Published:Updated:

சுட்டி மனசு !

தொகுப்பு: இரா.முத்துநாகு, நா.இள.அறவாழி, வீ.கே.ரமேஷ், மா.நந்தினி படங்கள்: க.தனசேகரன், ஆ.நந்தகுமார், வீ.சக்தி அருணகிரி

வைஷ்ணா, 4-ஆம் வகுப்பு, அல்லி நகரம்.

சுட்டி மனசு !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நான் நல்லாப் படிக்கிற பொண்ணுதான். அதே நேரம், எனக்கு வீட்டு வேலை செய்யவும் ரொம்பப் பிடிக்கும். அதனால, பள்ளிக்குப் போறதுக்கு முன்னாடியும் போயிட்டு வந்ததும் எந்த வேலை சொன்னாலும் செய்வேன். எங்க அம்மாச்சிக்கு செல்லமா தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தெரியலை. எப்பப் பார்த்தாலும் சிடுசிடுன்னு திட்டிக்கிட்டேதான் வேலை சொல்லும். எனக்கு அது பிடிக்காது. நானும் கோச்சுக்கிட்டே எதையாச்சும் செய்வேன். அதனால, என்னைய சோம்பேறினு சொல்றாங்க. இப்படி எப்பவாச்சும் சொன்னா விட்டுறலாம். தினமும் சொல்றதுனால வெறுப்பா இருக்கு. இப்படி, சின்னக் குழந்தைக்கிட்டே எரிஞ்சு விழுந்துக்கிட்டே வேலை சொன்னா, அவ மனசு நோகுமேன்னு அவங்க எப்பதான் புரிஞ்சிக்குவாங்களோ தெரியலை அங்கிள்''

நேதாஜி, 4-ஆம் வகுப்பு, சேலம்.

சுட்டி மனசு !

''ஸ்கூல் போறதுக்காக தினமும் காலை நேரத்தில் அம்மா என்னை சீக்கிரம் எழுந்து பல் துலக்கச் சொல்றதும், குளிக்கச் சொல்றதும் எனக்குப் பிடிக்காத விஷயம். ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டே இருப்பதும், கிரிக்கெட் விளையாடுறதும்தான் பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸ்கூட பேசினாத்தானே ஜிகே எல்லாம் கத்துக்க முடியும்? ஆனா, ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ்கூட பேசக் கூடாது, அமைதியா இருன்னு மிஸ் சொல்றாங்க. மீறிப் பேசிட்டோம்னா, தலையில குரூப் லீடர் கொட்டு வைப்பான். அப்புறம், எக்ஸாம் வெச்சு பேப்பர் திருத்திக் கொடுக்கும்போது, எல்லார் முன்னாடியும் திட்டவும், அடிக்கவும் செய்றாங்க. அது ரொம்பக் கஷ்டமா இருக்கு அங்கிள். ஸ்கூல்லயும் படி படிங்கிறாங்க, வீட்டுக்கு வந்ததும், காபி குடிக்கிறோமா... உடனே புத்தகத்தை எடு, படி படின்னு விரட்ட ஆரம்பிச்சுடுறாங்க. இதனால, பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ்கூட சரியா விளையாட முடியலை. வாரத்துல ரெண்டு நாள் பி.டி க்ளாஸ். அதுல விளையாண்டாதான் உண்டு. ம்...இப்படித்தான் தினமும் ஓடிட்டு இருக்கு!''

சாரதா சுவாதி, 1-ஆம் வகுப்பு, மயிலாடுதுறை.

சுட்டி மனசு !

''தினமும் ஸ்கூலுக்கு என்னை அம்மாதான் கொண்டுபோய் விடுறாங்க. சாயந்தரமும் அம்மாதான் வந்து கூட்டிட்டுப் போறாங்க. அதனால, என் ஃப்ரெண்டு அக்ஷயாகூட பேசவே முடியலே. மதியம் சாப்பிடுறதுக்குதான் நேரம் பத்த மாட்டேங்குது. சீக்கிரம் சீக்கிரம்னு மிஸ் விரட்டிக்கிட்டே இருப்பாங்க. ஸ்கூல் விட்டு வந்தா, அம்மா டைரியப் பாத்துட்டு படிக்கச் சொல்றாங்க. ஹோம் வொர்க் முடியிற வரைக்கும் அம்மாவைப் பார்த்தாலே பயமா இருக்கும். ஹோம் வொர்க் முடிச்சுட்டு, டி.வி. பார்க்கலாம்னு நினைப்பேன். ஆனா, சுட்டி டி.வி. வைக்காதேன்னு தாத்தா திட்டுவாங்க. அப்புறம், என்னோடு விளையாடுறதுக்கு யாரும் கிடையாது. அதனால, என்னோட பொம்மைப் பாப்பாகூட விளையாடிட்டுத் தூங்கிடுவேன். வீட்டுல நடக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட, அம்மா என்னை ஸ்கூலில் விடறதுக்கு வரும்போது, மிஸ்ஸுகிட்டே மாட்டி விட்டுருவாங்க. மிஸ் அதை க்ளாஸ்ல கேக்கும்போது, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சிரிப்பாங்க. அப்பா வெளிநாட்ல இருந்து வந்ததும், எனக்காக ஒரு குட்டி டி.வி. கேட்கலாம்னு இருக்கேன். இருந்தாலும், கிளாஸ் மிஸ், ஹோம் வொர்க் எல்லாத்தையும் நெனைச்சாதான் பயமா இருக்கு.

கோபால கிருஷ்ணன், 6-ஆம் வகுப்பு, புதுச்சேரி.

சுட்டி மனசு !

''என்னோட அப்பா வெளிநாட்டுல வேலை செய்றதால, என்னை வெளியே கூட்டிட்டுப் போக ஆள் இல்லை. அம்மாவா என்னிக்காச்சும் ஒரு நாள் ஆசைப்பட்டு,  வெளியே கூட்டிட்டுப் போனாதான் உண்டு. ஸ்கூல்ல மீட்டிங் வைக்கிறப்போ மத்த பசங்களோட அப்பா, அம்மாகூட வரும்போது, நான் மட்டும் அப்பா இல்லாமப் போறதுக்கு மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கும். அப்பா எப்பவாவது வருஷத்துக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவார். அவர் கிளம்பும்போது, அவரை விடாம இறுக்கிப் பிடிச்சுக்கலாம்னு தோணும். ஒவ்வொரு முறையும் ஏம்மா அப்பா வெளிநாட்டுல வேலை செய்றார்னு அம்மாகிட்டே கேட்பேன். அதுக்கு, 'நாம நல்லா இருக்கணும்னுதான் அப்பா வெளிநாட்டுல வேலை செய்றார்’னு சொல்லி சமாளிச்சுடுவாங்க. அப்புறம் நானும் என் தம்பியும் ஜாலியா சண்டை போட்டுக்குவோம். நான் அவனை அடிக்கவே மாட்டேன். ஆனா, அவன் என் வயித்துலே 'கும்மு கும்முனு’ குத்துவான். எங்க சண்டையைப் பார்த்துட்டு, பஞ்சாயத்துப் பண்ண உடனே வந்துருவாங்க எங்க பாட்டி. எல்லாத்துக்கும் காரணமான என் தம்பியை விட்டுட்டு என்னைத் திட்டுவாங்க, பாட்டிகூட அம்மாவும் சேர்ந்துக்கிட்டு, செம டோஸ் விடுவாங்க. இதை எல்லாம் பார்த்துட்டு தம்பி நக்கலாச் சிரிப்பான். தம்பிதானேன்னு நானும் விட்டுருவேன்.''