Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

##~##

''டியர் ஜீபா... பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்கிறார்களே... ஏன், படையால் அந்தப் பாம்பைக் கொல்ல முடியாதா?''

-ச.சிவா, தொகரப்பள்ளி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பாம்பிடம் இருக்கும் விஷத்தின் காரணமாகவே இப்படி ஒரு பழமொழி. பழங்காலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதர்களும் சரி, அடுத்த நாட்டுடன் போர் புரிவதற்காக செல்லும் வீராதி வீரர்களும் சரி, எதிரே சிங்கம் வந்தால்கூட, தைரியமாக மோதிப் பார்த்துவிடுவார்கள். காரணம், சிங்கம் தாக்கினாலும் பச்சிலை மருந்து போட்டு, காயங்களை ஆற்றிக்கொள்ளலாம். ஆனால், பாம்பு விஷயத்தில் அது தீண்டினாலே இறப்பு ஏற்பட்டதைக் கண்டு மிரண்டார்கள். அதனாலேயே பாம்பைக் கண்டு படையே நடுங்கியது. உலகில் உள்ள 3,000 வகையான பாம்புகளில், சிலவற்றுக்கே விஷம் உண்டு என்பதை பிற்காலத்தில் கண்டுபிடித்தார்கள். பாம்புகளிடம் நாமாக வம்புக்குப் போய் சீண்டாத வரையில், அதுவும் நம்மைத் தீண்டாது''

''ஹலோ ஜீபா... தயிர் குளிர்ச்சியானதுதானே? சூடானது என்றும், சாப்பிடக் கூடாது என்றும் என் பாட்டி சொல்றாங்களே...''

     -ஏ.சரத்குமார், மயிலாடுதுறை.

''உன் பாட்டி சரியாகத்தான் சொல்லி இருக்காங்க சரத்குமார். தயிர் சாப்பிடும்போது 'ஜில்’ என்று இருக்கலாம். ஆனால், சாப்பிட்ட பிறகு, உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அத்துடன் மலச் சிக்கல், பித்தம், காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கடுமையான கோடை தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் வம்பு பிடித்த தயிர் அண்ணனுடன் சகவாசம் வைத்துக்கொள்வதைவிட, அவனது தம்பியான மோர் உடன் நட்பு பாராட்டலாம். அவன், உடல் சூட்டை நீக்குவதுடன், 'விஷீக்ஷீமீ, விஷீக்ஷீமீ’ என சுண்டி இழுப்பான்''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிற நிலக்கரி எப்படித் தயாராகிறது?''

-எஸ். ரஞ்சனி, சேலம்.

''இயற்கை ஏற்படுத்திய எத்தனையோ பொருள் களில் நிலக்கரியும் ஒன்று. மரக்கட்டைகளை எரிக்கும்போது, அது கரியாக மாறுவதைப் பார்த்து இருப்பாய். அப்படி, நாம் வாழும் பூமியில், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த பிரமாண்டமான காடுகள், பெரிய பெரிய மரங்கள் காலப்போக்கில் பூமிக்குள் உள்ள வெப்பநிலையாலும் அழுத்தத்தாலும் கருகி, இறுகிவிட்டன. அதைத்தான் இப்போது நிலக்கரியாக வெட்டி எடுத்துப் பயன்படுத்துகிறோம். நிலக்கரியில் பல வகை உண்டு. அதில் ஒன்று, 60 சதவிகிதம் நீர் அடங்கிய பழுப்பு நிலக்கரி. இந்த நீரை நீக்கிவிட்டு, மின்சாரத்துக்கான எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்''  

''ஹாய் ஜீபா... கிராமங்களே இல்லாத நாடு ஏதாவது இருக்கிறதா?''

-எஸ். சாய் சுப்ரியா, சென்னை-112

''சிங்கப்பூரை அப்படிச் சொல்லலாம். 699 சதுர கி. மீ. பரப்பளவு உடைய இந்த நாட்டில், 5.1 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடு என்பதால், இங்கே வசிக்கும் மக்கள் அனைவருமே நகரங்களில் வசிக்கிறார்கள். பயிர்கள் விளையும் இடங்களைக்கூட கிராமம் என்று சொல்ல முடியாது. நகரத்தில் இருந்து ஒதுங்கிய பகுதி என்று  சொல்லலாம். சிங்கப்பூருக்கு அடுத்து பஹ்ரைன் நாட்டிலும் 93 சதவிகிதம் நகரப் பகுதியாக இருக்கிறது. தொழில் துறைகளின் வளர்ச்சியால், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் சில நாடுகள், இப்படிக் கிராமங்கள் இல்லாத நாடுகளாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் சொல் கிறார்கள். நல்லவேளையாக, இந்தியா அப்படி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். நாம் எல்லோரும் வருடத்திற்கு ஒரு முறையாவது கிராமப் பகுதிகளுக்குக்கு சென்று, சில நாட்கள் இருக்க வேண்டும். அந்த அனுபவமே அற்புதமாக இருக்கும். கிராமமே இல்லாத நாடுகளுக்கு அந்த அதிஷ்டம் இல்லை, பாவம்!''  

மை டியர் ஜீபா !

''ஏன் ஜீபா, தேனீக்கள் மட்டும்தான் மலரில் இருந்து தேனைக் குடிக்குமா?''

-கா.விஜயபிரசாந்த், தஞ்சாவூர்

''அப்படி இல்லை விஜய். தேன் சிட்டு போன்ற சில பறவைகளும், சில வண்டுகளும் தேனை மலரில் இருந்து உறிஞ்சிக் குடிக்கும். அவ்வளவு ஏன்... ஜமைக்கா நாட்டில் இருக்கும் ஒரு வகை வெளவால்கள், மலருக்கு மேலாக அந்தரத்தில் மிதந்தவாறு, தனது நீளமான நாக்கை செலுத்தி, தேனை உறிஞ்சிக் குடிக்கும். மற்றவை எல்லாம் தேனை பசிக்காகக் குடித்தோமா, கிளம்பினோமா என்று இருக்கும்போது, தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரித்துவைக்கின்றன.''

''டியர் ஜீபா... ஐஸ்லாந்து நாட்டில், குழாயில் வெந்நீர் சப்ளை செய்யப்படுகிறது என்று கேள்விப்பட்டேன், அது நிஜமா?''

   - கு.ஜெயகிருஷ்ணன், கோவை.

''உண்மைதான்! ஐஸ்லாந்து நாட்டில் வெந்நீர் ஊற்றுகள் அதிகம். இந்த வெந்நீர் ஊற்றுகளில் குழாய் இணைப்பை செலுத்தி, வீடுகளுக்கு சூடான குடிநீரை ஐஸ்லாந்து அரசு சப்ளை செய்கிறது. 'அந்த மாதிரி நமக்கும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், ஹீட்டர் போட வேண்டிய அவசியமே இருக்காதே’ என்று நினைக் கிறாயா? கவலையேபடாதே ஜெயகிருஷ்ணன். வருகிற ஏப்ரல், மே மாதங்களில் உச்சி வெயில் நேரத்தில் உன் வீட்டுக் குழாயைத் திறந்து பார். ஹீட்டர் போடாமலே சூடான நீர் கிடைக்கும்''  

மை டியர் ஜீபா !