Published:Updated:

என் 10

என் 10

என் 10

என் 10

Published:Updated:
என் 10
##~##

மும்பையில் 1973 ஏப்ரல் 24-ல் பிறந்தவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். அப்பா, பிரபல மராத்தி எழுத்தாளர். அவர், சச்சின் தேவ் பர்மன் என்னும் இசையமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால், மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பை, சாரதாஸ்ரம் பள்ளியில் படித்தபோது, வினோத் காம்ப்ளியுடன் இணைந்து அடித்த 664 ரன்கள்தான் சச்சினைத் தேசிய அணிக்கு அழைத்து வந்தது. மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையின் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, அசத்தினார் சச்சின்.

சச்சினின் உயர்வில் முக்கியமானவர், அவரது அண்ணன் அஜீத். மும்பை பாந்த்ராவில் இருக்கும் சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால், சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினைத் தங்கவைத்து, கூடவே இருந்து தம்பியைக் கவனித்துக்கொண்டவர் அஜீத் டெண்டுல்கர்.

முதலில், சென்னை எம்.ஆர்.எஃப். பேஸ் ஃபவுண்டேஷனில் பௌலர் ஆவதற்குப் பயிற்சிபெற வந்தார் சச்சின். ஆனால், பயிற்சியாளரான டென்னிஸ் லில்லி, 'நீ அதிரடி பேட்ஸ்மேன் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போய் பேட்டிங் பயிற்சி எடு’ என்று அனுப்பிவைத்தார். ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து கடைசி ஆளாகப் போவாராம் சச்சின்.

1989-ஆம் ஆண்டு 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். முதல் போட்டியில் 15 ரன்கள் எடுத்து, வக்கார் யூனிஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார் சச்சின். இந்தப் போட்டியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பந்துகள்... சச்சின் கை, கால்களைப் பதம் பார்த்தன. ஆனாலும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து விளையாடி, 'தனக்குப் பயம் கிடையாது’ என்பதை நிரூபித்தார் சச்சின்.

ஆரம்பத்தில் ஒரு நாள் போட்டிகளில் பின் வரிசையில் களம் இறக்கப்பட்டு வந்தார் சச்சின். அப்போதைய கேப்டனான அசாருதீனிடம் சென்று, 'எனக்கு இன்று ஒரே ஒரு முறை ஓப்பனிங் ஆடும் வாய்ப்புக் கொடுங்கள்!’ என்று கெஞ்சிக் கேட்டு வாய்ப்பு வாங்கினார். நியூஸிலாந்தில் நடந்த அந்தப் போட்டியில், 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் (23) இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் வெற்றிகளைப் பெற்றாலும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால், தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

என் 10

பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா எனப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை.

சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ். வந்தாலும், 'தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின்’ என்பதே இறுதி வரியாக இருக்கும். சென்டிமென்ட்டுகளை அதிகம் நம்புபவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாட மாட்டார். அவரது அனைத்துக் கார்களின் நம்பரும் 9999-தான். எந்தப் போட்டியும் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, பெவிலியனில் இருந்து பிட்ச் வரை நடந்து திரும்புவார் சச்சின்.

உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் சச்சினின் கனவாக இருந்தது. அது, அவர் கிரிக்கெட்டுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங் களுக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்  நிறைவேறியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism