Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ?

கடிகாரம் !இரா.நடராசன்

எப்படி வந்தேன் தெரியுமா ?

கடிகாரம் !இரா.நடராசன்

Published:Updated:
##~##

டிக்... டிக்... டிக்... சுட்டிகளே... நான்தான் கடிகாரம் பேசுகிறேன். நீங்கள் எங்கு போனாலும் நானும் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக கைக் கடிகாரமாக என்னைத் தயாரிக்கிறார்கள்.  யாராவது 'டைம் என்ன?’னு உங்ககிட்ட கேட்டால், ஸ்டைலாக கையைத் திருப்பிப் பார்த்துச் சொல்வீங்க. உங்களுடன் நெருக்கமாக இருந்து, காலத்தைக் காட்டும் நான், எங்கே இருந்து வந்தேன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா? வாங்க சொல்றேன்.

திருகு வாட்ச், குவார்ட்ஸ் வாட்ச், எலெக்ட்ரானிக் வாட்ச் இப்படிப் பல வகைகளில் நான் தயாராகிறேன்.  மெக்கானிக்கல் கைக் கடிகாரத்தைத் திருகு வாட்ச் என்பார்கள். குவார்ட்ஸ் வாட்ச்சும், எலெக்ட்ரானிக் வாட்ச்சும் என் உடன் பிறவாச் சகோதரர்கள். சாதாரணமாக, 1 சென்டி மீட்டர் தடிமனும் 1.5 செ.மீ ஆரமும் கொண்ட, வட்டமான என் குட்டி உடம்பில் சராசரியாக 147 பாகங்கள் உள்ளன. எல்லாமே  நுண்ணிய பாகங்கள். சிலவற்றைச் சாதாரண கண்களால் பார்க்கக்கூட முடியாது. என்னைத் தயாரிக்கும் தொழிற்சாலையில், பல விதக் கருவிகளால் அவற்றைச் செய்கிறார்கள். எனது பாகங்கள் மில்லினோ மீட்டர் எனும் அளவையால் அளக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனது பாகங்கள் நிக்கல், காரீயம், பித்தளை போன்ற உலோகங்களால் ஆனவை. அவை, துருப்பிடிக்காது. என் உடல் பாகங்களில்... இதயம் போல 'டிக் டிக்’ என சத்தமிடும் அமைப்பான, 'பேலன்ஸ் வீல்’தான் பிரதானம். இதை, 'கிம்பால் அரேஞ்மென்ட்’ என்கிறார்கள். இது, ஒரு ஸ்பிரிங்கும் அரை வளையமுமாக இருக்கும். அரை வட்டங்கள் சீராக முன்னும் பின்னும் சென்று, இரண்டு முட்களும் நகரக் காரணமாகிறது. முதலில் அதைப் பொருத்துவார்கள். சாவி கொடுத்து ஓடுவது ஒரு ரகம். அதற்காக தனித் திருகு அமைப்புகள் உண்டு. சக்கரங்கள் முதல் குட்டி சுத்தியல் வரை, அனைத்து உதிரிப் பாகங்களும் சரியாக இணைந்து செயல்பட்டால்தான், நான் இயங்க முடியும்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

முதலில் கிம்பாலை அமைத்த பிறகு, 12 கியர்களை அமைப்பார்கள். வாட்ச் செய்யும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் முன்பாக, ஒரு சாய்வு மேசை இருக்கும். அவர்களது தாடைக்கு சற்றுக் கீழே வரை மேசையின் மேடையை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியும். கண்களில் ஸ்பெஷலாகத் தயாரான லென்ஸ் (ஐ பீஸ்) அணிந்து, கை விரல்களின் மூலம் என்னைத் தயார் செய்கிறார்கள்.

எஸ்கேப்மென்ட் பிரிட்ஜ், பேலன்சிங் வீல், வைண்டிங் வீல் என ஒவ்வோர் குட்டி அமைப்பாக சேர்த்து முடுக்கி, கடைசியில் பேட்டரி இணைக்கிறார்கள். சாவி கொடுத்து ஓடும் வகை வாட்ச்சுகள் இப்போது அதிகமாக வருவது இல்லை. அவை, இரண்டு கம்பிச் சுருள்கொண்ட அமைப்புப் பெற்றவை. உடலுக்கு உள்ளே ஓரளவுக்கு எல்லாம் தயாரான நிலையில், என் முகத்துக்கு வடிவம் தருவார்கள்.

பெரிய, சிறிய மற்றும் வினாடி முள் என அனைத்தும் ரெடியாக இருக்கும். அவற்றை எடுத்துப் பொருத்த வேண்டியதுதான். அதனை எனக்குத் தோதாக இருக்கும் பட்டனுடன் இணைத்து, ஆறு மணி நேரம் திறந்த நிலையில் ஓடவிட்டுப் பயிற்சி அளிப்பார்கள். பிறகு, மூடியைத் திருகி, கைப் பட்டையைப் பொருத்தி, 'மேக்கப்’ போடுவார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

எனது உடன்பிறவாச் சகோதரர்களான குவார்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் வாட்ச்சுகளும் இதே போலதான்  தயாராகின்றன. குவார்ட்ஸ் வாட்ச் என்பது 'குவார்ட்ஸ்’ எனும் மண் போன்ற வேதிப் பொருளால் இயங்கும் கைக் கடிகாரம். குவார்ட்ஸ் ஓர் அதிசய வேதிப் பொருள். அதன் மீது அழுத்தம் தரும்போது, அதில் மின்சாரம் உருவாவதோடு, சீரான அதிர்வுகளையும் உண்டாக்குகிறது. அது தரும் மின்சாரம் பீஸோ (Piezo) மின்சாரம் எனப்படும். கிரேக்க மொழியில் 'பீஸோ’ என்றால் அழுத்துதல் என்று பொருள்.

எலெக்ட்ரானிக் கைக் கடிகாரமான என் மற்றொரு சகோதரனுக்குக் கைகள் இல்லை. அதாவது, பெரிய முள், சின்ன முள் இல்லை. ஆனால், எல்.இ.டி. எனப்படும் சிறு ஒளி உமிழ் வடிவங்கள் கண்களாக உண்டு. அவை, எண் வடிவில் நேரத்தைக் காட்டும்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

கண்ணில் லென்ஸ் பொருத்தியபடி ஆயிரக்கணக்கானவர்கள் கடுமையாக உழைத்து, என்னை உங்களிடம் வரவழைத்து இருக்கிறார்கள்.  என்னை ஸ்டைலாக அணிந்துகொண்டால் மட்டும் போதாது... நன்கு பராமரித்து, பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், நான் உங்களுக்காக நீண்ட நாட்களுக்கு உழைப்பேன். அப்புறம், நீங்கள் என்னைப் பார்க்கும் எல்லா நேரமுமே நல்ல நேரம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism