மழலை மாறாத முகங்கள், எபி ரிச்சர்ட் மற்றும் நிரிஷ் ராஜ். திருச்சி, மவுன்ட் லிட்டேரா பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் இந்தச் சுட்டிகள் செய்து இருப்பதோ சபாஷ் சாதனை.

சமீபத்தில், விருதுநகரில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அசத்தி இருக்கிறார்கள். எபி மூன்று தங்கம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், நிரிஷ் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றார்கள்.

மூன்று வயதிலேயே நீச்சல் கற்றுக்கொண்ட இவர்கள், எங்கு நீச்சல் போட்டி நடந்தாலும் கலந்துகொண்டு, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிடுவார்களாம். ''ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எங்கள் லட்சியம்'' என்கிறார்கள் உறுதியாக.

-ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வெங்கடராஜ்

பட்டத்து ராணி !

ஸ்விஸ் ஓப்பனில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்ததன் மூலம், இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ஓர் ஆண்டு காலத் தாகம் தணிந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு கலந்துகொண்ட போட்டிகளில் கால் இறுதி, அரை இறுதிச் சுற்றுகளிலேயே அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறியவருக்கு இது வெல்கம் பேக்!

உலகத் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இவர், 3-ஆம் இடத்தில் உள்ள சீனாவின் 'ஷிக்சியான் வாங்’கை வென்றதுதான் இந்தப் போட்டியில், குறிப்பிடத்தக்கது.

தனது எழுச்சி பற்றி விவரித்த சாய்னா, 'தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்ததால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். அடிக்கடி காயத்தாலும் பாதிக்கப்பட்டேன். 'நீங்கள் மிகுந்த நெருக்கடியைச் சுமந்துகொண்டு இருப்பதால், சிறப்பாக விளையாட முடியவில்லை. 'எவ்விதப் பதற்றமும் இல்லாமல் போட்டியை ரசித்து விளையாடுங்கள். அதுவே வெற்றிக்கு வித்திடும்’ என்று பயிற்சியாளர் கோபிசந்த் கூறினார்.அதை அப்படியே கடைபிடித்தேன். அதுதான் வெற்றிக்குக் காரணம்'' என்கிறார்.

-சரா

சச்சின் 100

ஒரு வருடத்துக்கும் மேலாக, எல்லாரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த அந்தச் சாதனை நடந்தேறிவிட்டது. உலக அளவில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதங்களில் சதம் அடித்த ஒரே வீரர் என்கிற பெருமை சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்து இருக்கிறது.

வங்க தேசத்துடன் நடந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்தப் பெருமையை 'கேட்ச்’ பிடித்து இருக்கிறார் சச்சின். 100-வது சதத்தை அடித்து முடித்ததும், சச்சின் ஆடுகளத்தில் எந்த ஆரவாரமும் செய்யவில்லை. அமைதியாக ஹெல்மெட்டைக் கழற்றினார். வானைப் பார்த்து தன் தந்தைக்கும் கடவுளுக்கும் நன்றி சொன்னார். அடுத்து தன்னுடைய ஹெல்மெட்டில் இருந்த தேசியக் கொடியைக் காட்டி, 'நான் எப்போதும் நாட்டுக்காத்தான் விளையாடுகிறேன்’ என்பதை விமர்சகர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

சச்சின் தனது 99-வது சதத்தை கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அடித்தார். பிறகு, 100-வது சதத்தைப் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்ததும், ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளானதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார். சச்சின் ஒய்வு பெற்றே ஆக வேண்டும் என்றெல்லாம்கூட குரல்கள் எழுந்தன.

வங்க தேசத்துடன் நடந்த போட்டியில் 96 ரன்களைக் கடந்ததும், வீசப்பட்ட ஒவ்வொரு டாட் பாலுக்கும் மைதானத்தில் இருந்த வங்க தேச ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அவ்வளவும் முடிந்து, சச்சின் அந்த அற்புத ரன்னை எடுத்தபோது கிரிக்கெட் வரலாறு மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. எப்படி இது சாத்தியமானது?

''எனக்கு இந்த ஆட்டத்தின் மீதான காதல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பிசாசுவைப் போல வெறித்தனமாக பயிற்சி செய்யுங்கள். ஆனால், தேவதையைப் போல நளினமாக ஆடுங்கள்'' என்பார் சச்சின். மேலும், 'ஒருவருக்குத் திறமை இருந்தால் மட்டும் போதாது. மனக் கட்டுப்பாடும் அவசியம்’ என்று அடிக்கடி சொல்வார்.

அதை மீண்டும் நிரூபித்துக் காட்டினார் சச்சின்!

-பூ.கொ.சரவணன்