மல்யுத்த மங்கை!

லண்டன் ஒலிம்பிக், பெண்கள் மல்யுத்தப் போட்டிக்கு, இந்திய வீராங்கனை கீதாகுமாரி தகுதி பெற்று இருக்கிறார். இதன் மூலம், 'ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்’ என்ற பெருமையைப் பெற்று இருக்கிறார்.

கஜகஸ்தானில் நடந்த ஆசியத் தகுதிச் சுற்று தொடரில், 55 கிலோ எடைப் பிரிவில் கீதாகுமாரி கலந்துகொண்டார். இறுதிச் சுற்றில் தென் கொரியாவின் ஜி இயுன் உம் என்ற வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஹரியானாவின் பிவானி என்ற கிராமத்தைச் சேர்ந்த 23 வயது கீதா, 'ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது லட்சியம் மட்டும் அல்ல, என்னுடைய தந்தையின் நீண்ட நாள் கனவும்கூட. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக நிச்சயம் பதக்கம் வெல்வேன்' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

கீதாவின் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருப்பவர், அவருடைய தந்தை மகாவீர் சிங். மல்யுத்தப் பயிற்சியாளரான இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையைத் துறந்துவிட்டு மகளுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். தந்தைக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார் கீதாகுமாரி.

பயஸின் பலே அரைசதம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்ற மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் செக். குடியரசின் ரடேக் ஸ்டெஃபனாக் ஜோடி, சாம்பியன் பட்டத்தை வென்றது.

தர வரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ள இந்த இந்த ஜோடி, தமது அரை இறுதிச் சுற்றில் நம்பர்1 இடத்தில் இருந்த அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களை வென்று, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, தர நிலையில் 2-ஆம் இடத்தை வகித்த பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்ன்யி மற்றும் கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியைப் போராடி வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

இது, இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வென்றுள்ள 50-வது சாம்பியன் பட்டம். இதன் மூலம், ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் 50 பட்டங்கள் வென்ற 24-வது வீரர் என்ற பெருமையை பயஸ் பெற்று உள்ளார். 'எனது ஜோடி ஆட்டக்காரர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமானது’ என்கிறார் நன்றியுடன்.

இந்தியாவின் மற்றொரு வீரரான மகேஷ் பூபதி, அண்மையில் தனது 50-வது சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். ஹைலைட்ஸ்!

ஐ.பி.எல். சீசன் 5 மூலம் பிரபலம் ஆகி இருக்கும் புதுமுக வீரர்களில், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கூப்பர் முன்னிலை வகிக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடும் அவர், முதல் இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஐ.பி.எல்.-இல் பங்கேற்றதன் மூலம் தனது மூன்று ஆண்டு காலக் கனவு நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கூப்பர், இப்போதைக்கு டாக் ஆஃப் தி பவுலர்!

ஒரு போட்டியில் படுதோல்வி, மறு ஆட்டத்தில் மகத்தான வெற்றி என ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் மாறி மாறி அளித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸியின் வருகைக்காக காத்திருக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் நட்சத்திர வீரரான அவர், அணிக்கு திரும்பியதும் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கேப்டன் டோனியுடன் சேர்ந்து சென்னை ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக் கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்படாத டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. மும்பையில் பிரபல விமர்சகர்களின் கணிப்பின்படி, இந்த அணிகளுக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதாம்.

ஐ.பி.எல். சீசன் 5-ல் அதிக ரன்கள் குவித்து, 'ஆரஞ்ச் கேப்' சூட்டிக்கொள்ளும் முனைப்பில் இருப்பவர்கள் ரஹானே, கம்பீர், உத்தப்பா, டிவில்லியர்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர்.