Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ?

பென்சில்இரா.நடராசன்செ.பாலநாக அபிஷேக்

##~##

என்ன நண்பர்களே விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்கிறீர்களா? விடுமுறையில் பல பொழுதுபோக்குகளில் ஒன்றாக... விதவிதமாகப் படம் வரைய ஆரம்பித்து, என்னை அடிக்கடி கூர் உடைத்து, மறுபடியும் சீவி...

நான் யார் என்று புரிந்து இருக்குமே... உங்கள் பென்சில் பேசுகிறேன். கார்பன் பென்சில், கலர் பென்சில், பட்டைப் பென்சில், முக்கோணப் பென்சில், இழைப் பென்சில், இஞ்ஜினியர் பென்சில் எனப் பல வகைகளிலும் இருக்கும் நான், எப்படித் தயாராகி வருகிறேன் தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் உடம்பின் மேல் பகுதி பெரும்பாலும் மரத்தால் உருவாக்கப்படுகிறது.  இது தவிர, ரப்பர், சிந்தடிக், பிளாஸ்டிக் என்ற வகைகளிலும் கிடைக்கிறேன். என்னை நீங்கள் தாளில் எழுதுவதற்குக் காரணமாக இருக்கும் லெட் எனப்படும் உள் பகுதி, களிமண் மற்றும் கரித்தூளால் ஆனது.

என்னைத் தயாரிக்கும் தொழிற்சாலையில்  பல பகுதிகள் உண்டு. உள் பகுதியைத் தயாரிக்கும் இடத்தில் கரியுடன் வெள்ளைக் களிமண்ணைச் சேர்த்து, ஓர் இயந்திரத்தில் போடுவார்கள். இரண்டும் ஒன்றோடு ஒன்று நன்றாகக் கலந்து, மிருதுவான தூளாக மாறும். அதனுடன் தண்ணீரைச் சேர்த்து, ஒரு பெரிய இரும்புக் குழாய்க்குள் செலுத்துவார்கள். அங்கே அது சூட்டினால் கெட்டிப்படுத் தப்பட்டு, பெரிய உருளையான லெட் எனப்படும் கரித்துண்டு வெளியே வரும். அந்தப் பெரிய லெட்-ஐ இன்னொரு இரும்புக் குழாய்க்குள் செலுத்துவார்கள். இதன் மறு பகுதியில் சிறிய துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தின் வழியாக, நீங்கள் பயன்படுத்தும் பென்சில்கள் அளவுக்குச் சிறிய குச்சிகளாக வரும். அதனைத் தண்ணீரால் சுத்தப்படுத்திப் பிசிறுகளை நீக்குவார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

இன்னோர் இடத்தில் எனது மேல் பாகம் தயாராகிக்கொண்டு இருக்கும். அங்கே மரப் பலகைகளைச்  சதுரம் சதுரமாக ஓர் இயந்திரம் வெட்டும். பின்னர், சிலேட் எனும் பகுதிக்கு என்னை அனுப்புவார்கள். அங்கே பலகைகள் சில்லுகளாக வெட்டப்படும். ஒவ்வோர் சில்லிலும் குறைந்தது 10 பென்சில்கள் இருக்கும். லெட்-ஐப் பொருத்துவதற்கு ஏதுவான குழிக் கோடுகளையும் தானியங்கி இயந்திரம் உருவாக்கும். இந்தச் சில்லுப் பலகைகள் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு பெல்ட்டுகளில் நகர்ந்துகொண்டு இருக்கும். ஏற்கெனவே தயாராக இருக்கும் லெட், கீழே நகரும் சில்லுகள் மீது பதியும். மேலே இருந்து வருகிற காலியான மரச் சில்லுகள், கீழ்ப் பகுதி சில்லுகளுடன் ஒட்டிக்கொள்ளும். இந்த வேலைகள் பாண்டிங் (Bonding)செக்ஷனில் நடந்து முடியும்.

இப்படி ஒட்டப்பட்ட பலகை, கட்டிங் பகுதியில் தனித்தனி பென்சில்களாக வெட்டி எடுக்கப்படும். பிறகு, எட்ஜிங் பகுதியில் வழவழப்பாகவும் அறுங்கோண வடிவத்திலும், பிடித்து எழுதுவதற்கு வசதியாக நான் தயாராகிறேன்.  

எப்படி வந்தேன் தெரியுமா ?

அடுத்து, கலரிங் செக்ஷன். இங்கே என் உடம்புக்கு மேக்கப் போடப்படுகிறது. வண்ணமும், தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரும் பதிக்கப்பட்டு, உங்களிடம் வருகிறேன். வண்ணப் பென்சில்களில் கரித்தூளுடன் வண்ண மெழுகையும் சேர்க்கிறார்கள்.

என் உள் பகுதியின் கலவையே, எனக்கான தரம் மற்றும் வகைகளைத் தீர்மானிக்கிறது. களிமண் அதிகமாகவும் கரித்தூள் குறைவாகவும் கலந்தால், அதை '2B’ என்பார்கள். இது சற்று மங்கலாக எழுதும். கரித்தூள் அதிகமாகவும் களிமண் குறைவாகவும் இருந்தால் '‘2H’’ என்பார்கள். இது மிக கருப்பாக எழுதும். களிமண், கரித்தூள் சம அளவில் கலந்து செய்யப்படும் பென்சில்கள் நடுத்தர வகையைச் சேர்ந்தவை. இது 'HB’ என்பார்கள். நீங்கள் அதிகமாக உபயோகிப்பது இந்த வகையைத்தான்.

நான் எப்படி தயாராகி வருகிறேன் என்பது புரிந்து இருக்குமே. தனக்கு ஒரு பள்ளி மாணவி பரிசாகக் கொடுத்த குட்டிப் பென்சிலைக் கடைசி வரை பத்திரமாக வைத்திருந்தாராம் காந்தி தாத்தா. அதனால், என்னைத் தேவை இல்லாமல் உடைத்து வீணாக்காமல் பத்திரமாக வைச்சுப்பீங்களா சுட்டீஸ்?