Published:Updated:

நியூஸ் போர்ட்ஸ் !

சரா

எழுச்சி நாயகர்கள் ஏழு பேர்!

 ##~##

ஒலிம்பிக் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில், குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் ஏழு பேர் தகுதி பெற்று இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லண்டன் ஒலிம்பிக்ஸ்குக்குத் தகுதி பெற்றுள்ளவர்களில், விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ எடைப் பிரிவு), ஷிவ தாபா (56 கிலோ), விஜேந்தர் சிங் (75 கிலோ) மற்றும் தேவேந்திர சிங் (49 கிலோ) ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இந்த நால்வரில் விஜேந்திர சிங், பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். 18 வயது ஷிவ தபா, லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இளம் இந்தியர்.

நியூஸ் போர்ட்ஸ் !

இவர்களைத் தவிர, ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் தங்கம் வென்ற சுமித் சங்வான் (81 கிலோ), கடந்த உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் கால் இறுதிக்கு முன்னேறிய ஜெய் பகவான் (60 கிலோ) மற்றும் மனோஜ் குமார் (64 கிலோ) ஆகியோரும் லண்டனில் பதக்கம் வெல்ல, கடும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

நம்பிக்கைத் தமிழன்!

லண்டன் ஒலிம்பிக்கில் மும்முறைத் தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) பிரிவில் பங்கேற்க தமிழக வீரர் ரஞ்சித் மஹேஸ்வரி தகுதிபெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 16-வது ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 16.85 மீட்டர் தூரத்தைத் தாண்டி, தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கிலும் இடம்பிடித்துவிட்டார்.

நியூஸ் போர்ட்ஸ் !

தனது கடுமையான முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று மகிழ்ச்சியுடன் கூறும் ரஞ்சித், ''மேலும் தீவிரப் பயிற்சி செய்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்'' என்கிறார்.

ரஹானே ராஜ்ஜியம் !

ஐ.பி.எல். சீசன் 5 மூலமாக இந்தியா அடையாளம் கண்டுள்ள 'வலுவான துவக்க வீரர்’ என்று ரஹானாவை விமர்சகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பலம் சேர்க்கும் இவர், ஒவ்வொரு போட்டியிலும் அனுபவமும் நிபுணத்துவமும் மிக்கவராக விளையாடுகிறார்.

நியூஸ் போர்ட்ஸ் !

30 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தைத் தக்கவைத்த ரஹானே, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 23 வயது நிரம்பிய இவர், அண்மையில்தான் இந்திய அணியில் இடம்பெற்றார். இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 340 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் வெளிப்படுத்திவரும் ஆட்ட நேர்த்தியால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைப்பது நிச்சயம்!