Published:Updated:

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

Published:Updated:
சுட்டி மனசு !
##~##

அபிபுல்லா, 5-ஆம் வகுப்பு, பேராவூரணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னோட பிரச்னைக்கு என் தங்கச்சிதான் முக்கியக் காரணமா இருக்கா அங்கிள். அவள் முதல் வகுப்பு படிக்கிற குட்டிப் பொண்ணுதான். அதுக்காக அம்மா, அப்பா அவளை மட்டுமே கவனிக்கணுமா? நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்தான், ஒரே டைம்தான். கிளம்புறப்ப, என்னை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. டை கட்டுறது, ஷூ மாட்டுறதுலகூட யாரும் ஹெல்ப் பண்றது இல்லே. தலைகூட வாரிவிட மாட்டேங்கிறாங்க. என்னோட புத்தகப் பை ரொம்ப வெயிட். தினமும் தூக்க முடியாமத் தூக்கிட்டுப் போறேன். ஆனா, அப்பா அவளையும் தூக்கிக்கிட்டு, அவ பையையும் தூக்கிக்கிட்டுப் போறாரு. என்ன கொடுமை அங்கிள்!''

ஸ்ரீமதி, 5-ஆம் வகுப்பு, கூடுவாஞ்சேரி.

''எனக்கு ஒரு பொருளைப் பார்க்கும்போது... அதைப்பத்தி தெரிஞ்சுக்கத் தோணும். அது எப்படி வந்தது... எங்கே இருந்து வந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவேன். அப்படி நான் கேட்டால், அம்மாவுக்குப் பிடிக்கிறது இல்லே. டி.வி.-ல 'இதைச் சொன்னவர் யார்?, இது எங்கே உள்ளது?’ என்று போடுவார்கள். அதுக்கான விடை போடுறதுக்கு முன்னாடியே தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்பேன். 'விடைதான் போடுவாங்களே... அப்புறம் ஏன் கேட்கிறே?’ என்பார். அம்மாவுக்கு அது தெரியலேன்னா, 'எனக்கும் தெரியாதும்மா, விடை என்னன்னு பாரு... நானும் தெரிஞ்சுக்கணும்’னு சொன்னா பரவாயில்லே. கேட்கிறதே தப்புங்கிற மாதிரி திட்டுறதுதான் எனக்குப் பிடிக்கலை. நான் கேட்கிறது தப்பா, சரியா அங்கிள்?''

தேவராஜ், 3-ஆம் வகுப்பு, புதுச்சேரி.

''எக்ஸாம் நேரத்தில் காலையில் 3 மணிக்கே எழுப்பிவிட்டுருவாங்க, ரொம்பவே கஷ்டமா இருக்கும். எக்ஸாம் இல்லாதபோது 5 மணிக்கு எந்திரிக்கணும். கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைக்கும்போது, அம்மா ஸ்கேலால் அடிப்பாங்க. மர ஸ்கேல், இரும்பு ஸ்கேல்னு ரகம் ரகமா வெச்சு இருக்காங்க. எப்பவாச்சும் ஆசையா, 'அம்மா... சாக்லேட், ஐஸ்கிரீம் வாங்கிக் கொடும்மா...’னு கேப்பேன். அதுக்கும் திட்டுவாங்க. அம்மா வாங்கித் தராததை எப்படியாவது சாப்பிடணும்னு தோணும். அம்மாவுக்குப் பயந்துட்டு, தப்புப் பண்ண மாட்டேன். எனக்கு ரிமோட் கன்ட்ரோல் கார் ரொம்பப் பிடிக்கும், அம்மாகிட்ட வாங்கித் தரச் சொன்னா, 'நீ என்ன குழந்தையா? ஒழுங்காப் படிக்கிற வேலையப் பாரு’னு சொல்லிடுவாங்க. சாக்லேட், ஐஸ்க்ரீமே வாங்கித் தராதவங்க... ரிமோட் காரையா வாங்கித் தரப் போறாங்க?''      

சுட்டி மனசு !

லாவண்யா, 3-ஆம் வகுப்பு, திருச்சி.

''விடியற்காலையில் இருந்தே ஸ்கூலுக்கு பரபரன்னு பறக்கணும். ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்தா, டியூஷன் போகணும். ரொம்ப போர் அடிக்குது அங்கிள். வெளியில் எங்கேயும் கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாங்க. ரிலாக்ஸுக்காக கொஞ்ச நேரம் கார்ட்டூன் பார்க்கலாம்னு டி.வி. பக்கம் போனாகூட, ரிமோட்டைப் பிடுங்கி வெச்சுடுறாங்க. ஸ்கூல் நாளில் எப்பப் பார்த்தாலும் தக்காளி சாதம், ரொம்ப வெறுப்பா இருக்குது.''

மானஷா கமலம், 2-ஆம் வகுப்பு. நாகர்கோவில்.

''எல்.கே.ஜி வரை படிக்கிறப்ப, மத்தியானமே ஸ்கூல் விட்டுருவாங்க அங்கிள். இப்ப சாயங்காலம் வரைக்கும் வெக்கிறாங்க. அதுவே ரொம்பக் கஷ்டமா இருக்கு. லீவுல வீட்ல இருந்தா, அம்மா டி.வி பார்க்கவே விட மாட்டாங்க. எந்த நேரமும் படி, படின்னு தொந்தரவு பண்றாங்க. 'பக்கத்து வீட்டு அபர்ணாவைப் பாரு, எதிர் வீட்டு மணியைப் பாரு’னு எப்பவும் கம்பேர் பண்ணியே பேசுறாங்க அங்கிள். ஸ்கூலுக்குப் போகும்போது, புத்தகப் பையை அப்பாகிட்ட தூக்கிட்டு வரச் சொன்னா, 'நீதான் தூக்கிப் பழகணும்’னு இம்சை பண்றாங்க. என்னையவிடவும் வெயிட்டா இருக்கிற பையைத் தூக்கிட்டு நடந்து போறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. சாமியே... இன்னிக்காவது எங்கப்பா 'உன் பையைக் கொடு மானஷா’னு கேட்டுத் தூக்கிட்டு வரணும்னு தினமும் காலையில் சாமி கும்பிடுவேன். எனக்கு மாத்திரை சாப்பிடுறது புடிக்கவே புடிக்காது. இதுக்காகவே வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரையை வெச்சு அப்பா கொடுத்துருவாங்க. தெரியாமல் ஒரு நாள் சாப்பிட்டுட்டு நாக்கு கசந்த கசப்பு இருக்கே... இப்போ எல்லாம் சாதாரணமா வாழைப்பழம் கொடுத்தாலே பயமா இருக்கு அங்கிள். சின்ன வயசுல இருந்தே நான் இடது கையாலதான் எழுதுவேன். ஆனா, நான் இடது கையால் எழுதுறதை எங்கம்மா பார்த்துட்டா, ஸ்கேலால் அடி பின்னிடுவாங்க. திட்டித் திட்டி வலது கைக்கு மாத்திட்டாங்க. இப்ப பள்ளிக்கூடத்தில் இடது கையாலும், வீட்டில் வலது கையாலும் எழுதிட்டு இருக்கேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism