Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகின் நீளமான இரண்டாவது பெருஞ்சுவர்!

சீ
னப் பெருஞ்சுவர் உலகிலேயே நீளமானது என்பது தெரிந்த விஷயம். உலகிலேயே நீளமான இரண்டாவது சுவர், நம் இந்தியாவில் இருப்பது தெரியுமா? ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர். ஆரவல்லி மலையில் 1,600 மீட்டர் உயரத்தில் 36 கிலோமீட்டர் நீளத்துக்கு உள்ளது. இந்தச் சுவரை எழுப்பியவர், மகாராணா கும்பா என்கிற மன்னர். இதேபோல, மத்தியப்பிரதேசத்திலும் 80 கி.மீ தூரத்துக்குக் கட்டப்பட்ட சுவரை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஸ்மால் அண்டு ஸ்மார்ட்!

‘உ
ன் ஸ்மார்ட் போனைவிட என் போனின் ஸ்கிரீன் பெருசு’ என்று பெருமைப்படும் இந்தக் காலத்தில், ஜான்கோ என்ற நிறுவனம், உலகின் மிகச் சிறிய ஸ்மார்ட் போனைத் தயாரித்துள்ளது. zanco tiny t1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனில் 300 எண்களைச் சேமிக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், மூன்று நாள்கள் பயன்படுத்தலாம். 180 நிமிடங்கள் பேசலாம். இது 2G-ல் மட்டுமே வேலை செய்யும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

182 தெரியுமா?

ன்னும் மூன்று மாசம் கழிச்சு, சம்மர் லீவு வந்துடும். ஊருக்குப்போக இப்பவே ரயிலில் புக் பண்ண ஆரம்பிச் சுட்டீங்களா? அப்போ, இந்த விஷயத்தையும் மனசுல வெச்சுக்கங்க. நம்ம இந்தியன் ரயில்வே 182, 138 போன்ற ஹெல்ப் லைனைப் பயணி களுக்காக வெச்சிருக்கு. குறிப்பாக, பெண் பயணிகளுக்குப் பயணத்தின்போது அசௌகரியமாக இருந்தால், 182 எண்ணுக்கு டயல் செய்து, வண்டி எண் மற்றும் இருக்கை எண்ணைக் குறிப்பிடலாம். விசாரிச்சு, அதே வண்டியின் வேறு இருக்கைக்கு மாற்றிக் கொடுப்பாங்க. அதேபோல, மருத்துவ உதவி தேவைப்பட்டால் 138 என்ற ஹெல்ப் லைனுக்கு டயல் செய்யலாம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிர்சா முண்டா

மது இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே பழங்குடியினத் தலைவரின் படம், பிர்சா முண்டா (Birsa Munda). பழங்குடி மக்களின் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் என இவருக்குப் பல முகங்கள். ஆங்கிலேயர்களிடமும் பண்ணையார்களிடமும் அடிமைப்பட்டு இருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர். தற்போதைய பீகார், ஜார்கண்டு பகுதி பழங்குடி இனமக்களின் முதல் தலைவர் இவர்தான். இந்திய நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இவரின் உருவப்படம் உள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

இலை ஆடை!

சீ
னாவில் உள்ள ஹெபேய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், ஆறாயிரம் தாவர இலைகளால் அழகிய உடையைத் தயாரித்துள்ளனர். இதற்காக, ஆறு மாதங்கள் செலவிட்டுள்ளனர். இலைகளைச் சேகரித்துப் பக்குவப்படுத்தி, மெல்லிய நூலால் இணைத்து, ஆடையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆடையை ஏலத்தில்விட்டு, கிடைக்கும் பணத்தில் ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளனர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

அணில் - சில துளிகள்!

*அணில் என்றதும் பழத்தைக் கொறிக்கும் காட்சி நினைவுக்கு வரும். விதைகள், பழங்கள், தானியங்கள் இவற்றின் முக்கிய உணவாக இருந்தாலும், சில சமயம் மாமிசமும் தின்னும்.

*உணவைச் சேமிக்கும் பழக்கம் அணிலுக்கு உண்டு. சிவப்பு அணில்கள், ஒரே இடத்தில் சேர்த்துவைக்கும். சாம்பல் அணில்கள், பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துவைக்கும்.

*பிறந்த அணில் குட்டி ஒரு அவுன்ஸ் எடையும் ஒரு இஞ்ச் உயரமும் இருக்கும். குட்டிகள் கண் திறக்கும் வரை (ஆறிலிருந்து பத்து வாரங்கள்) தன் கண்காணிப்பில் தாய் அணில் வைத்திருக்கும்.

*அணில்கள் பெரும்பாலும் தனியாகவே வாழும். குளிர்காலங்களில் மட்டுமே மற்ற அணில்களைத் தன் கூட்டுக்குள் அனுமதிக்கும்.

*உலகின் மிகப்பெரிய அணில் வகை, ரமிஃபா (3 அடி) தென்கிழக்கு ஆசியாவிலும் நேபாளத்திலும் உள்ளன. மிகச்சிறிய அணில் வகை, ஆப்பிரிக்க பிக்பி. இரண்டரை இஞ்ச் மட்டுமே இருக்கும். 

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ராட்சத அல்லி இலைகள்!

ராகுவே நாட்டில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் ‘விக்டோரியா குருஸியானா’ என்ற ராட்சத அல்லி இலைகள், உலகச் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும். அது, இந்த ஆண்டு பராகுவே கிளை நதியில் தோன்றியுள்ளன. 2006-ம் ஆண்டிலேயே அருகிவரும் தாவரங்கள் பட்டியலில் இந்த அல்லி சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘முதலை இலை’ என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இவை, 2 மீட்டர் அகலம் வரை வளரும். முதலில் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த இலைகள், பிறகு பழுப்பும் மஞ்சளும் கலந்த பச்சை நிறத்துக்கு மாறும். இந்த இலைகளைச் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்க்க, ஒரு சவாரிக்கு 65 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

பெயர்களின் பின்னால்...

டா
ல்டா: பாலிலிருந்து தயாரிக்கும் நெய்க்குப் பதில், தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் ‘வனஸ்பதி’. இதை முதலில் தயாரித்த பிரபல கம்பெனியின் பெயர்தான், ‘டால்டா’. அதுவே, வனஸ்பதி எண்ணெய்க்குப் பெயராக நிலைத்துவிட்டது.

கான்வென்ட்: கன்னியாஸ்த்ரீகள் வசிக்கும் இடமே, கான்வென்ட். ஆரம்பக் காலத்தில் அங்கேயே ஆங்கிலப் பள்ளிகள் நடத்தப்பட்டன. அதுவே, பிறகு பல ஆங்கிலப் பள்ளிகளுக்கும் பெயராக மாறிவிட்டது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

தெரியுமா?

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படுபவர், சரோஜினி நாயுடு. 

தெரியுமா?

‘ஜங்கிள் புக்’ நாவலை எழுதியவர், ருட்யார்ட் கிப்ளிங்.