Published:Updated:

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!
பிரீமியம் ஸ்டோரி
பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

Published:Updated:
பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!
பிரீமியம் ஸ்டோரி
பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!
பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ன்புச் சுட்டி நண்பர்களே...

வணக்கம்!

இதோ வரப்போகிறது முழு ஆண்டுத் தேர்வு. ஓர் ஆண்டாக நீங்கள் படித்ததை மதிப்பிடவும், உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்லவும் வைக்கப்படிருக்கும் ஓர் ஏணிதான் இந்தத் தேர்வுகள்.

ஏணி வழுக்கிவிடுமோ, ஏறும் படிகள் உடைந்துவிடுமோ என்கிற பயமோ, பதற்றமோ தேவையே இல்லை. முழு கவனத்தையும் ஏணியின் மேல் நிறுத்தி, பாதங்களை அழுத்தமாகப் பதித்து ஏறினாலே போதும். ஏனெனில், இதற்கு முன்பு எத்தனையோ ஆயிரம் பேர் ஏறிச்சென்ற வழிதான் இது. அவர்களை மகிழ்ச்சியுடன் மேலே ஏற்றிய ஏணிதான் இது. அவர்களால் முடிந்ததை நம்மாலும் நிச்சயம் சாதிக்க முடியும். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

இந்த இணைப்பிதழில் பாடவாரியாக படிக்கும் வழிமுறைகளில் ஆரம்பித்து, தேர்வு நேரத்தில் எத்தகைய விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பது வரை அனுபவமிக்க ஆசிரியர்கள், நிபுணர்கள் அக்கறையுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆக வாங்க, பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ஆல் த பெஸ்ட்!

 அன்புடன்

ஆசிரியர்

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

மிழ்த் தேர்வைப் பொறுத்தவரை, தேர்வுக்குப் படிக்கும்போதே நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளவும். அவை, ஒரு மதிப்பெண் வினா, மனப்பாடப் பகுதி, குறுவினா, கட்டுரைப் பகுதி.

ஒரு மதிப்பெண் வினாக்களான பொருள் கூறு, பிரித்து எழுதுக போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் படித்துக்கொள்ளுங்கள். இவை, எளிதில் மதிப்பெண் தரக்கூடியவை.

மனப்பாடப் பகுதியை எழுதும்போது, எழுத்துப் பிழை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, அவற்றை நன்கு படிப்பதோடு, பலமுறை எழுதிப் பார்ப்பது அவசியம். எழுதியது பிழையின்றி இருக்கிறதா என்று சுயமதிப்பீடு செய்யவும் மறக்காதீர்கள்.  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

மனப்பாடப் பகுதியைப் புத்தகத்தில் உள்ளவாறே அடிபிறழாமல், நிறுத்தக்குறியீடுகளைத் தகுந்த இடங்களில் இட்டு எழுதவும். ஏனெனில், மனப்பாடப் பாடலில் சிறு பிழை இருந்தாலும், மதிப்பெண்ணை இழக்க நேரிடலாம்.

செய்யுட் பகுதி வினாக்களுக்கு விடை எழுதும்போது, கதையாக எழுதாமல், சொல்லவரும் விஷயத்தை மட்டும் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்டுரை வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, துணைத் தலைப்புகள் (Subtitle) வைத்து அடிக்கோடிட்டு எழுதினால், கூடுதல் சிறப்பாக இருக்கும்.

கட்டுரை (அ) நெடுவினாக்களில் மையக்கருத்துக்கு அடிக்கோடிட்டு எழுதுவதன் மூலம், அதிக மதிப்பெண் பெறலாம். நெடுவினாக்களைப் படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக்கொண்டு, அவற்றை நினைவில்வைத்துத் தேர்வில் விவரித்து எழுதலாம். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

கடிதம் எழுதும்போது யாருக்கு எழுதவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் நடைமுறையைப் பின்பற்றித் தெளிவாக எழுதவும்.

பத்தியைப் படித்து விடை அளிக்கும்போது, பலமுறை படித்துப் பார்த்து, பொருளை உணர்ந்து விடை அளியுங்கள்.

அனைத்துக்கும் மேலாக, உங்களின் கையெழுத்து மிகவும் முக்கியம். அடித்தல் திருத்தல் இல்லாமல், வார்த்தைகள் மற்றும் வரிகளுக்கு இடையே தேவையான இடைவெளியுடன் தெளிவாக எழுதவும். அது, விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.

-  ரா. தாமோதரன், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி. கும்பகோணம்

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ங்கிலத்தில் நன்கு படித்தாலும் மதிப்பெண் குறைவதற்கு முக்கியக் காரணம், தவறான ஸ்பெல்லிங்கில் (Spelling) எழுதுவதே. அதனால், நீங்கள் படிக்கும்போதே சிரமமான வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கையும் எழுதிப்பார்த்து மனதில் பதியவையுங்கள்.

அடிக்கடி Dictation வைத்து விளையாட்டு முறையில் வார்த்தைகளில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்கலாம்.

படித்த புதிய வார்த்தையை வாக்கியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டால், கேள்வி பதில் மற்றும் கட்டுரை எழுதும்போது பயன்படும். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

Synonyms, Antonyms எனப் பாடத்தில் உள்ளவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து எழுதிவைத்து, தினமும் படிப்பதால், ஞாபகசக்தி  கூடும். குழுவுக்குள் சிறு தேர்வும் வைத்துக் கொள்ளலாம்.

மனப்பாடப் பகுதியில் Poem எழுதும்போது, தலைப்பு மற்றும் எழுதியவர் பெயரையும் எழுதினால், முழு மதிப்பெண்ணைச் சுலபமாகப் பெறலாம். Poem பகுதியை ராகமாகப் பாடிப் பழகினால் மறக்காமல் இருக்கும்.
 
துணைப்பாடத்தில் வரும் (Supplementary Reading) கதையைத் திரும்பத் திரும்பப் படிப்பது, தேர்வின்போது எழுத எளிதாக இருக்கும்.

மொழிப் பாடத்துக்குக் கையெழுத்து மிக முக்கியம். தெளிவாக எழுதும்போது Presentation அழகாக இருக்கும்.

பாடத்தைப் புரிந்து படித்தால்தான், கேள்வியைச் சற்று மாற்றிக்கேட்டாலும் தகுந்த பதிலை எழுதமுடியும். அதனால், புரியாத பகுதியை ஆசிரியர் அல்லது நண்பர்களிடம் கேட்கக் கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.

ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியாவிட்டால், டிக்‌ஷனரியைப் பயன்படுத்துங்கள். அந்தச் சொல்லுக்குப் பொருள் பார்த்ததும், டிக்‌ஷனரியை மூடிவிடுங்கள். இன்னொரு சொல்லுக்கும் பொருள் தேடுகிறேன் எனப் படிக்கும் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

Grammar பகுதியில் உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் வருமோ, அந்தப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், கடகட என எழுத ஆரம்பித்துவிடக் கூடாது. முதலில் திட்டமிடல் அவசியம்.

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ணக்குத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களைப் பகுத்துக்கொண்டு, விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம்.

10 மதிப்பெண் வினாக்களான வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றை முதலில் எழுதி, 20 மதிப்பெண்ணை ஈட்டிக்கொண்டால், ஒரு தெம்பு வந்துவிடும். பிறகு, 5 மதிப்பெண் வினாக்கள், 2 மதிப்பெண் வினாக்கள், கடைசியாக 1 மதிப்பெண் வினாக்கள் என்று மாற்றி எழுதுவது நல்ல யுக்தி.

கணித அடிப்படைச் செயல்களை விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் செய்திடுங்கள்.  முற்றொருமைகள், கணித வாய்பாடுகள் ஆகியவற்றைக் கறுப்பு நிறப் பேனாவால் எழுதிக் கவனம் ஈர்க்கலாம்.

விடைகளைக் கட்டம்போட்டுக் காட்டுவது, மதிப்பெண்ணை முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வழங்குவதற்கான வழி. 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

சில கணக்குகளைச் சுருங்க எழுதித் தேவையான பகுதிகளை மட்டும் விடைத்தாளில் குறிப்பிடலாம். திருத்துபவர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருப்பதற்கான ரகசியம் இது.

கணக்கில் கவனிக்க வேண்டியவை:

வடிவியலில் உதவிப்படம் அவசியம். உண்மைப் படத்தில் அனைத்துப் புள்ளிகளுக்கும் தவறாமல் பெயரிடுங்கள்.

அளவுகோலில் பூஜ்ஜியம் பகுதி மழுங்கியிருந்தால், ஒன்றிலிருந்து தொடங்கலாம். அவ்வாறு தொடங்கினால் 10 செ.மீ. அளவெடுக்க 11 செ.மீ. எடுக்க வேண்டும்.

வரைபட வினாவில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப அளவுத்திட்டங்களைக் குறிப்பிடவும். கட்டாய வினா கொடுக்கப்பட்டிருந்தால், அதற்கு அவசியம் விடை எழுதுங்கள்.

ஒரு மதிப்பெண் வினாவில் மூன்று தகவல்களை நினைவில்கொள்ளவும். வினா எண், சரியான விடையைக் குறிக்கும் எழுத்து (அ,ஆ,இ,ஈ), சரியான விடை. இவை மூன்றையும் கட்டாயம் குறிப்பிடவும்.

விடைத்தாளைக் கையாளும் முறைகள்:

கறுப்பு, நீலம் ஆகிய இரு வண்ணப் பேனாக்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

விடைகளுக்கிடையே போதிய இடைவெளிவிடுங்கள். ஒரு வினாவுக்கான விடை முடியும்போது பென்சிலால் கோடிட்டுக் காட்டலாம்.

பொதுவானவை:

வடிவியல் பெட்டியும் அதில் அனைத்துக் கருவிகளும் சரியாக உள்ளனவா என முதல் நாளே சோதித்துக் கொள்ளுங்கள். தேர்வு அறையில் மற்றவர்களிடம் கருவிகளைக் கடன் கேட்காதீர்கள். கவராயம் தளர்வின்றி  இருந்தாலே வட்டங்கள், வட்டவிற்கள் ஆகியவற்றைச் சரியாக வரைய முடியும். எனவே, அதைச் சோதித்துச் சரிசெய்யுங்கள்.

- ரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

றிவியல் தேர்வை ஆனந்தமாக எதிர்கொள்ள அருமையான குறிப்புகள் இதோ.

ஒரு மதிப்பெண் வினாக் களைக் குறிப்புகளாக எழுதிவைத்துக்கொள்ளவும். அல்லது புத்தகத்தில் ஹைலைட்டர் எனப்படும் வண்ண பேனாக்களால் அடிக்கோடிட்டோ குறித்துக்கொள்ளலாம். இதனால், தேர்வு நேரத்தில் முழுப்பாடத்தையும் படிக்கத் தேவையில்லை.

3, 5, மற்றும் 10 மதிப்பெண் வினாக்களுக்குப் பதில்களைப் பத்திகளாக எழுதாமல், தனித்தனி வாக்கியங்களாக (Point BY Point) எழுதவும். அதில் உள்ள முக்கிய வார்த்தைகளை (Key Words) அடிக்கோடிட வேண்டும். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

உயிரியல் பாடத்தில் உள்ள படங்களை நேரம் இருக்கும்போது வரைந்து பழகிக்கொண்டால், தேர்வில் விரைவாக வரைந்துவிடலாம். படங்கள் மிகவும் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியப் பாகங்களை மட்டும் குறிக்கவும்.

படங்களைத் தரமான எச்.பி. பென்சிலால் வரைந்தால் போதுமானது. வண்ணம் கொடுக்கத் தேவையில்லை.

இயற்பியல் பாடத்தில் உள்ள கணக்குகளைப் போட்டுப் பார்க்கவும். அதில், ஸ்டெப்ஸ் எனப்படும் வழிமுறைகளை வரிசையாக எழுதவும். விடையின் இறுதியில் அலகுகளை மறக்காமல் எழுதவும்.

சர்க்யூட் படங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும். கலைச் சொற்களில் (Scientific Words) எழுத்துப் பிழைகள் நேரக் கூடாது.

வேதியியலில் வேதிச்சமன்பாடுகள் மிக முக்கியமானவை. தனிமங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகளில் பெரிய மற்றும் சிறிய எழுத்துகளில் கவனம் தேவை.

 முக்கியச் சமன்பாடுகள், தனிமங்களில் குறியீடுகள் மற்றும் சூத்திரங்களைத் துண்டுத்தாள்களில் எழுதி, வீட்டில் நம் கண்களில் படும் இடங்களில் ஒட்டிவைத்து அடிக்கடி பார்ப்பதால், மனதைவிட்டு மறையாமல் இருக்கும்.

- ப.குணசேகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ரலாற்று ஆண்டுகளை வரிசையாக எழுதி, நிகழ்வுகள் இணைத்து ஒரு காலக்கோட்டை உருவாக்கி, உங்கள் படிக்கும் அறையில் ஒட்டிக்கொள்ளவும்.

குடிமையியல் பாடத்தைக் கதை கதையாக நினைவில்கொள்ளவும்.

உங்கள் அறையில் தமிழ்நாடு, இந்தியா, உலகம்,  இயற்கை,  அரசியல் வரைபடங்களையும் ஒட்டிவைத்து ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய இடங்களைக் குறித்துவைக்கவும். இதைத் தினம் பார்ப்பதால், எளிதில் நினைவில் இருக்கும். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

படிக்கும் பாடங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி, குறிப்புச் சொற்களை இணைத்து, ஒவ்வொரு சொற்றொடராக நினைவில்கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

படிக்கும்போது ஐயமாக உள்ள வினாக்களுக்கு நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டு உடனுக்குடன் தெளிவுபெறுங்கள்.

- ஸ்ரீ.திலீப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம். 

தேர்வு நேரத்தில் செய்யவேண்டியவை!

திகாலை எழுந்ததும் கடினமான பாடங்களை முதலிலும், பிறகு எளிய பாடப் பகுதிகளையும் படிக்கலாம்.

கடினமான பாடங்களையும் விரும்பிப் படியுங்கள். ‘என்னால் முடியும்’ என்கிற நம்பிக்கையோடு புரிந்து படியுங்கள். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலும் ஒரு வெள்ளைத்தாளை ஒட்டவும். அதில், கடினமான மற்றும் அதிகம் கவனம் தேவைப்படும் பாடப்பகுதிகளின் பக்க எண்களைக் குறித்துவைக்கவும். இது, தேர்வுக்கான திருப்புதலில் சிரமத்தைக் குறைக்கும். முக்கியமான பகுதிகள் எதுவும் விடுபடாமலும் இருக்கும்.

தேர்வு சமயத்தில் பதற்றம் காரணமாக முக்கியமான பொருள்களை மறந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க, தேவையன பொருள்களை முன்கூட்டியே பட்டியலிட்டு எழுதி. அதைப் பின்பற்றவும்.

தேர்வுக்காகப் புதிதாக பேனாக்களை வாங்குவதைக் காட்டிலும், வழக்கமாகன பேனாவைப் பயன்படுத்துவது நல்லது.

வினாக்களுக்குரிய சரியான பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றைத் தெளிவாகவும் சரியாகவும் குறிப்பிடவும். படிக்காத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தால், பதறாமல், தெரிந்த வினாக்களுக்கு முதலில் தெளிவான பதில் அளியுங்கள்.

தேர்வு அறைக்கு 15 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சென்றால், கடைசி நிமிடப் பதற்றத்தைத் தவிர்க்கலாம். அதேபோல, தேர்வு நேரம் முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் முன்பே முடித்து, விடைத்தாளை ஒருமுறை செக் செய்வது நன்று.

உடற்பயிற்சிகள்

மூச்சுப் பயிற்சி

ரியான நிலையில் சம்மணமிட்டு அமர்ந்து, மூக்கின் வழியே சுவாசித்து வாயின் வழியாக மூச்சுக் காற்றை விடவும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என 10 முறை இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

கண் பயிற்சி

ண்களை மேலும் கீழுமாக 10 முறை பார்க்க வேண்டும். பின்னர், இட வலமாக 10 முறை பார்க்க வேண்டும். அதேபோல, கருவிழிகளை முழுவதுமாகச் சுழற்ற வேண்டும். இது புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதால் ஏற்படும் சோர்வினைக் குறைக்க உதவும்.

தோள்பட்டை மற்றும் விரல்களுக்கான பயிற்சி

டிகார முள் சுழற்சியில், பின்னர் அதன் எதிர்ப்புறம் என தலா 10 முறை தோள்பட்டையைச் சுழற்றவும். தோள்பட்டையை மடக்கி பின்னர் நீட்டவும். விரல்களை மடக்கி நீட்டவும். முக்கியமாக, ஸ்மைலி பந்தைக் கையில் அழுத்தி, விடுவிக்கும் பயிற்சியைச் செய்யவும். இந்தப் பயிற்சிகள், கைகளை வலுவாக வைத்திருக்கும்; மன அழுத்தத்தையும் விரட்டும்.  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

படிக்கும்போது சரியான நிலையில் உட்கார்ந்து படிக்கவும். நாற்காலியில் அமர்ந்து படித்தால், நம் முதுகுத்தண்டு 90 டிகிரி நாற்காலியில் சாய்ந்திருக்க வேண்டும். இதன்மூலம் முதுகுவலி, கழுத்துவலி ஏற்படாமல் தவிர்க்கலாம். இதனால், சுறுசுறுப்பாக வெகுநேரம் படிக்கலாம்.  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

- கோதண்டன், இயல்முறை மருத்துவர், சென்னை.

யோகா

ஏகபாதாசனா அல்லது விர்காஷனா  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

ரு காலை மடித்து மற்றொரு தொடைமீது வைத்து, ஒரே இடத்தைப் பார்த்தவாறு நிற்க வேண்டும். இதற்கு, ‘ஏகபாதாசனா’ என்று பெயர். இப்படி ஒரே இடத்தைப் பார்ப்பதால், கவனம் அதிகரிக்கும்.

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!டாடாசனம் 

ரண்டு கால்களையும் ஒட்டிவைத்து, பின்னால் உள்ள குதிகாலை மட்டும் முடிந்த அளவுக்குத் தூக்க வேண்டும். இரு கைகளையும் கோத்துவைத்து, கையை உயரத் தூக்கிக்கொள்ளவும். இந்த ஆசனம், கவனத்தை மேம்படுத்த உதவும்.

- குமரேசன், இயற்கை மற்றும் யோகா மருத்துவர், சென்னை.

தேர்வுக்குத் தயாராகும் முறை  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

*தேர்வுக்குத் தயாராகப் பாடவாரியான அட்டவணை உருவாக்கி ஒட்டிக்கொள்ளவும்.

*உங்கள் அன்றாட செயல்பாடுகளைக் குறுகிய நேரத்தில் முடித்துக்கொண்டு படிக்கும் நேரத்தை அதிகரிக்கவும்.

*படித்தவற்றை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் படித்தவற்றை வினாக்களாகக் கேளுங்கள். அவர்களை வினா கேட்கச் சொல்லி, நீங்கள் விடை தாருங்கள்.

*பழைய வினாத்தாள்களைச் சேகரித்து விடைகளைக் கண்டுபிடியுங்கள்.

*நிறைய தண்ணீர் பருகுங்கள்.

*ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறு இடைவேளைவிட்டுப் படியுங்கள்

*காற்றோட்டம், வெளிச்சம் உள்ள இடத்தில் அமரவும். இரைச்சல் இல்லாத இடமாக இருப்பது முக்கியம்.

*படித்தவற்றை நினைவில்கொள்ள, சில சுருக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்.

*அளவான, சத்தான உணவை உண்ணுங்கள்.

*நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யுங்கள். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

செய்யக் கூடாதவை

*இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதைத் தவிர்க்கவும்.

*தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவழிப்பதைக் குறைக்கவும்.

*துரித உணவுகளை நிச்சயம் தவிர்க்கவும்.

*திட்டமிட்டுப் படியுங்கள். பதற்றமாகவோ,  ஓய்வின்றியோ படிக்க வேண்டாம்.

*மேலோட்டமாகப் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. புரிந்து படியுங்கள்.

*படிப்பது தேர்வுக்கு என்ற எண்ணமின்றி, வாழ்வில் பயன்படுத்தும் வகையில் படிக்கவும்.

*படுத்துக்கொண்டு படித்தல் கூடவே கூடாது.

- ஸ்ரீ.திலீப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

பொதுவான குறிப்புகள்

த்தனை வினாக்களுக்கு விடை தெரிந்திருக்கிறது, எத்தனை வினாக்களுக்கு எழுதப்போகிறோம், ஒரு மதிப்பெண் வினாக்கள் ஒரு பக்கத்தில் எத்தனை எழுத முடியும், இரு மதிப்பெண் வினாக்களைப் புதிய பக்கத்தில் ஆரம்பிக்கலாமா போன்ற விஷயங்களைச் சிந்தித்து எழுத ஆரம்பித்தல் நல்லது. 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

5 மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் எழுதும்போது, நட்சத்திரக் குறியைப் பயன்படுத்தும் சிலர் அதை மார்ஜினுக்கு வெளியில் போட்டு, உள்ளே விடைகளை எழுதுகின்றனர். அப்படி எழுதக் கூடாது. * என்பதை மார்ஜினைவிட்டு அரை இஞ்ச் தள்ளிப்போட்டு, அதன் பக்கத்தில் விடைகளை எழுதும்போதே, பார்க்க அழகாக இருக்கும். நம் விடைத்தாளை முழுமையாகப் பார்க்கும்போது தோற்றம் அழகாக இருக்கும்.

அடுத்து, விடைகள் எழுதும்போது, எத்தனை வினாக்களுக்கு எழுதவேண்டுமோ அத்தனை வினாக்களுக்கு மட்டுமே எழுதவும். நேரம் இருக்கிறது என்றோ, விடைத்தாளில் இடம் இருக்கிறது என்றோ, தேவைக்கு அதிகமாக விடைகள் எழுதக் கூடாது. உங்களுக்குத் தெரிந்த கேட்காத வினாக்களுக்கு விடை எழுதவும் கூடாது. இன்னும் சில மாணவர்கள், கதைகள் எழுதிவைக்கின்றனர். விடை தெரியவில்லை எனில், விட்டுவிடுதல் நலம். உங்கள் விடைத்தாளை நீங்கள் எப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைவைத்தே ஆசிரியர்கள் உங்கள் அறிவையும் ஆளுமையையும் கணிப்பார்கள். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

படம் வரையவேண்டிய வினாக்களுக்கு அழகாக முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வரையவும். சரியான அளவில் இருக்க வேண்டும்.

பொருத்துக வினாவுக்கு விடை எழுதும்போது வினாக்கள்- விடைகள் இரண்டையும் பொருத்தி எழுதவும். விடைகளை மட்டும் எழுதுவது சிறப்பன்று.

கோடிட்ட இடங்களுக்கு விடைகளை மட்டுமே எழுதவும்.

எல்லா வினாக்களுக்கும் கொடுக்கப்படிருக்கும் வினா எண்களையே எழுதவும். தாங்களாகவே எண்களைக் குறிப்பிடுவது தவறு. அதற்கு மதிப்பெண் வழங்கப்படாது.   

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

எல்லா வினாக்களுக்கும் விடை எழுதி இருக்கிறோமா என இறுதியில் ஒருமுறை சரிபார்க்கவும். சிலர் விடை தெரிந்தாலும், அவசரத்தில் மறந்துவிட்டு வீட்டில் சென்று பார்த்துப் பதறுவர்.

சிலர் பாதிதான் தெரியும் என முழுவதுமாக விட்டுவிடுவர். அது தவறு. தெரிந்த அளவுக்கு எழுதினால், அந்தப் பாதிக்கு மதிப்பெண் கிடைக்கும்.

சிலர் பதற்றத்தில் Comprehension வினாக்களில் ஒன்றிரண்டுக்கு விடை எழுதாமல் விட்டுவிடுகின்றனர். சரியோ, தவறோ கொடுக்கப்பட்ட அந்தப் பகுதியை முழுவதுமாகப் படித்துப் பார்த்துவிட்டு எழுத ஆரம்பித்தால் விடை தெரியும் வாய்ப்பு அதிகம்.

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

செக் லிஸ்ட்

*ஹால் டிக்கெட்.

*ஐடி கார்டு.

*நன்றாக எழுதும் பேனாக்கள் இரண்டு. இரண்டு பேனாக்களிலும் இங்க்... நிப் சரியான அளவில்.

*சீவப்பட்ட பென்சில்கள் இரண்டு.

*ஷார்ப்னர், எரேஸர், ஜியோமெட்ரி பாக்ஸ்.

*கறுப்பு மற்றும் நீல நிற ஸ்டிக் பேனாக்கள் (முக்கியமான பகுதிகளை அடிக்கோடு போடுவதற்கு).

*விடைத்தாள்களைக் கட்டுவதற்கான நூல் (எதற்கும் கைவசம் இருப்பது நல்லது)

*பரீட்சை கிளிப், அட்டை (தேவை என்றால்)

*தண்ணீர் பாட்டில்.

தேர்வு அறைக்கு எடுத்துச்செல்லக் கூடாதவை

*செல்போன், கணித உபகரணப் பெட்டி, பவுச், கூரிய கத்தி, பிளேடு, குட்டிக் குட்டிப் பொம்மைகள், புத்தகங்கள், நோட்டுகள், அதிகமான பணம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

*தேர்வு அறைக் கண்காணிப்பாளர் தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது.

*சக மாணவர்கள் பேப்பர் கொடுத்தால் வாங்கக் கூடாது.

*யாரிடமும் எதையும் கடன் கேட்கக் கூடாது.

*யாருக்கும் சைகை காட்டக் கூடாது.

*வினாத்தாளின் விவரப் பகுதியில் தேர்வு எண் தவிர வேறு எதையும் எழுதக் கூடாது. 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

காலமும் கை வசப்படும்!

எவ்வளவு விலை கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதது நேரம். அதனால், நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். எந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டும், எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கவேண்டும் என்ற சூட்சுமம்தான் நேர மேலாண்மை. 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

தேர்வுக்குமுன்

*படிக்கவேண்டியவற்றைப் பட்டியலிட்டுத் தேர்வுகால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அதன்படி படித்தால் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தலாம்.

*பாடங்களின் முக்கியமான வரிகளைப் படிக்கும்போதே அடிக்கோடிட்டுப் படிக்கலாம்.  இதனால், ரிவைஸ் செய்யும்போது நேரம் மிச்சமாகும்.

*காலையில் எழுந்திருப்பதும், இரவு தூங்கச் செல்வதும் திட்டமிட்டபடி மாறாமல் இருக்கட்டும்.

*நண்பர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க நினைத்தால், அதை மட்டும் பேசுங்கள். இல்லையேல், உங்கள் நேரம் மட்டுமின்றி, நண்பரின் நேரமும் வீணாகும்.

*செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துவிடுங்கள்.

*அறிவியலில் படங்கள் வரைய பலமுறை பழகுங்கள். பள்ளி ஓவிய ஆசிரியரிடம் எளிய முறையில் வேகமாக வரையக் கற்றுக்கொள்வது, தேர்வில் நேரத்தைச் சேமித்துத் தரும்.

*தேர்வு நாளன்று வழக்கமாகப் பள்ளிக்குச் சென்றடையும் நேரத்தை மனதில்வைத்துப் புறப்படுங்கள். பேருந்தில் செல்பவர்கள் இன்னும் முன்கூட்டியே செல்வது நல்லது.  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

தேர்வு அறையில்...

*வினாத்தாளைப் படிக்கும்போதே தெளிவாகவும் பொருள்படும்படியும் படிக்கவும்.

*மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு குறித்த நேரத்தில் விடையளியுங்கள். விவேகமாகச் சிந்தித்து வேகமாக எழுதுங்கள்.

*நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுங்கள். பிறகு, கடினமான வினாக்களுக்கு விடையளியுங்கள்.

*பாட்டிலில் நீர் எடுத்துச் சென்றால், வகுப்பறையில் எழுந்துசென்று நீர் குடித்துவரும் நேரம் மிச்சமாகும்.

*மெயின் ஷீட்டில் எழுதச் சற்று இடம் இருக்கும்போதே, அடிஷனல் ஷீட் கேளுங்கள். அறைக் கண்காணிப்பாளர் வருவதற்கும் அந்தப் பக்கத்தை முடிக்கவும் சரியாக இருக்கும். இதன்மூலம், நேரத்தை மிச்சப்படுத்தலாம். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

*கணிதத் தேர்வு தொடங்கும் முன்பே, ஜியாமெட்ரி பொருள்களைத் தயாராக எடுத்துவைத்துவிட்டால், பயன்படுத்த எளிதாக இருக்கும். நேரம் விரயம் ஆவது தவிர்க்கப்படும்.

*தேர்வு எழுதும்போது அடுத்தவரைக் கவனிப்பதில் நேரத்தைச் சிதறவிடாதீர்கள்.

*10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடித்துவிட்டு, பக்க எண் முறையே தாள்களை அடுக்கிக் கட்டுங்கள். வினா எண்களைச் சரிபாருங்கள்.  

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

தேர்வுக்குப் பின்...

*தேர்வை நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும், வெளியே வந்ததும் அதுபற்றி வீணாக விவாதிப்பது கூடாது.

*நண்பர்களுடன் விடைகளைச் சரிபார்த்துக்கொண்டோ, புத்தகத்தைப் புரட்டிக்கொண்டோ இருக்காதீர்கள்.

*அடுத்த நாள் தேர்வுக்குத் தேவையான பொருள்களைப் பட்டியலிட்டுச் சரிபார்த்து எடுத்துவைக்கவும்.

*முடிந்ததைப்  பற்றி கவலைப்படாமல், அடுத்த தேர்வுக்குத் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தயாராகுங்கள்.

மறதியைத் தவிர்க்கலாம்!

* தேர்வுக்கு இரண்டு எதிரிகள்... ஒன்று பயம். அடுத்தது மறதி. இவர்களை எளிதாக ஒழித்துக்கட்டலாமா?

* பயத்தில் படித்த பாடங்கள் மறந்துபோகும். அதனால், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் அறிவுரையுடன் தேவையற்ற பயத்தைப் போக்கிக்கொள்ளவும்.

* எதற்காகவும் உணவைத் தவிர்க்கக் கூடாது. இதனால், படித்ததை மறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். சத்தான உணவுகளாகச் சாப்பிடவும். 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

* தேர்வு நேரத்தில் படிக்கும் அளவுக்கு மூளைக்குத் தேவையான ஓய்வும் தேவை. அந்த ஓய்வு மனதைத் தெளிவாக்கி, மறதியை விரட்டி அடிக்கும். எனவே, சரியான நேரத்தில் உறங்கவும்.

* படித்ததை முடிந்தவரை எழுதிப் பார்க்கவும். எழுதும் பழக்கம், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். விடையை மனதில் நன்கு பதியவைக்கும்.

* மனப்பாடம் செய்வதோடு, நன்கு புரிந்து படியுங்கள். இதனால், நேரம் எடுத்துக்கொண்டாலும், மறந்துபோகாத அளவுக்கு நினைவில் தங்கும்.

*உங்களின் கவனத்தைச் சிதறடிக்காது என்றால், நண்பர்களுடன் கலந்து படிக்கலாம். இப்படிப் படிப்பது ஞாபகசக்தியைக் கொடுக்கும்.

*அடிக்கடி மறக்கும் விஷயங்களை ‘க்ளூ’ வார்த்தைகளாக எழுதிவைத்தால், மறக்கவே மறக்காது.

*தேர்வு நேரத்திலும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டாம். இது, உடலை ஆரோக்கியமாக்குவதுடன் மூளைச் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

*நீங்கள் ப்ரிலியன்ட்தான். ஆனாலும், ஒரே நேரத்தில் வேறு விஷயத்தையும் செய்தவாறு படித்தால், மூளையின் கவனம் சிதறி மறதிக்கு வழி வகுத்துவிடும்.

*சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். தண்ணீர் அதிகமாகப் பருகவும். இது, உடல் சூட்டைக் குறைத்து, தலைவலி போன்றவை வராமல் படிப்பில் முழுக்கவனம் கொள்ள உதவும்.

*பாடத்தின் ஒரு பகுதியைப் படித்ததும், அதை நினைவூட்டும் விதமாகக் கண்களை மூடி, படித்ததை நினைத்துப் பாருங்கள். இது, மறதியை விரட்டும் சிறந்த வழியாகும்.

*தேர்வுக்குத் தேவையான பொருள்களைச் சரியாக எடுத்துக்கொண்டு, வினாத்தாளை நிதானமாகப் படித்து எழுத ஆரம்பித்தால், பதற்றம் இல்லாமல் தேர்வை எழுதலாம்.

- ஸ்ரீ.திலீப், அ.மே.நி.பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்,

சிறப்பு கவனம் செலுத்தவேண்டியவர்கள்

தே
ர்வு நேரத்தில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களும் இருப்பர். அவர்கள் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ள, அவர்களின் பெற்றோர்களுக்குச் சில யோசனைகள்... 

பரீட்சையை ஜெயிப்போம் இனிதே!

கண்ணாடி அணிந்துள்ள மாணவர்கள், மறக்காமல் கண்ணாடி அணிந்து செல்லக் கவனப்படுத்தவும். இல்லையென்றால், தேர்வு எழுதுவதில் சிரமப்பட நேரிடலாம். ஏதேனும் ஒரு சூழலில் கண்ணாடி உடைய நேரிட்டால், மாற்று ஏற்பாடு செய்வதற்கு முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது.

மாற்றுத்திறனாளி மாணவர்களை யார் பள்ளிக்கு அழைத்துச்செல்வது என்பதை முதல் நாளே முடிவுசெய்யவும். அப்போதுதான் தேர்வுக்குத் தாமதமின்றி வர இயலும்.

தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மாணவர்கள், படிக்கும் ஆர்வத்தில் மருந்து எடுக்க மறந்துவிடலாம். அதை நினைவுபடுத்துவது பெற்றோர் பொறுப்பு. தேர்வு எழுதும் நேரத்தில் மருந்து சாப்பிடுவதாக இருந்தால், தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடவும்..

- து.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.

தொகுப்பு : வெ.வித்யா காயத்ரி

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்,  வீ.சிவகுமார், ஆர்.எம்.முத்துராஜ், ரமேஷ் கந்தசாமி, கே.தீட்ஷித்,    ஈ.ஜெ.நந்தகுமார், க.சதீஷ்குமார், எஸ்.தேவராஜன், ச.வெங்கடேசன்,   ம.அரவிந்த், தே.சிலம்பரசன், ரா.ராம்குமார், செ.ராபர்ட்.