Published:Updated:

அமானுஷ்யம்

அமானுஷ்யம்
பிரீமியம் ஸ்டோரி
அமானுஷ்யம்

செல்லம்

அமானுஷ்யம்

செல்லம்

Published:Updated:
அமானுஷ்யம்
பிரீமியம் ஸ்டோரி
அமானுஷ்யம்

சீனாவில் ஐரோப்பிய மம்மிகள்!

பா
துகாத்து வைக்கப்பட்ட இறந்த உடல்களே மம்மிகள் என்பவை நமக்குத் தெரியும். சீனாவின் டாக்லாமகான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள் இன்றளவும் புதிர் நிரம்பியவையாக இருக்கின்றன. சீனாவின் எல்லைப் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் உள்ளது அந்தப் பாலைவனம். அங்கே கிடைத்த மம்மிகளில் என்ன புதிர்? அவை இறந்துபோன சீனர்களின் உடல்கள் அல்ல. ஐரோப்பியர்களின் சடலங்கள்!  சில மம்மிகளின் உடலில் இருக்கும் ஆடைகளும் ஆபரணங்களும் ஐரோப்பாவில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. தலைமுடி, எலும்புகளின் அமைப்பு ஆகியவற்றைப் பார்க்கும்போதும் அந்த மம்மிகள், நிச்சயமாக ஐரோப்பியர்களுடையவைதாம் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. 

அமானுஷ்யம்

2,000 வருடங்களுக்கு முன்பாக ஐரோப்பியர்கள் எப்படிச் சீனாவின் பாலைவனத்துக்கு வந்து இறந்தார்கள்? அந்த மம்மிகள் வைக்கப்பட்டிருந்த கோபுரங்களின் சுவர்களில் எழுதப்பட்டு இருந்தவற்றை வைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பியர்கள் இங்கே வந்திருப்பது தெரிகிறது. ஆனால், அவர்கள், அதற்கும் 1,000 வருடங்களுக்கு முன்னதாக எப்படி இறந்திருப்பார்கள் என்பது இன்னும் யாராலும் விளக்க முடியாத புதிராகத் தொடர்கிறது.

அமானுஷ்யம்

ஜோம்பீ மனிதர்கள்!

சி
ல ஆப்பிரிக்க மதங்களில் பிரேத மனிதர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறந்துபோன மனிதர்கள் மந்திரவாதிகளால் மறுபடி உயிர்தரப்பட்டு, அடிமையாகப் பயன்படுத்தப்படுவார்களாம். இவர்களுக்கு ஜோம்பீ (Zombie) என்று பெயர். இந்தப் பிரேத மனிதர்களால், சாப்பிட, சுவாசிக்க, நடமாட முடியும். ஆனால், சிந்திக்க முடியாதாம். தனக்கு உயிர் கொடுத்த எஜமானர்களால் மட்டுமே இவர்களைக் கட்டுப்படுத்த முடியுமாம். பீதியாக இருக்கிறது, இல்லையா?

1966-ம் ஆண்டு இறந்துபோன ஒரு பெண் 1980-ம் வருடம் அங்கங்கே நடமாடியதாக ஒரு புகார் பதிவாகி இருக்கிறது. ஃபெலிசியா என்கிற பெண் இப்படி பிரேதமாக உலவியதைப் பார்த்ததாக அவளுடைய அப்பாவும் சகோதரருமே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்கள், பிரேத மனிதன் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள்.  

அமானுஷ்யம்

ராட்சதக் கல்பந்துகள்!

னிதர்களால் இவ்வளவு கச்சிதமாகச் செதுக்கவே முடியாது. அவ்வளவு கோள வடிவிலான கல் பந்துகள், கோஸ்டாரிகா பகுதியில் காணப்படுகின்றன. அவை எங்கிருந்து வந்தன, எப்படி உருவாக்கப்பட்டன என்கிற விஷயம் எதுவும் தெரியவில்லை. கோஸ்டாரிகாவின் கிராமப்பகுதிகளில் இவை இறைந்து கிடக்கின்றன. இவை எத்தனை காலத்துக்கு முன்பாக உருவாகின என்பதும் யாருக்கும் தெரியவில்லை. கி.பி.200-க்கும் 1,500-க்கும் மத்தியில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யூகமாகச் சொல்கிறார்கள். இவ்வளவு அதிசயமான கற்கள் இருப்பது 1930-ம் ஆண்டுதான் வெளியே தெரியவந்தது. வாழைத் தோட்டம் போடுவதற்காகப் புதர்களை அகற்றியபோது, இவை தென்பட்டன.

பெரும்பாலான பந்துகள் கடினமான எரிமலைப் பாறைகளால் ஆனவை. சுண்ணாம்புக் கற்களால் ஆனவையும் உண்டு. பெரிய கல் பந்துகள் 16 டன் அளவில்கூட உள்ளன! இப்படி ஆயிரக்கணக்கான கல் பந்துகளை மனிதர்கள் உருவாக்கினார்களா, இயற்கை உருவாக்கியதா? யாருக்கும் தெரியவில்லை.

அமானுஷ்யம்

மணலின் தாலாட்டு!

றுமக்கூடிய, பாடக்கூடிய மணல் என்பதை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா? ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட மணல் உள்ள பகுதிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன! செங்கடலின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ‘ஜெபல் நாகஸ்’ என்கிற இடத்தில் உள்ள மணல் பகுதி, மணியைப்போல ஒலி எழுப்புமாம். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காலாஹரி பகுதியில் இருக்கும் மணற்பிரதேசத்தில், வேகமான காற்றுக்கு மணல் நகரும்போது உறுமும் சத்தம் கேட்குமாம். அதே மணல் மெதுவான காற்று வீசும்போது ஹம்மிங் செய்வதுபோல் சத்தம் போடுமாம். மணல் இதுபோல ஓசை எழுப்ப என்ன காரணம்? இதுவரை இதை ஒரு யூகமாக விளக்கக்கூட யாரும் முன்வரவில்லை.

அமானுஷ்யம்

தெரியுமா?

சீனாவில் உள்ள ஹுவாங் ஹீ ஆறு, ‘மஞ்சள் ஆறு’ என்று அழைக்கப்படுகிறது.