Published:Updated:

நியூ ஸ்போர்ட்ஸ் !

ஐ.பி.எல். ஹைலைட்ஸ் !சரா

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஐ.பி.எல். சீஸன் 5-ல் ஆதிக்கம் செலுத்திய பேட்ஸ்மேன்களில் பெங்களூரின் கிறிஸ் கெய்ல் முதன்மை வகிக்கிறார். அதிக ரன்கள் (733), அதிக சிக்ஸர்கள் (59) மற்றும் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் (128*) என அதிரடி மன்னனாக வலம்வந்தார்.

விமர்சகர்களை ஈர்த்தவர்களில் ஷிகார் தவான் முக்கியமானவர். டெக்கானுக்காக 15 போட்டிகளில் 569 ரன்கள் குவித்தார்.

மிக நீண்ட சிக்ஸர் (112 மீட்டர்) விளாசிய பெருமைக்குச் சொந்தக்காரர் சென்னை கேப்டன் டோனி.

வேகமும் விவேகமும் கலந்த ஆட்டத்தால் 560 ரன்களைக் குவித்த ராஜஸ்தானின் ரஹானே, இந்திய அணியின் வலுவான ஆட்டக்காரராக வலம்வருவார் என எதிர்பார்க்கலாம்.

அதிவேக அரை சதம் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர் டோனி. 20 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டார்.

பேட்ஸ்மேன்கள் மிரளும் வகையில் சுழற்பந்துகளை வீசி, கொல்கத்தா இளம் பந்துவீச்சாளர் சுனில் நரேன் அசத்தினார்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

தொடர் தோல்விகளைச் சந்தித்த டெக்கான், தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி, சென்னைக்கு 'ப்ளே ஆஃப்’ வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததுதான் சுவரஸ்ய க்ளைமாக்ஸ்.

ஆரம்பத்தில் இருந்தே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டெல்லி அணியின் வேகப் புயல் மோர்னி மோர்கல் முன்னிலை வகித்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட் வசம் இருக்கிறது 'அதிக டாட் பால் சந்தித்தவர்’ என்ற சிறப்பு.

ஐ.பி.எல். பற்றி, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவுசெய்த குறும்பதிவுகள் 65 லட்சத்தைத் தாண்டியது.

டெல்லி அணியின் ஷபாஸ் நதீம் தனது சுழற்பந்து வீச்சுத் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். விரைவில் தேசிய அணியில் அவரை எதிர்பார்க்கலாம்.

நியூ ஸ்போர்ட்ஸ் !

சேவாக், கம்பீர்... அணியை வழிநடத்துவது மட்டும் அல்லாமல், தங்களது தனிப்பட்ட ஆட்டத் திறனாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த வீரர்கள்.  

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபிப்பதற்கு இந்த சீசனைக் களமாகப் பயன்படுத்தி இருக்கிறார் டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்.

பெங்களூரின் கெய்ல் - கோலியிடம்தான் அதிகபட்ச ரன்கள் (215) குவித்த பார்ட்னர்ஷிப் சாதனை உள்ளது.

அதிவேகப் பந்துவீச்சு (154.40கிமீ) வீசிய பெருமைக்குச் சொந்தக்காரர் டெக்கானின் ஸ்டெயின்.

இறுதிப் போட்டிக்குக் கொல்கத்தா அணி முதல் முறையாகத் தகுதி பெற்றது இந்த சீசனில்தான்.

கைடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவை இருந்தபோது, சென்னை யின் பிராவோ சிக்ஸர் அடித்ததே பெஸ்ட் ஃபினிஷிங்.

பைரிவந்தர் அவானா, மந்தீப் சிங், ஷபாஸ் நதீம் ஆகியோர் இம்முறை ஐபிஎல் மூலம் கண்டெடுக்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு