Published:Updated:

என் 10

அதிரடி நாயகன்...ஜாக்கி சான்ரா.ராபின் மார்லர்

##~##

10 மாதங்களுக்குப் பதிலாக, 12 மாதங்கள் அம்மாவின் வயிற்றில் இருந்த ஜாக்கி சான், பிறக்கும்போது 5 கிலோ வரை இருந்தார். பிரசவம் பார்த்த டாக்டர், ''எங்களுக்கு ஃபீஸ் வேண்டாம், இந்தக் குழந்தையைக்  குடுத்துடுங்க'' என்றார். அந்த அளவுக்கு கொள்ளை அழகுடன் இருந்தார் ஜாக்கி சான்.

அன்பு மகனுக்கு 'கோங் சாங் சான்’ எனப் பெயரிட்டார் சார்லஸ். 'பாவ் பாவ்’ என்றும் செல்லமாக அழைப்பார்கள். இதற்கு பீரங்கிக் குண்டு என்று பெயர். சூ சங் சான் என்ற சகோதரனும் தாய் சான் (Tai chan) என்ற சகோதரியும் உண்டு. மிகவும் குறும்புப் பிள்ளையாக வளர்ந்தார் ஜாக்கி சான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

  ஏழ்மை காரணமாகவும் சரியாகப் படிப்பு வராததாலும், சிறு வயதிலேயே நாடகப் பள்ளியில் சேர்ந்தார் ஜாக்கி. அங்கேயே தங்கி இருந்து, ஆடல் பாடல், ஜூடோ, குங்ஃபூ எனக் கற்றுக்கொண்டார். அப்பா சார்லஸுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்க, அவர் மனைவியுடன் ஹாங்காங்கை விட்டுக் கிளம்பிவிட்டார்.

  நாடகப் பள்ளியில் படிப்பை முடித்த சான், சிறு சிறு வேடங்களில் நடித்தார். மூன்று வேளை சூப் குடிக்க முடியாத அளவுக்குத்தான் இருந்தது வருமானம். அதனால், பெற்றோரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். சானின் பெயரை, ஆஸ்திரேலிய மக்கள் உச்சரிக்க கஷ்டப்பட்டனர்.  'ஜாக்கி’ என்று விளையாட்டாக அழைத்தனர். அதுவே, ஜாக்கி சானாக மாறியது.

என் 10

மீண்டும் ஹாங்காங் திரும்பிய ஜாக்கியின் திறமையைப் பார்த்து, அதிரடி நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், புரூஸ் லீக்குப் பிறகு, அவர் இடத்தைப் பிடிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் எல்லா நடிகர்களுமே குழம்பினர். அந்த சமயத்தில் உதித்தது  ஆக்ஷன் காமெடி. இந்த ஃபார்முலாவில் உருவான முதல் படமான 'Snake in the Eagle Shadow’, அதனை அடுத்த 'Drunken Master’ செம ஹிட். நடிகராக மட்டுமே இருந்த ஜாக்கி, பிறகு டைரக்டராகவும் ஆனார்.

1983-ல் ஃபெங்ஜியோ லின் எனும் தைவான் நடிகையை மணந்த ஜாக்கிக்கு ஒரே ஒரு பையன். பெயர் ஜெய்ஸி சான்.

என் 10

பள்ளிக்குச் சென்று படிக்காத ஜாக்கி சானுக்கு, 7 மொழிகள் பேசத் தெரியும். சிறு வயதில் தன்னை வளர்த்த ரெட்கிராஸ் நிறுவனத்துக்கு கைமாறு செய்யும் வகையில் பன்மடங்காக உதவுகிறார். காடு வளர்ப்பு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிருக வதைத் தடுப்பு என சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் ஆர்வம் உண்டு.

உலக அளவில் எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும்  இன்சூரன்ஸ் கொடுக்க முன்வராத ஒரே நடிகர் ஜாக்கி சான். கை, கால், முதுகு, கண், காது, மூக்கு என இவர் உடம்பில் அடிபடாத இடமே இல்லை.

2011 செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க் உலக வர்த்தக மையத்தில், ஜாக்கி சான் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தார். ஆனால், ஏதோ காரணத்தினால் தள்ளிப்போனது. அன்றுதான் உலகமே உறைந்துபோன தீவிரவாதத் தாக்குதலால், அந்த வர்த்தகக் கட்டடம் தரைமட்டமானது.

    ஜாக்கி சானின் நீண்ட காலக் கனவு... சீனாவில் தற்காப்புக் கலைகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்குவது. 'தி கராத்தே கிட்’ படத்தில் வருவது போன்று, தனக்குத் தெரிந்த கலைகளை மற்றவர்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறார்.