Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ?

இரா.நடராசன் தி.விஜய், லாவண்யா

எப்படி வந்தேன் தெரியுமா ?

இரா.நடராசன் தி.விஜய், லாவண்யா

Published:Updated:
##~##

நண்பர்களே... நான்தான் மேப் பேசுறேன்! வரலாறு பரீட்சைக்கு வரலாறு மேப், புவியியல் பரீட்சைக்குக் கண்டங்கள், கடல்கள், உலகத்  தலைநகரங்கள் எனப் புவி அமைப்பு மேப்.  குடிமையியல் என்றால், மக்கள் தொகை மேப்... இப்படி நான் பலவகை. வரலாறு புவியியல் மேப் என்று மட்டும் அல்லாமல், ஸ்கை மேப் என்று சொல்லப்படுகிற வானத்தின் நட்சத்திரங்கள் பற்றிய வரை படத்தைக்கூட இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

மனிதன் முதன்முதலில் உலகை ஒரு மேப்பாக வரைந்தது, ஆறாம் நூற்றாண்டில்தான். இன்று

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி வந்தேன் தெரியுமா ?

வகுப்பறைச் சுவரில் மாட்டப்பட்டு, வண்ணத்தில் மிளிரும் நான், எப்படி உருவாகி உங்களிடம் வருகிறேன் என்று பார்க்கலாமா?

உன் வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு எவ்வளவு தூரம்? எங்கேத் திரும்ப வேண்டும்? என்ன லேண்ட் மார்க்? இப்படி வீடு முதல் பள்ளி வரை ஒரு பேப்பரில் கோடுகளை நீ வரைந்தால்,  அதுவும் ஒரு மேப்தான்.

நம் இந்திய வரைபடமாக என்னை உருவாக்க வேண்டுமானால், முதலில் இடங்களுக்கு இடையிலான தூரத்தை, எந்த ஸ்கேலில் வைத்து அளக்கப்போகி றோம் என்பது முக்கியம். என்னை உருவாக்கும் பேப்பரின் பரப்பை, இந்திய தேசப் பரப்பாக விகிதக் கணக்கீட்டுக்கு உட்படுத்துதலே எனது பிறப்பின் ரகசியம். 50,000 கிலோ மீட்டர் என்பது காகிதத்தில் 1 செ.மீட்ட ராக மாறினால், அந்த விகிதம் 1:50,000 எனக் குறிக்கப்படுகிறது.

என்னை உருவாக்கும் அறிவியலுக்கு 'கார்ட்டோ கிராஃபி’ என்று பெயர். உலக வரைபடம், இயற்கை வளங்கள், போக்குவரத்து வரைபடம், விவசாய உற்பத்தி வரைபடம் எனப் பல வகைத் தகவல்களுக்காக தனித்தனியே உருவாகி, உங்களிடம் நான் வருகிறேன்.

தொழிற்சாலையில் முதலில் பல வகை அளவீடுகளில் அச்சுகளைக் கணினிப் படங்களில் இருந்து செய்கிறார்கள். இந்த இடத்துக்கு கிராஃப்டிங் என்று பெயர். காகித அளவுப் படம், அட்லஸ், புத்தகமாக உருவாகும் படங்கள், சுவற்றில் மாட்ட வேண்டிய படங்கள் எனத் தனித்தனியே அச்சுகள் தயாராகின்றன.

அவற்றின் ஒரு பிரதியைப் பிரதான வரைபட வல்லுனர்கள் சிலர் மெய்ப்பு திருத்துவார்கள். சிறு தவறுகள், கோடுகள் துல்லியமாகத் திருத்தப்படும். இந்தப் பகுதி புரூஃப் செக்ஷன். உதாரணமாக, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 1000 கி.மீ தூரம் என்றால், அதைக் குறிக்க அவ்வளவு பெரிய மேப் வரைய முடியாது. அதை, 1 செ.மீ ஆக மாற்றிக் குறிப்பார்கள். இதைத்தான் மேப் அளவை (மேப் ஸ்கேல்)  1 செமீ: 1000 கி.மீ எனக் குறிப்பிடுகிறார்கள். எல்லா ஊர்களுக்கும் இந்த அளவே பின்பற்றப்படும். இதைச் சரிபார்க்க தனி வல்லுனர்கள் உண்டு.

எப்படி வந்தேன் தெரியுமா ?

இப்படி தவறைத் திருத்தி, இறுதி நகல் எடுத்ததை மீண்டும் சரிபார்த்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். நான் லட்சக்கணக்கில் தயாராகும் அந்தப் பகுதி 'பிரின்டிங் செக்ஷன்.’

பொதுவாக, மூன்று அடிக்கு ஐந்து அடி எனத் தயாராகும் நான், ஆறுக்குப் பத்து என அகலம் அதிகமாகவும் சமயத்தில் தயாராவேன். உலக அளவில் ஓர் இடத்தின் புவியியல் அமைப்பை எல்லா வரை படத்திலும் ஒரே மாதிரி குறிப்பதை - குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) என்று அழைக்கிறார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

வெறும் வண்ணக் காகிதமாய்த் தயாராகும் என்னை,  துணி பைண்டு முறையாலோ அல்லது பாலித்தீன் லேமினேஷன் முறையிலோ மவுன்ட் செய்து தரும் பகுதி மவுன்ட் செக்ஷன். இதே பகுதியில் என்னை மாட்டி வைத்துப் பயன்படுத்த, எனக்குக் காதுகளும் செய்கிறார்கள். தேர்வில் பயன்படும் மேப்கள், வெறும் காகிதத்தால் ஆனவை.

ஆரம்பத்தில் கல்லில் தொடங்கிய எனது பிறப்பு, இன்று செயற்கைக் கோள் வரைபடம் (சாட்டிலைட் மேப்பிங்) வரை வந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism