Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
##~##
''நாம் தினமும் பல் துலக்க வேண்டும் என்கிற விஷயத்தை முதல் முதலில் சொல்லிக் கொடுத்தது யார் ஜீபா?''

-பி.பரத், பூதகேணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புரியுது... உன் கோபம் எனக்கு நல்லாப் புரியுது பரத். 'தினம் இப்படிப் பல் துலக்கச் சொன்னவர் மட்டும் என் கையிலே கிடைச்சா...?னு நீ பல்லை 'நறநற’னு கடிக்கிற சத்தம் இங்கே வரை கேட்குது. யார் இந்த விஷயத்தை ஆரம்பிச்சதுங்கறதுக்கான ஆதாரம் எதுவும் சரியாக் கிடைக்கலை. மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) செய்த ஓர் அகழ்வாராய்ச்சியில், கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. அதில் தங்கத்தால் வேலைப்பாடு செய்த 'பல் துலப்பான்கள்’ இருந்தன. உயிரினங்கள், தனது உணவை எளிதாக அரைத்துச் சாப்பிடவும், அதன் மூலம் நீண்ட காலம் உயிர் வாழவும் இயற்கை கொடுத்த விஷயம்தான் பற்கள். இந்தப் பற்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பல நோய்கள் ஈஸியாக வந்துவிடும். ஸோ பரத், தினமும் காலை, இரவு இரு வேளைகளும் பற்களைத் துலக்குவோம்... நோய்களைத் துரத்துவோம்!''

''ஹாய் ஜீபா... 'ஜாக்கி சானின் சாகசங்கள்’ தொடரில் வரும் 12 மந்திரக் கற்கள் உனக்கு கிடைத்தால் என்ன செய்வே?''

-ஜெ.பரிதி, வேம்பரளி.

மை டியர் ஜீபா !

சர்வ சக்திகளும் உள்ள அந்த கற்கள், சுயநலக்காரர்களிடம் கிடைத்தால் உலகத்துக்கே ஆபத்தாக முடியும். அவை, 'செக்ஷன்-13’ல் இருப்பதுதான் பாதுகாப்பானது. அதனால்தானே, நம்ம ஜாக்கி, ஜூலி, அங்கிள், பீமா எல்லாம் இந்தப் பாடு படறாங்க? அப்பேர்ப்பட்ட கற்களை அலட்சியமா வெச்சுட்டு இருக்கலாமா? உடனே கொண்டுபோய் கொடுத்துடுவேன். அதோடு, ஜாக்கி டீமைப் பார்த்து, ஜாலியா அரட்டை அடிச்சுட்டு வருவேன். உனக்குக் கிடைச்சாலும் செக்ஷன்-13ல் கொடுத்துடு பரிதி!''

''ஹாய் ஜீபா... '7 ஆம் அறிவு’ படத்தில் சொல்கிற மாதிரி நிஜமாகவே இந்தியாவிலா 'மார்ஷியல் ஆர்ட்ஸ்’ தோன்றியது?''

-ரெ.செல்லத்துரை, தஞ்சாவூர்.

''தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ள ஓர் ஒழுங்குமுறையுடன் கற்கும் சண்டைப் பயிற்சியின் பெயர்தான், 'மார்ஷியல் ஆர்ட்ஸ்.’ இதன் முக்கிய நோக்கம் தாக்குவது அல்ல, தாக்குதலில் இருந்து தடுத்துக்கொள்வது. அன்றைய காலத்தில் ஆன்மிகவாதிகள் தங்களின் மதத்தைச் சார்ந்து, மனிதர்களுக்கு ஒழுக்கத்தையும், இவ்வகைப் பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்து மதம், பௌத்தம், தாவோயிசம், ஷின்டோ போன்ற மதங்களில் தற்காப்புக் கலைகள் சிறப்பாக இருந்தன. நம் இந்தியாவில் சில மார்ஷியல் ஆர்ட்ஸ் தோன்றியதைப் போல் சீனா, ஜப்பான் போன்ற இடங்களிலும் தோன்றின. நீ எப்படி நண்பர்களுடன் சாப்பாடு, பேனா, பென்சிலைப் பகிர்ந்துக்கொள்கிறாயோ, அப்படி இவற்றை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டார்கள். யாரும் யாரையும் எதிரிகளாகப் பார்க்காமல், நல்ல கலைகளை இப்படி பகிர்ந்துகொண்டால் சண்டைக்கு அவசியமே இல்லை.''

''அமெரிக்கத் தலைநகரைக் குறிப்பிடும்போது வாஷிங்டன் ஞி.சி. என்று போடுகிறார்களே... அதற்கு அர்த்தம் என்ன ஜீபா?''

-சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி

''அமெரிக்காவில் இரண்டு வாஷிங்டன்கள் இருக்கின்றன. ஒன்று, ஒலிம்பியா நகரைத் தலைநகரமாகக்கொண்ட மாநிலம் வாஷிங்டன். இன்னொன்று, அமெரிக்காவுக்கே தலைநகரமான வாஷிங்டன் நகரம். இது கொலம்பியா மாவட்டத்தில் இருக்கு. இரண்டுக்குமான வித்தியாசம் தெரியத்தான் இந்த வாஷிங்டன், ஞிவீstக்ஷீவீநீt ளியீ சிஷீறீuனீதீவீணீ  என்பதன் சுருக்கத்துடன் குறிப்பிடப்படுகிறது.''  

''ஜீபா ஒரு டவுட்... கேட்டால் சிரிக்கக் கூடாது. வயிறு பசிக்கு உணவு சாப்பிடறோம். ஓயாமல் வேலை செய்கிற மூளைக்குப் பசிக்காதா?''

-தி.விக்ரமன், சென்னை-37

''அருமையான கேள்வி விக்ரமன். இதில் சிரிக்க எதுவும் இல்லை. மூளைக்கும் நிச்சயமாகப் பசிக்கும். ஓயாமல் வேலை செய்கிற மாதிரி ஓயாமல் சாப்பிடவும் செய்யும். ஆக்ஸிஜனும் ரத்தமும்தான் அதன் உணவு. ஒரு நிமிடத்தில் 800 மில்லி ரத்தத்தை மூளை வாங்கிக்கொள்ளும். அதாவது, உடலில் இருக்கும் ரத்தத்தில் ஐந்தில் ஒரு பாகம் மூளைக்குச் சொந்தம்.''    

''ஹலோ ஜீபா... உன் யானை இனம் எறும்புக்குப் பயந்துதான் காதுகளை ஆட்டுறாங்களோ?''

-மா.பிரின்சி ஜெசிகா, தேவகோட்டை

''அப்ஜெக்ஷன் பிரின்சி ஜெசிகா... நீங்கள் காட்டு ராஜா என்று சொல்கிற சிங்கமே எங்களைக் கண்டால் பயந்து ஓடும். எங்களுக்கு எவ்வளவு பெரிய உடம்பு? எங்களின் பெரிய காதுகளில் இரத்த நாளங்கள் அதிகம். அதில் பாயும் இரத்தம், உடல் வெப்பத்தை அதிகமாக்கிவிடும். அதனால், சுற்றுப்புறங்களில் இருக்கும் குளிர்க் காற்றை, காதுகள் வழியாக உடலுக்குள் செலுத்திக்கொள்கிறோம். ஹலோ யானை நண்பர்களே... பிரின்சி என்னோட ஃப்ரெண்டுதான். ஏதோ தெரியாமல் சொல்லிட்டா, கோவிச்சுக்காதீங்க. ஓகே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism