வானத்தில் விமானங்கள் பறந்து போனாலே ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்ப்போம். அது தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கே நேரில் சென்று பார்த்தால்..?

ஓசூர் அருகே, பேளகொண்டபள்ளியில் இருக்கும் 'தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட்’ (ஜிகிகிலி) சுட்டிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

அங்கு, மலர்ந்த முகத்தோடு காத்திருந்தார், 'தால்’ நிறுவன மனிதவளம் மற்றும் நிர்வாகப் பிரிவின் தலைமை மேலாளர் சுஜாதா. ''என்ன ஆன்ட்டி எங்களை வரவேற்க பேண்டு வாத்தியம் எதுவும் இல்லையா?'' என்று கேட்டான் அஷ்வின்.

''அதுக்கு என்ன? செண்ட் ஆஃப் பண்ண பேண்டுகளை வரச்சொல்லிடுவோம்'' என்று கலாய்த்தார் சுஜாதா. ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்களான ராஜசேகர், சிவக்குமார் இருவரும் நிறுவனத்தைச் சுற்றிக்காட்ட வந்தனர்.

''உள்ளே... சில இடங்களில் சூடான பொருட்களும், கெமிக்கல்களும் இருக்கும். அதனால், எதையும் தொடாதீங்க. விமானத்தைப் பார்க்கும்போதும் ஜாக்கிரதை. குண்டூசி அளவுள்ள பொருளாக இருந்தாலும் பல லட்சம் ரூபாய் விலை மதிப்பு உடையது. ஸோ, எதையும் தொடாதீங்க'' என்று முன் ஜாக்கிரதையாகச் சொன்னார்கள்.

''அவ்வளவுதானே... அசத்திடுவோம்'' என்று ராகுல் அரவிந்த் ஒரு டைப்பாக பதில் சொல்ல, ''நீ சொல்றதைப் பார்த்தாலே பயமா இருக்கு. உன்னைக் கவனிக்கத் தனியா ஒரு ஆளைப் போட்டுறோம்'' என்றார் ராஜசேகர்.

உள்ளே நடந்து செல்லும் நேரத்தில், தங்கள் நிறுவனத்தைப் பற்றி சொன்னார்கள். ''1992-ல் இருந்து இந்த நிறுவனம் செயல்படுகிறது. 500 ஊழியர்கள் வேலை செய்கிறோம். 'தால்’ நிறுவனத்தின் உரிமையாளர் சலீல் தனேஜா, புனேவைச் சேர்ந்தவர். இங்கே, ஆள் இல்லா சிறிய வேவு விமானம் முதல், பயணிகள் விமானம் வரை தயாரிக்கிறோம். மேலும், விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களையும் செய்கிறோம்.'' என்றபடியே டூல் ரூமுக்குள் அழைத்துச் சென்றார்கள்.

''இது, வுட் பிளாக்ஸ் (Wood Blocks). விமானத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். அதைத் தயாரிக்கத்தான் இந்த பிளாக்ஸ். 'ஹைலம்’ என்ற கட்டையில் பிளாக்ஸைத் தயாரிப்பாங்க. விமானத்தின் பல பகுதிகள் தரமான அலுமினியத் தகடுகளாலும், சில பகுதிகளை ஃபைபர் மற்றும் ஸ்டீல் பொருட்களாலும் செய்வோம். பெரிய அலுமினிய ஷீட்டுகளை கட் பண்ணி, இந்த வுட் பிளாக்ஸ் மேலே வைத்து, தேவையான வடிவத்தில் உருவாக்குவோம். ஒரு விமானத்தின் அத்தனை பாகங்களையும் உருவாக்கும் வகையில், எல்லா வடிவ பிளாக்குகளும் இங்கே இருக்கும்'' என்று விளக்கினார் ராஜசேகர்.

அலுமினிய பிளேட்டுகளை தேவைக்கு ஏற்ப, கடினம் மற்றும் மென்மையாக்கும் 'ஷீட் மெட்டல் ஷாப்’, உதிரிப் பாகத் தயாரிப்புக்கு ஏற்ப வெட்டும் வகையில் பிளேட்டுகளை அளவிடும் 'மெஷர்மென்ட் ஷாப்’, உருவாக்கப்பட்ட பாகங்களை ரசாயனச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தும் 'ப்ராஸஸ் ஷாப்’ ஆகிய இடங்களையும் சுற்றிக்காட்டி விளக்கினர்.

அடுத்து, பெயின்ட் ஷாப் பகுதி. ''விமானத்தின் பாகங்களுக்கு 'பாலியூரித்தின்’ எனப்படும் விலை மதிப்புமிக்க பெயின்ட் பயன்படுத்தப்படுகிறது. இதை ஒருமுறை பெயின்டிங் பண்ணினால், பத்து வருடங்கள் கடந்தும் மங்காமல் இருக்கும்'' என்றார் அங்கே இருந்த ஊழியர்.

பெயின்ட் ஷாப்பைப் பார்த்து முடித்ததும், ''அடுத்து எல்லோரும் அசெம்பிளிக்குப் போகப்போறோம்'' என்றார் ராஜசேகர்.

''அங்கிள், நீங்களாச்சும் பெரியவரு. எங்களுக்கு இன்னும் அசெம்பிளிக்குப் போகிற வயசு வரலையே'' என்று கடித்தான் புவனேஸ்வரன்.

அங்கே, 'இஸ்ரோ’வுக்குத் தேவையான விண்கலன் உதிரிப் பாகங்கள் தயாராகிக்கொண்டு இருந்தன. ''இங்கே நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்தக் கலன்கள் எல்லாமே தன்னுள் இருக்கும் எரிபொருளை எரித்து முடித்தவுடன், தானும் எரிந்து துகள்களாக மாறிவிடும். இந்த அசெம்பிளி பகுதியில் மிக நுட்பமாகவும், கவனமாகவும் பணியை மேற்கொள்கிறோம். சிறு தவறுகூட பல கோடி ரூபாய் பொருட்களை வீணாக்கிவிடும். பொதுவாக, இதே அரங்கத்தில் தனித்தனி பாகங்களை ஒன்றிணைத்து, விமானத்தையும் அசெம்பிள் செய்வோம். நீங்க வந்த நேரம், இஸ்ரோவுக்குத் தேவையான பாகங்கள் தயாரிப்பைப் பார்க்கிறீங்க...'' என்றார் சிவக்குமார்.

இறுதியாக, குட்டீஸ் ஆவலுடன் எதிர்பார்த்த விமானத்தைப் பற்றி விளக்க, ஒரு சிறிய ரக விமானத்தின் அருகே அழைத்துச் சென்ற சிவக்குமார், ''இங்கே நீங்க பார்க்கிறது 'றி68சி’ என்ற சிறிய ரக விமானம். இதில் 6 நபர்கள், கொஞ்சம் லக்கேஜோடு பயணம் பண்ண முடியும். இந்த விமானத்தின் விலை மதிப்பு, தோராயமாக 160 கோடி ரூபாய். இதன் இரண்டு இறக்கைகளிலும் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதான்விமானத்தைப் பறக்கவைக் குது. இந்த விமானத்தின் எஞ்ஜின் தவிர, அனைத்துப் பாகங்களும் இங்கேயே தயார் செய்யப்பட்டது. இதற்கான எரிபொருளும் இரண்டு இறக்கைகளில் உள்ள டேங்கில் நிரப்புவாங்க. இந்த ஃபிளைட், தொடர்ந்து 4 மணி நேரம் பறக்கும். அதோடு, ஒரு மணி நேரத்துக்கு 200 நாட்டிக்கல் மைல் தூரம் செல்லும்'' என்றார் ராஜசேகர்.

''ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.8 கிலோ மீட்டர்தானே அங்கிள்'' என்று கேட்டாள் ஒரு சுட்டி.

''கரெக்ட்! அடுத்து கவனிங்க. இது விமானத்தின் முதுகுப் பகுதி. நீங்க பார்க்கிற இந்த ஏரியல்கள்தான் பைலட்டுக்கும் கன்ட்ரோல் ரூமுக்குமான தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்குது. இந்த விமானத்தின் வால் பகுதியில் எழுதி இருக்கும் 'க்ஷிஜி- ஜிலிஞி’ என்ற எழுத்துகளை கவனிங்க. இதில் இருக்கும் 'க்ஷிஜி என்பது, நம் இந்திய விமானங்கள் அனைத்திலும் கட்டாயமாக இருக்கும். அதாவது, இந்திய விமானங்கள் என்பதை அறிவிக்கும் குறியீடுதான் இந்த 'க்ஷிஜி’(க்ஷிவீநீtஷீக்ஷீ ஜிணீஸீரீஷீ). அதைத் தொடர்ந்து வரும் எழுத்துகளை, அந்த விமானத்தை செயல்படுத்தும் நிறுவன விருப்பத்துக்கு ஏற்ப எழுதிக்கொள்ளலாம்.'' என்றார் சிவக்குமார்.

ராஜசேகர் தொடர்ந்தார் ''இப்போ, விமானத்தின் முன் பக்கத்துக்குப் போவோம். முகப்புப் பகுதியின் உட்புறத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 'வெதர் ரேடார்’னு ஒரு கருவி பொருத்தப்பட்டு இருக்கு. ஒவ்வொரு விமானத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான விலை மதிப்புக்கொண்ட ரேடார் பொருத்துவாங்க. இதுதான் வான் பாதையின் ஈரப்பதம், ஆபத்துத் தன்மை பற்றி கணிச்சு, விமானி இருக்கும் 'காக்பிட்’ அறையில் வண்ண விளக்குகள் மூலம் உஷார்ப்படுத்தும். எரிகிற லைட்களின் வண்ணத்துக்கு ஏற்றபடி, விமானிகள் செயல்படுவாங்க'' என்றார்.

விமான நிலைய ஓடுபாதையை ஒட்டி, நீண்ட பை வடிவிலான துணி ஒன்று கொடி போல் கம்பத்தில் கட்டப்பட்டு இருக்கும். ''இதை 'ஷ்வீஸீபீ sஷீநீளீs’ என்பார்கள். விமானங்கள் இறங்கும்போது காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில்தான் லேண்டிங் செய்யணும். அப்படின்னா காற்று எந்த திசையில் வீசுதுனு பைலட்டுக்குத் தெரியணும் இல்லையா? அதை தெரியப் படுத்துறதுதான் இந்த விண்ட் சாக்ஸ்களின் வேலை. இதன் உதவியுடன் எந்த குழப்பமும் இல்லாமல் விமானிகள் ஃப்ளைட்டை தரையில் இறக்கிடு வாங்க. நம்ம வளாகத்துக்குள் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் அவ்வளவுதான்'' என்று என்று முடித்தார்கள்.

சுட்டிகள் முகங்களில் மகிழ்ச்சி. ''இனி எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கும்போது பக்கத்தில் யார் இருக்காங்களோ, அவங்ககிட்டே இங்கே நாங்க தெரிஞ்சுகிட்ட விஷயங்களைச் சொல்லி, காலரை தூக்கிவிட்டுப்போம்'' என்றார்கள் பெருமையுடன்.