கிராமத்து விளையாட்டுகளில்... கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சம் இருக்காது. விளையாட்டுக் கருவிகளுக்குச் செலவே இல்லாமல், வாழ்க்கையோடு கலந்த பொருள்களாகவே இருக்கும். இதனால், விஞ்ஞான வளர்ச்சி நம்மைப் பல மடங்கு இழுத்துச் சென்றாலும், கிராமத்து விளையாட்டுகள் நிலைத்து நிற்கின்றன. அதில் ஒன்றுதான் குதிரை சேப்பான்.

அணி பிரித்தல்

குறிப்பாக, ஆண்கள் மட்டுமே இதை விளையாடுவர். சில இடங்களில்... பெண் பிள்ளைகளும் விளையாடுவது உண்டு. முதலில், அணித் தலைவர்கள் எதிர் எதிராக நின்று உத்தி பிரிப்பார்கள். உத்தி என்றால், தங்கள் அணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தல். இருவர் இருவராக தோளில் கை போட்டுக்கொண்டு தூரத்தில் சென்று, தங்களுக்குள் மல்லிகை, ரோஜா எனவும், பறவைகள் பெயர்களையும் வைத்துக்கொள்வார்கள். பிறகு, அணித் தலைவர்கள் முன்பாக வந்து, தாங்கள் வைத்துக்கொண்ட பெயர்களில் எது வேண்டும் எனக் கேட்பார்கள். அணித் தலைவர்கள், தங்களுக்குப் பிடித்த பெயரைச் சொல்ல, அந்தப் பெயருக்கு உரியவர், அந்த அணியில் நிற்பார். இப்படி, இரட்டை இலக்கத்தில் வரும்படியாக அணியைப் பிரிப்பார்கள்.

சேப்பாங்கல்

சேப்பாங்கல் விளையாடத் தேவையான கருவி, சப்பட்டைக் கல். இதற்கு, கெட்டியாக இருக்கும் கல்லாகப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். இந்தக் கல்லை வீசினால், சுழன்றபடி சென்று, தரையில் பட்டு, மண்ணை செதுக்கியவாறு தாவிக் குதித்து விழ வேண்டும். இதற்காக, கல்லின் கீழ்ப் பாகத்தை வழுவழுப்பாக்க, பாறையில் தேய்ப்பார்கள்.

ஆட்டம் ஆரம்பம்

ஆட்டத்தைத் துவக்க, சிறிய கல் அல்லது ஓட்டை எடுத்து, அதில் ஒரு பக்கத்தில் எச்சிலைத் துப்பி, 'எச்சில் வேணுமா? ஓடு வேணுமா?’ எனக் கேட்பார்கள். அணித் தலைவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல, ஓடு கீழே விழும்போது எந்தப் பகுதி மேல் நோக்கி இருக்கிறதோ... அந்த அணி ஆட்டத்தைத் துவக்கும். எதிர் அணிக்காரர் தனது சேப்பானை, வட்டமாக கிழிக்கப்பட்ட கோட்டில் வைப்பார். அவரது அணியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் குதிரை போல் குனிந்து நிற்க, அவர்கள் மீது குதிரை ஏறிக்கொள்வார்கள். அதில், குதிரை ஏறிய அணித் தலைவர், கோட்டில் இருந்து மூன்று மீட்டர் தூரம் சென்று, சேப்பானைக் குறிபார்த்து வீசி எறிவார். சுழன்று வரும் சேப்பான், கோட்டுக்குள் உள்ள சேப்பான் மீது பட்டால், ஆட்டம் தொடரும். இல்லை என்றால், எதிர் அணிக்காரர் ஆட்டத்தைத் துவக்குவார். அப்போது, முந்தைய ஆட்கள் குதிரையாக மாற, எதிர் அணியினர் சவாரி செய்வார்கள். கோட்டுக்குள் இருக்கும் சேப்பான் மீது குறி தவறாமல் செதுக்கி, சேப்பான் மீது பட்டால், குதிரைகள் சோகமாக நிற்கும்.

அதன் பின்பு, கோட்டுக்குள் இருக்கும் சேப்பானை அதற்கு உரியவர் கையில் எடுத்து, தனது திறன் உள்ள அளவுக்கு செதுக்குவது போல் வீசுவார். அந்த சேப்பானை ஆட்டக்காரர் குறி பார்த்து மீண்டும் எறிவார். சேப்பான் போகும் பக்கம் எல்லாம் இந்தக் குதிரைகள் போய்க்கொண்டே இருக்கும். தொடர்ந்து மூன்று முறை சேப்பானைக் குறி பார்த்து எறிந்துவிட்டால், அந்த அணியினர் கல்யாணம் முடிந்ததாக அர்த்தம்.

இப்படிக் கல்யாணம் முடிந்ததை அறிவிக்க, குதிரைகள் ஊர் மந்தை வரை சவாரியாகப் போய் வர வேண்டும். கல்யாண ஆட்டம் முடிந்த பின்பு, எதிர் அணிக்காரர் சேப்பான் வீசுவார்.

விளையாட்டின்போது குதிரையாக இருப்பவர்கள் காதைத் திருகி, குதிரைபோல் கனைக்கவைப்பது, எதிர் அணிக்காரர் பக்கத்தில் வந்தால், குதிரை உதைப்பது போன்ற கேலிகளும் கிண்டல்களும் நடக்கும்.