சுரேகா வீட்டில் மாயா டீச்சரும் மற்ற சுட்டிகளும் கூடி இருந்தார்கள். சுரேகா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். அவளது இடது காலின் நடுப் பாதத்தில் கட்டு போட்டு இருந்தாள்.

''செருப்பு இல்லாமல் வெளியே போகக் கூடாதுனு பல முறை சொல்லிட்டேன். கேட்டால்தானே'' என்றார் சுரேகாவின் அம்மா.

''எதிர் வீடுதானேனு போனேன்...'' என்று தயக்கத்துடன் சொன்னாள் சுரேகா.

எதிர் வீட்டில் இருக்கும் தோழியைப் பார்ப்பதற்காக நேற்று சுரேகா சென்றபோது, சாலையில் இருந்த கண்ணாடித் துண்டைக் கவனிக்கவில்லை. அந்தப் பொல்லாத கண்ணாடித் துண்டு, நொடிப் பொழுதில் சுரேகாவின் பிஞ்சுப் பாதத்தைத் துளைத்து விட்டது. அதன் பிறகு நடந்ததுதான் கூத்து. அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டுவார்களே என்று பயந்துவிட்டாள் சுரேகா. அதனால், சுரேகாவின் தோழியே, குண்டூசியால் கண்ணாடித் துண்டை எடுக்க முற்பட்டாள். அது இன்னும் உள்ளே போய்விட்டது. பிறகு, அம்மாவுக்கு விஷயம் தெரிந்து, டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

''இந்த மாதிரியான நேரத்தில் பெரியவங்ககிட்டே விஷயத்தை மறைக்கிறது ரொம்பத் தப்பு சுரேகா. இனிமே அப்படிச் செய்யாதே'' என்றார் மாயா டீச்சர்.

''முள்ளை முள்ளால் எடுக்கணும்னு பெரியவங்க சொன்னதை டிரை பண்ணினாப் போல இருக்கு. அப்படிப் பார்த்தாலும் கண்ணாடித் துண்டை எடுக்க, இன்னொரு கண்ணாடித் துண்டைத்தானே பயன்படுத்தணும். ஏன் குண்டூசியை யூஸ் பண்ணீங்க?'' என்று கிண்டலடித்தான் பரத்.

''சும்மா இருடா'' என்று அவனை அதட்டிய தீபா, ''ஏன் டீச்சர் நிலக்கரி, தங்கம், பளிங்குக் கற்கள் மாதிரி கண்ணாடியும் இயற்கையில் கிடைக்குதா?'' என்று கேட்டாள்.

''இல்லை தீபா, மனிதன் கண்டுபிடித்த அற்புதமான விஷயங்களில் கண்ணாடியும் ஒண்ணு.'' என்றார் டீச்சர்.

''ஆமா... ஆமா! கண்ணாடியைக் கண்டுபிடிக்காமல் இருந்தால், நாகரிகம் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது. பவுடர், லிப்ஸ்டிக், மற்ற மேக்கப் சாதனங்களும் தோன்றி இருக்காது. அப்படித்தானே டீச்சர்?'' என்றான் பிரதீப்.

''அது மட்டுமா? விஞ்ஞானமும் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது பிரதீப். கொஞ்சம் யோசிச்சுப் பார். லேப்ல யூஸ் பண்ற பல உபகரணங்கள் கண்ணாடியால் ஆனதுதான். அமிலங் களால் கண்ணாடியை எதுவும் செய்ய முடியாது. கரையான்கள், பூச்சிகளால் அரிக்க முடியாது. மின்சாரம் தாக்காது. இவ்வளவு சிறப்புப் பொருந்திய கண்ணாடிக்கான மூலப் பொருட்கள் எளிமையானது. சுத்தமான மணல், சுண்ணாம்புக் கல், சோடா உப்பு அவ்வளவுதான்.'' என்றார் டீச்சர்.

''இதை வெச்சு கண்ணாடியை எப்படித் தயாரிக்கிறாங்க?'' என்று பரத் கேட்க, ''வாங்க நேரிலே போய்ப் பார்க்கலாம்.'' என்றார் மாயா டீச்சர்.

''மறக்காம செருப்பைப் போட்டுக்க சுரேகா'' என்று கிண்டலடித்தான் பிரதீப்.

மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு பறக்க ஆரம்பித்தது. ''கண்ணாடித் தொழிற்சாலைக்கு அப்புறம் போகலாம். இப்போ, நாம காலங்களைத் தாண்டி போகப் போறோம். கண்ணாடி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், 4,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் கண்ணாடியைப் பயன்படுத்தி இருக்காங்க'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் எகிப்திய கல்லறை ஒன்றில் இறங்கியது. அங்கே... தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மண்ணில் இருந்து கவனமாகத் தோண்டி எடுத்த கண்ணாடி ஆபரணங் களை வரிசையாக வைத்து, ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தார்கள். தாயத்துகள், மணிகள், வேறு வகையான ஆபரணங்கள் கண்ணாடியால் இருந்தன.

''அடேங்கப்பா, அப்பவே இவ்வளவு நுணுக்கமாகச் செய்து இருக்காங்களே'' என்று வியந்தாள் சுரேகா.

''நாகரிகத்தின் எல்லா விஷயங்களிலும் எகிப்தியர்கள் முன்னோடிகளாக இருந்தாங்க. 4,000 வருஷங்களுக்கு முன்னாடியே அவங்க கண்ணாடியைப் பயன்படுத்தினாலும், 10-ஆம் நூற்றாண்டு வரையில் அதன் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது. அதைத் தயார் செய்யும் முறையும் ரகசியமாக இருந்தது. ஒரு சில குடும்பங்கள் மட்டுமே அதைச் செய்தன. எந்த அளவுக்கு ரகசியமாக இருந்ததுனு தெரிஞ்சுக்க நாம வெனீஸ் நகரத்துக்குப் போகலாம்'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம், வெனீஸ் நகரின் ஓர் அரசவையில் வந்து இறங்கியது. ''இப்போ நாம வந்து இருப்பது கி.பி. 1547-ஆம் வருடத்துக்கு. இங்கே ஒரு முக்கியமான அரசு ஆணை நிறைவேறப் போகுது. எல்லோரும் கவனிங்க...'' என்றார் டீச்சர்.

அரசு ஆணையை ஒருவர் வாசித்தார் ''இதனால் வெனீஸ் அரசு அறிவிப்பது... கண்ணாடியைச் செய்யும் தொழில் தெரிந்த வெனீஸ் நாட்டுக் குடிமகன்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் சென்று, இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது. அப்படி யாராவது வெளிநாட்டில் இருந்தால், உடனடியாக நாடு திரும்பிவிட வேண்டும். அவ்வாறு திரும்பாத பட்சத்தில் இங்கே இருக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களைச் சிறை பிடிப்போம். அப்படியும் வெளிநாட்டில் இருப்பவர்கள் திரும்பாவிட்டால், அவர்களைக் கொல்லவும் அரசுக்கு உரிமை உண்டு. அப்படி அவர்களைக் கொன்ற பிறகே, சிறையில் இருக்கும் உறவினரை விடுதலை செய்வோம்'' என்று வாசித்தார்.

''ஐயோ! பயங்கரமான உத்தரவாக இருக்கே'' என்று பதறினாள் தீபா.

''இதில் இருந்தே அப்போது கண்ணாடிக்கு இருந்த மவுசு தெரியுது இல்லியா? அப்போது கண்ணாடி என்பது ரொம்பவே விலை உயர்ந்த, ஆடம்பரமான பொருளாக இருந்தது. மன்னர்கள், பெரிய செல்வந் தர்கள் மட்டும்தான் பயன்படுத் தினாங்க. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்குக் கண்ணாடித் தொழில் பரவியது. 18-ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியில் இந்தத் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்தது. அங்கேதான் சாண்ட்லியர் மாதிரியான அழகிய பொருட் களைச் செய்ய ஆரம்பிச்சாங்க'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், இதை எல்லாம் பார்க்கப் பார்க்க, கண்ணாடியை எப்படித் தயாரிக்கிறாங்க என்பதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வம் அதிகம் ஆகுது.'' என்றான் பிரதீப்.

சிரித்த மாயா டீச்சர், ''கண்ணாடிக்கான மூலப் பொருட்கள் மாதிரியே கண்ணாடி செய்வதும் எளிமையானதுதான். சுண்ணாம்புக் கல், மணல், சோடா கலவையை நன்கு சூடேற்ற வேண்டும். அப்போது கிடைக்கும் பாகை, ஊது குழாய் மூலம் ஊதுவார்கள். அது பலூன் போல உப்பி விரியும். அப்போது நமக்குத் தேவையான வடிவத்தில் மாற்றுவார்கள்'' என்றார்.

மந்திரக் கம்பளம் அவர்களை நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு கண்ணாடித் தொழிற்சாலைக்கு அழைத்து வந்தது. அது, குளிர்பானத்துக்கான பாட்டில்கள் செய்கிற இடம். அங்கே ஒரு பெரிய இயந்திரத்தில் கொட்டிய சுண்ணாம்புக் கலவை, கன்டெய்னர் பெல்ட் வழியாக கொதிகலனுக்குச் சென்றுகொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் அவ்வாறு சென்று சூடான கலவை, நெருப்பின் செந்நிறத்தில் பாகாக உருகி வந்தது. அவை, அங்கே இருந்த தானியங்கிக் குழாய்களில் சென்று விழுந்தது. பாட்டில் வடிவில் நூற்றுக்கணக்கில் இருந்த அந்தக் குழாய்கள் வழியாக பாகு வெளியே வந்தபோது, பாட்டில் வடிவம் இருந்தது. அது, இன்னொரு பகுதிக்குச் சென்றபோது, சிறிய குழாய்கள் மூலம் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

''இப்படி குளிர்ந்த நீரைப் பீய்ச்சி அடிக்கும் போது, பாட்டில் வடிவில் இருக்கும் பாகு அப்படியே இறுகி, அந்த வடிவத்திலேயே தங்கிவிடும். மின்சார விளக்குகள் உட்பட எல்லாவற்றையும் இப்படித்தான் செய்கிறார்கள். தட்டையான கண்ணாடிகள் செய்வதற்கு, பாகை இரண்டு பெரிய உருளைகளுக்கு இடையே செலுத்துவார்கள். பொருளின் உபயோகத்துக்கு ஏற்ப குளிர்விக்கும் முறை வித்தியாசப்படும். முகம் பார்க்கும் கண்ணாடி, பல்புகள், ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்த லேசான கண்ணாடியே போதும். ஆனால், கார்கள், பெரிய பெரிய கட்டடங்களில் பதிக்கும் ஜன்னல்களுக்கான கண்ணாடிகள் வலிமையாக இருக்க வேண்டும். அதற்காக, சுண்ணாம்புக் கலவையுடன் பிளாஸ்டிக் துகள்களையும் சேர்ப்பார்கள். நீர் பீய்ச்சி அடிப்பதை இன்னும் வேகமாகச் செய்வார்கள். கலவையில் இருந்து வெளியே வருகிற பாகை, எவ்வளவு விரைவாக குளிர்விக்கிறோமோ, அதற்கு ஏற்ப திடத்தன்மை கண்ணாடிக்குக் கிடைக்கும். கார் அல்லது வேறு வாகனங்களில் இருக்கும் கண்ணாடிகள், விரிசல் ஏற்பட்டாலும் எளிதில் உடையாமல் தாக்குப்பிடிக்கக் காரணம், அதில் பசை போல் கலந்து இருக்கும் பிளாஸ்டிக் கலவைதான்'' என்றார் டீச்சர்.

''இனிமே, கண்ணாடி முன்னாடி நிற்கிறப்ப எல்லாம் அதுக்குப் பின்னாடி இருக்கிற கதைகள் ஞாபகத்துக்கு வரும்'' என்றான் பிரதீப்.

மந்திரக் கம்பளம் அவர்களை சுரேகாவின் வீட்டில் இறக்கியது. சமையல் அறையில் இருந்து வெளிப்பட்ட சுரேகாவின் அம்மா, ''நான் மொட்டை மாடிக்குப் போய், துணிகளை எடுத்துட்டு வர்றதுக்குள்ளே எல்லோரும் எங்கே போய்ட்டீங்க?'' என்று கேட்டார்.

''எதிர் வீட்டுக்குத்தான் ஆன்ட்டி. தன்னோட காலில் கண்ணாடித் துண்டு எப்படிக் குத்திச்சுனு சுரேகா எங்களுக்கு டெமோ செய்து காட்டினா'' என்று பரத் சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.