பிரீமியம் ஸ்டோரி

“ரோல்பால் ஸ்கேட்டிங்’கில் மதுரை தபால் தந்தி நகரில் இருக்கும் செயின்ட் மைக்கேல் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ரோகித் பிரசன்னா,  சர்வதேச அளவில் சாதனை செய்துள்ளார்.   

ரோல்பால் ரோஹித்!

`` ‘ரோல்பால் ஸ்கேட்டிங் விளையாட்டு’ ஸ்கேட்டிங்போலத்தான்... ரெண்டு கையாலும் பந்தைத் தரையில் அடித்துக்கொண்டே போகணும்... எதிராளிக்கு விட்டுக்கொடுக்காமல் முப்பது அடி தூரத்திலிருக்கும் “கோல் போஸ்டுக்குள் பந்தைப் போட வேண்டும்” அப்படிப் போட்டுவிட்டால் ஸ்கோர் அவ்வளவுதான் சார்!’’ என்று  ஆட்டமுறையை விவரித்தார் ரோகித் பிரசன்னா. 

“பெஸ்ட் யங் பிளேயர்” உட்பட பல விருதுகள் பெற்றிருக்கும் ரோகித் பிரசன்னா இதே ரோல்பால் ஸ்கேட்டிங்கில் கிரிக்கெட்டும் விளையாடியிருக்கிறார் அதற்காகத் தேசிய அளவிலான போட்டிமூலம் `தங்கம்’ வென்றுள்ளார். 

ரோல்பால் ரோஹித்!

“ரோகித் பிரசன்னா, விளையாட்டைப்போலவே படிப்பிலும் கில்லிதான்” என்கிறார் பள்ளியின் முதல்வர் மதிவதனன். 

ரோல்பால் ரோஹித்!



“ ரோல்பால் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்ட கொஞ்ச நாள்களிலேயே மெடல் வாங்கிட்டான்... தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்கிறான். தீவிர முயற்சியால் பல வெற்றிகளையும் பெற்று ‘கேப்டன்’ பொறுப்புக்கும் வந்திருக்கிறான்” என்கின்றனர் பெற்றோர். 

நல்ல பிளேயர்... நல்ல ஆக்ரோஷமா விளையாடுவான் சொல்லிக்கொடுப்பதைக் கவனமாகக்கேட்டு, தொடர்ந்து தன்னை டெவலப் பண்ணிக்கொள்வதில்தான் இருக்கிறது ரோகித்தின் வெற்றி” என்கிறார் பயிற்சியாளர் வித்யா சாகர்.

“எனக்கு இன்னும் சாதிக்கணும்” என்கிறார்  ரோல்பால் ஸ்கேட்டிங்கில் அதிரடி ஆட்டமாடும் ரோகித் பிரசன்னா...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு