பிரீமியம் ஸ்டோரி
இந்த நாள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்

இந்த நாள்த்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த தலை சிறந்த ஆன்மிகவாதிகளுள் ஒருவர் பகவான்  ஸ்ரீராமகிருஷ்ணர். கடவுள் ஒருவரே “வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்” என்று தெளிவுபடுத்தியவர். 

மேற்கு வங்க மாநிலம் காமர்பகூர் என்ற இடத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். சுவாமி விவேகானந்தரின் குரு. ஒருவன் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்குப் போதனைசெய்ய முன்வர வேண்டும் என்ற அவரின் உபதேசம் உணர்ந்து, பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

இந்த நாள்

சாக்லேட் தினம் 

இந்த நாள்சா
க்லேட் பிரியர்களுக்கான ஒரு தினம். சாக்லேட் ப்ளேவரில் என்ன உணவுப்பொருள் கிடைத்தாலும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான். உலகில் அதிகமாக விற்பனை ஆகும் முதல் பத்து ஐஸ்க்ரீம் டேஸ்ட்டுகளில் சாக்லேட் ஃப்ளேவர்தான் டாப் என்று உலக பால் பொருள்கள் நிறுவனம்  தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இனிப்புத் தின்பண்டங்கள் உண்பவர்கள் தங்களுக்கென ஓர் அமைப்பையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த நாள்

உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் 

இந்த நாள்த்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற பெயரின் சுருக்கமே உ.வே.சா. தமிழ்த் தாத்தா என்று அறிஞர்களால் கொண்டாடப் படுகிறார். அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டவர். மேலும், 3000-க்கும் அதிகமான ஓலைச் சுவடிகளைச் சேகரித்திருக்கிறார்.

இந்த நாள்

சர்க்கரை மரம் கண்டுபிடிப்பு தினம் 

இந்த நாள்கொ
லம்பியா நாட்டில் உள்ள ஃபிர் மரக்காடுகளில் கரும்பு மரம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1920 - ம் ஆண்டு கொலம்பியா நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் காடுகளில் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சர்க்கரை மரங்களைக் கண்டுபிடித்தனர்.  இம்மரத்தை சுகர் மேப்பிள் (Sugar Maple) என்று அழைக்கிறார்கள்.

இந்த நாள்

ருக்மணிதேவி அருண்டேல் பிறந்த தினம்

இந்த நாள்பு
கழ் பெற்ற நடனக்கலைஞர் ருக்மணிதேவி அருண்டேல் பிறந்த தினம் பிப்ரவரி 29. அவருடைய நினைவு தினம் பிப்ரவரி மாதம் தான். ஆம். இவர் இறந்த தினம் பிப்ரவரி 24. கலாக்ஷேத்ரா என்ற நடனப் பள்ளியை நிறுவியவர். பரதநாட்டியக் கலையைப் பரவலாக்கிய பெருமைக்குரியவர். 1977-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு ருக்மணி தேவி அருண்டேல் அவர்களைப் பரிந்துரைத்தார்.

இந்த நாள்

தெரியுமா?

முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்தநாளே, தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு