பிரீமியம் ஸ்டோரி
 ##~##

இந்த மாதம் ஆறாம் தேதி சூரியனை வெள்ளி கிரகம் கடக்கிறது. இது 125 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்  அரிய நிகழ்வாகும். வானில் சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று நெருங்கியும் விலகியும் விளையாடுகின்றன. உருவம் பெரிதாக இருந்து ஒன்றை ஒன்று முழுமையாக மறைத்தால் அது கிரகணம். மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால் அதனை

வெள்ளி விளையாட்டு !

மறைப்பு என்கிறோம். வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகணம் போலத்தான். எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே வெள்ளி மறைப்பில் பூமி மற்றும் சூரியனுக்கு இடையில் வெள்ளி வரும். வெள்ளி சின்னக் கரும்புள்ளியாக சூரியனின் குறுக்காக ஓர் ஓரத்தில் நகர்வதைப் பார்க்க முடியும்.

வானவியலாளர் கெப்ளர்தான், 1631-ல் வெள்ளி மறைப்பு நிகழும் என்று முதன் முதல் கணித்தவர்.

மனித இனம் இதுவரை பார்த்த வெள்ளி நிகழ்வுப் பதிவு என்பது தொலை நோக்கி கண்டுபிடித்த பின்னர்தான். இதுவரை 7 வெள்ளி மறைப்புகளையே மனிதன் பார்த்திருக்கிறான். இனி அடுத்த வெள்ளி மறைப்பு 2117-ல் தான் நிகழும். இப்போது நிகழவுள்ள வெள்ளி மறைப்பு சுமார் 6 மணி நேரம், 40 நிமிடங்கள் நீடிக்கும். அதிகாலை 3.40 மணிக்குத் தொடங்கும் வெள்ளி மறைப்பு, காலை 10.21 வரை நீடிக்கும். இந்தியாவில் வெள்ளி மறைப்பு நமக்கு சூரிய உதயத்தின் போதிருந்தே தெரியும். சூரியன் உதிக்கும் போது வெள்ளி நகர்ந்து சூரியனின் நடுப்பகுதிக்கு வந்திருக்கும். இதனை நீங்கள் காலை 10.20 மணி வரை பார்க்கலாம். வெள்ளி மறைப்பை வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்து.  

வெள்ளி விளையாட்டு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு