன்றவற்றை உண்ணும். வளர்ந்த பிறகு கடல் பாசி போன்றவற்றையே சாப்பிடும். பச்சை ஆமை முட்டை இட, தனது துடுப்புகளைப் பயன்படுத்திக் கடற்கரை மணலில் குழி தோண்டும். மற்ற ஆமைகள்போல தலையை உள்ளிழுத்துக்கொள்ளும் திறன் பச்சை ஆமைக்கு இல்லை. 318 கிலோ எடை கொண்டது. இதன் ஓட்டின் நீளம் 5 அடி. இது 100 முதல் 200 முட்டைகள் வரை இடும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்

கைரேகை ஜாக்கிரதை

ஜப்பானில் உள்ள தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மக்களுக்கு ஓர் அறிவுரை வழங்கியது. எச்சரிக்கை என்றும் சொல்லலாம். அதாவது, நாம் வெற்றிக்கான சிம்பலாக தம்ஸ் அப் அல்லது விரண்டு விரல்களை ‘V’ போலக் காட்டுவோம் அல்லவா? அப்படிச் செய்ய வேண்டாம் என்கிறார்கள். காரணம், அப்படிக் காண்பிக்கும்போது தெரியும் உங்கள் கை விரல் ரேகையை அடையாளம் கண்டு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் உங்களின் ரேகையை உருவாக்கிவிடுவார்கள். இதன்மூலம் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கு உள்பட பல தகவல்கள் திருடப்படலாம் என்கிறார்கள். அடக் கடவுளே... சந்தோஷப்படும்போதும் அடக்க ஒடுக்கமா இருக்கணும் போலிருக்கே!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்