Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

தொப்பி...தொப்பி!

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகம் முழுவதும் மனிதர்கள் காலங்காலமாகத் தொப்பிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். செய்யும் தொழிலுக்குத் தகுந்த மாதிரியும், அந்தஸ்துக்காகவும் தொப்பி அணிந்துகொள்வது வழக்கமாக இருக்கிறது. தொப்பியை நான்கு முக்கிய பாகங்களாகப் பிரிக்கிறார்கள். தலைக்கு மேல் பாகத்துக்கு கிரவுன் (Crown) என்று பெயர். கிரவுனைச் சுற்றி இருக்கும் வளையத்துக்குப் பிரிம் (Brim) என்று பெயர். முகத்தின் முன்பகுதியில் இருக்கும் பகுதிக்கு பீக் (Peak) என்று பெயர். போட்டர் (Boater Hat), பவுலர் (Bowler Hat), டாப் (Top Hat), ஃபேடோரா (Fedora Hat) என்று தொப்பிகளில் பல வகைகள் உள்ளன.

எண்மின் தமிழ்!

இன்றைய உலகில் தினம் தினம் புதிய விஷயங்கள், கண்டுபிடிப்புகள் ஆச்சர்யப்படுத்தி வருகின்றன. எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும், அவற்றை நம் தமிழ் மொழியும் அழகாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, அவற்றைத் தமிழில் சொல்லும்போது அழகாக இருக்கும் அல்லவா? மலேசியாவில் நடந்த தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களில் 10 இங்கே...

சுட்டி ஸ்டார் நியூஸ்

1. WHATSAPP - புலனம்
2. YOUTUBE - வலையொளி
3. INSTAGRAM - படவரி
4. BLUETOOTH - ஊடலை
5. WIFI - அருகலை
6. ONLINE - இயங்கலை
7. OFFLINE - முடக்கலை
8. GPS - தடங்காட்டி
9. DIGITAL - எண்மின்
10. SELFIE - தம்படம் - சுய உரு

ஐம்பதாயிரம் புத்தகங்களுடன் அட்டகாசமான விடுதி

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

போர்ச்சுக்கலின் ஒபிடோஸ் நகரில் ‘தி லிட்ரரி மேன் ஹோட்டல்’ என்ற தங்கும் விடுதி உள்ளது. இந்த ஹோட்டலின் சிறப்பு, 50,000 புத்தகங்கள். 2015-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டலில், 30 அறைகள் உள்ளன. ஹோட்டலின் வரவேற்பறை, அறைகள், மாடிப்படிகள், சுவர்கள் என எங்கே திரும்பினாலும் புத்தகங்கள் இருக்கும். நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, சமையல் எனப் பல வகைகளில் உலகின் சிறந்த புத்தகங்கள் இங்கே உள்ளன. இங்கே தங்குபவர்கள் விரும்பும் புத்தகத்தைப் படிக்கலாம். விலை கொடுத்து வாங்கிச் செல்லலாம். இதுபோன்ற விடுதிகள் பல நாடுகளிலும் இருக்கின்றன. ஆனாலும், அங்கெல்லாம் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே உள்ளன. நியூயார்க் விடுதியில் 6,000 புத்தகங்களும், போர்ட்லாண்ட் மற்றும் டோக்கியோவில் உள்ள விடுதிகளில் 3,000 புத்தகங்களே இருக்கின்றன.

வாலில்லா பூனை

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஐஸ்லாந்து தீவுப் பகுதியில் காணப்படும் ஒரு பூனை இனம், மேங்ஸ் கேட் (Manx cat). இந்த இனத்துப் பூனைகளுக்கு வால் கிடையாது. இவை, ஆப்பிரிக்க காட்டுப் பூனைகளிலிருந்து தோன்றியவை எனப்படுகிறது. இந்தப் பூனைகளை அதிர்ஷ்டத்தின் சின்னமாக அந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே, வாலில்லாத பூனைகளை விருப்பத்துடன் வளர்க்கின்றனர்.

முட்டையிடும் குன்று

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

பறவை முட்டையிடும் என்று நமக்கெல்லாம் தெரியும். ஒரு மலை, முட்டையிடுமா? சீனாவில் இருக்கும் குலு ஷாய் (Gulu Zhai) என்ற ஒரு கிராமத்தை ஒட்டியிருக்கும் ஒரு குன்றில்தான் இந்த அதிசயம் நடக்கிறது. அந்தக் குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச் சொல்கிறார்கள். 9 அடி உயரமும் 65 அடி நீளமும்கொண்ட குன்றிலிருந்து டஜன் கணக்கில் கோள வடிவ கற்கள் உருவாகின்றன. இங்குள்ள சுண்ணாம்பு பாறைகளே இப்படி வெளிப்படுகின்றன என்கிறார்கள் புவியியலாளர்கள். எனினும், அதைக் காணவரும் மக்கள், ‘முட்டையிடும் மலை’ என்றே அழைக்கிறார்கள். இந்தக் கல் முட்டைகளை எடுத்து விற்பனையும் செய்கிறார்கள்.

ரயில் பெட்டியின் எண்கள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்

தொடர்வண்டியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் ஐந்து அல்லது ஆறு எண்கள் எழுதியிருக்கும். அந்த எண்களுக்கான அர்த்தம் தெரியுமா? முதல் 2 எண்கள் அந்தப் பெட்டி எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது. அடுத்து வரும் எண்கள், அந்த வருடத்தில் அது எத்தனையாவது பெட்டியாகத் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.