Published:Updated:

சுட்டி விஞ்ஞானிகள்

ந.வினோத்குமார் படங்கள் : வி.ராஜேஷ்

சுட்டி விஞ்ஞானிகள்

ந.வினோத்குமார் படங்கள் : வி.ராஜேஷ்

Published:Updated:
சுட்டி விஞ்ஞானிகள்
##~##

விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த விவசாயத்துக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மின்சாரம். மின்சாரத்தின் மூலமே பாசன வசதிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், இப்போது, ஒரு நாளைக்கு ஐந்து முதல் எட்டு மணி நேரம் மின் வெட்டு என்பது நிச்சயம் ஆகிவிட்டது. இதனால், பாசன நடைமுறைகள் பாதிக்கப்பட்டு, விவசாயம் ரொம்பவே நொடிச்சுப்போச்சு. 'மின்சாரமே இல்லாமல் பாசன வசதி செய்ய முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?’னு விவசாயிகளின் மனசுக்குள் எழுகிற கேள்வி, எப்படித்தான் கரூர் மாவட்டம், பரணி வித்யாலயா மாணவர்கள் காதில் விழுந்துச்சோ... மின்சாரம் இல்லாமல் பாசன வசதி செய்யும் முறையைக் கண்டுபிடிச்சு அசத்தி இருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனோஜ்குமார், கிரி பிரஷாந்த், ஆகாஷ், விசாகன், விஷ்வக்சங்கர் என்கிற இந்த ஐவர் படைதான் இந்தச் சாதனையைச் செய்தார்கள்.

''பொதுவாகப் பாசனத்துக்கு ஒரு தொட்டிதான் கட்டிவெச்சு இருப்பாங்க. மின்சார மோட்டார்வெச்சு பாசனம் செய்வாங்க. ஆனா, நாங்க கண்டுபிடிச்சு இருக்கிற முறையில் ஒண்ணுக்கு ரெண்டா தொட்டிகள் வெச்சுக்கணும். முதலில் ஒரு தொட்டியில் மட்டும் நீரை நிரப்பிக்கணும். அப்புறம் அந்தத் தொட்டியின் கேட் வால்வைத் திறந்துவிட்டுரணும். உடனே, இரண்டு தொட்டிகளையும் இணைக்கிற 'குறை அடர்த்தி பாலி எத்திலின்’ அப்படிங்கிற 'எல்.டி.பி.’ பைப் (லிஷீஷ் ஞிமீஸீsவீtஹ் ஜீவீஜீமீ) மூலமா தண்ணீர் இன்னொரு தொட்டிக்குப் போகும். இந்த சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீர் வீணாகாமல் நேரடியாக வேர்களுக்கே பாயும்.

சுட்டி விஞ்ஞானிகள்

இந்த முறை மூலமாக மின்சாரச் செலவு ரொம்ப மிச்சமாகும். அதோடு நிறையப் பயன்களும் இருக்கு. மின்சாரம் மூலமாக ஒரு தொட்டியைப் பயன்படுத்துவ  தால், கேட் வால்வை அடிக்கடி திறந்து மூடுவோம். அதனால், கேட் வால்வுப் பகுதியில் எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கும். அப்போ, பூஞ்சைகள் உருவாகும். கேட் வால்வைத் திறக்கும்போது, அந்தப் பூஞ்சைகள் நிலத்தில் படியும். அதனால், நிலத்தின் வளம் கெட்டுப்போகும். ஆனால், எங்களோட முறையில் இரண்டு தொட்டிகளுக்கும் இடையே எப்பவும் நீர்ப் போக்குவரத்து இருந்துக்கிட்டே இருக்கும். அதனால் பூஞ்சைகள் தோன்றாது.

எவ்வளவு ஏக்கர் என்பதைப் பொறுத்து அதுக்கு ஏத்தபடி தொடராகவும் தொட்டிகளைக் கட்டிக்கலாம். மின்சார மோட்டாருக்கு 'டாட்டா’ சொல்லிட்டு, இந்த முறையைச் செயல்படுத்தினாங்கன்னா... நல்ல பயன்கள் கிடைக்கும். எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்!'' என்றார்கள்.

சுட்டி விஞ்ஞானிகள்

விவசாயிகளின் செல்லத் தோழர்கள் ஆகிவிட்ட சுட்டி விஞ்ஞானிகளுக்கு நாமும் சொல்வோம் சூப்பர் கங்கிராட்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism