என்ன நண்பர்களே... ஹோம் வொர்க் எழுத உட்கார்ந்தாச்சா? அப்படியே சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேளுங்களேன். நான்தாங்க உங்க இங்க் பேனா பேசுறேன்...

ஒரு காலத்தில், நான் வெறும் நிப்புக் கட்டையாக இருந்தேன் என்றால்... நம்பவே மாட்டீங்க. நிப்புக் கட்டையை, குப்பியில் இருக்கும் மைய்யில் தோய்த்து எழுத வேண்டும்.

1884ல் நியூயார்க் நகரின் இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிந்த, 'லூயிஸ் எட்ஸன் வாட்டர்மேன்’ என்பவர்தான் நவீன பேனாவைக் கண்டுபிடித்தார்.

பொதுவாக, எனது பாகங்களை ஐந்தாகப் பிரிக்கலாம். அவை... நிப், நிப் கட்டை, கழுத்துப் பகுதி, இங்க் டேங்க் மற்றும் மூடி. இவற்றில் ஒன்று பழுதானாலும் நான் படும் அவஸ்தை அதிகம்.

இனி, என்னை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். இதில், 16 படிநிலைகள் உள்ளன. முதலில் 'நிப்’தான் தயாராகிறது. ஒரு காலத்தில் நிப்பைத் தங்கத்தின் கலவையில் தயாரித்தார்கள். காலப்போக்கில் அது மாறியது. இப்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் உயர்தர இரும்பில் இருந்து இயந்திரங்கள் மூலம் நுணுக்கமாகச் செய்கிறார்கள்.

என் பாகங்களில் மிகவும் அத்தியாவசியமானது நிப் அல்ல. அதற்குப் பின்னால் இருக்கும் நிப் கட்டை. தந்துகிக்கவர்ச்சி எனப்படும் ஈர்ப்பு செயல்பாடு மூலம், மை டேங்க்கில் இருந்து மையை சிறிது சிறிதாக, நிப்பின் நெளிவு சுழிவுக்குத் தக்கப்படி வழங்குவதுதான் நிப் கட்டையின் வேலை. இதை, சந்தனக் கட்டை முதல் மனித எலும்பு வரை பல வகைப் பொருட்களில் செய்வார்கள்.

என்னை வடிவமைக்க, முதலில் 13 செ.மீ நீளமும் 2 செ.மீ அகலமும் கொண்ட நீள் சதுர மரக்கட்டையைச் செய்கிறார்கள். அதனைக் குடைந்து இங்க் டேங்க், மற்றும் கழுத்துப் பகுதி தயாராகும். குடைந்த மரக் குழல்களுக்குள் அப்படியே மையை ஊற்றிவிட முடியாது. உள்ளே, பாலியூரித்தேன் எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் பசையைக் கொதிக்கக் கொதிக்க ஊற்றி, ஆற வைப்பார்கள். டேங்க்கை ஓட்டை ஏதும் இன்றி செய்வதுதான் கடுமையான வேலை.

அடுத்து, கழுத்துக்குத் திருகு அமைப்பு தரும் வேலை. அதற்கு என்று பிரத்யேகக் கருவி உள்ளது. கழுத்தின் திருகு அமைப்பு, டேங்க்கின் திருகு அமைப்போடு கச்சிதமாய்ப் பொருந்தாவிட்டால், லீக் ஆவதைத் தவிர்க்க முடியாது. இந்த நுணுக்கமான வேலைக்குப் பின் கழுத்து, டேங்க் இரண்டுக்கும் தேவையான வர்ணம் பூசுகிறார்கள். 'பைலட்’ வகை பேனா, எனது ஒன்றுவிட்ட சகோதரன். அவனுக்கு டேங்க்கிற்கு உள்ளே குழாய் அமைப்பு உண்டு. விமானத்தில் பறக்கும்போது, மேல் வானில் புவி ஈர்ப்பு விசை குறைந்துவிடுவதால், மையை சிந்தாமல் இருப்பதற்காகச் செய்த பிரத்யேக அமைப்பு அது. பைலட் பயன் படுத்தும் பேனா என்பதற்காக அந்தப் பெயர் வந்தது.

நிப், நிப் கட்டை ஆகியவற்றைக் கழுத்தில் பொருத்தி... நன்கு திருகி, வண்ணமயமான மூடியும் ரெடியாகும். சமயத்தில் மூடியை பித்தளை, எவர்சில்வர் எனப் பிரத்யேக பளபளப்போடு செய்தும் அசத்துறாங்க. இப்போ, உங்களுக்காக உழைக்க நான் ரெடி.

எனது மற்றொரு சகோதரன் பால்பாயின்ட் பேனா. அவனுக்கு, உடம்பில் கெட்டிப்படுத்தப்பட்ட மை உள்ளது. அதனை எழுதும்போது சீராக வழங்க, கழுத்தில் கட்டிப் பந்து (பால்) ஸ்டீலில் வைக்கப்படும். அதனால்தான், அவனுக்கு பால்பாயின்ட் என்று பெயர்.

எவ்வளவு கஷ்டப்பட்டு என்னைத் தயார் செய்கிறார்கள் என இப்போது தெரிந்ததா? கவனக் குறைவில் என்னைத் தொலைக்காமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நீண்ட நாட்கள் உழைத்துப் பயன் தருவேன். உங்களுக்கு பணமும் மிச்சம் ஆகும்.

சரி, டயம் ஆயிருச்சு... ஹோம் வொர்க் செய்யலாம் வாங்க!