''ஹாய் ஜீபா... 18 வயசுக்கு மேலும் நமக்குப் பற்கள் முளைக்கும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா?''

-எம்.பாலாஜி, நம்பியூர்

''ஆமாம் பாலாஜி. குழந்தை பிறந்ததில் இருந்து இரண்டரை அல்லது மூன்று வயது வரை 20 பற்கள் முளைக்கும். பால் பற்கள் எனப்படும் இவை, குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாக விழத் தொடங்கிப் புதிய பற்கள் முளைக்கும். இவையே நிலையாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நமது வாயும் வாய்த் தாடையும் விரிவடைவதால், அந்த இடங்களில் மேலும் புதிய பற்கள் முளைக்கின்றன. 18 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் கடைவாயில் கடைசியாக நான்கு பற்கள் தோன்றுகின்றன. இந்தக் கடைவாய்ப் பற்களுக்கு 'ஞானப் பற்கள்’ என்றும் 'அறிவுப் பற்கள்’ என்றும் பெயர் இருக்கிறது. இது ஓர் அழகுக்காக வைத்த பெயர்களே. மற்றபடி அறிவுக்கும் இந்தப் பற்களுக்கும் சம்பந்தம் இல்லை. வேண்டும் என்றால், ஒரு ஜாலிக்காக நண்பனிடம் 'டேய் எனக்கு அறிவு வந்துடுச்சு. உனக்கு வந்துடுச்சா?’ என்று கேட்டுக் கலாய்க்கலாம்''

''ஹலோ ஜீபா... நேரத்தைக் குறிப்பிடும்போது 5’ o clock, 7’ o clock; என்கிறார்களே... இதில் o என்பது எதைக் குறிக்கிறது?''

-ர.அபிஷேக், கோவை

''ரொம்ப சிம்பிள் அபி... நமக்கு எல்லாமே சீக்கிரமாக முடிய வேண்டும். அதற்காக எல்லாவற்றையும் சுருக்கிவிடுகிறோம். (இப்போ உன் பெயரைச் சுருக்கின மாதிரி) அப்படித்தான் ஷீயீ tலீமீ நீறீஷீநீளீ (கடிகாரத்தில் உள்ளபடி) என்பதில் இருக்கும் நான்கு எழுத்துகளைச் சுருக்கிவிட்டு, ஷீ மட்டும் போட்டு நேரத்தைக் குறிப்பிடுகிறார்கள்''

''விதி விதி என்கிறார்களே... அப்படின்னா என்ன ஜீபா?''

-லோ.சித்ரா, கிருஷ்ணகிரி

''எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு எனச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி செய்தால், சரியாக அமையும். இந்த வழிமுறையின் இன்னொரு பெயர்தான் விதி(முறை). விளையாட்டில் தொடங்கி தினசரி வாழ்க்கை வரை எல்லாவற்றிலும் இந்த விதிமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு, ஒரு சாலையைக் கடக்க வேண்டும் என்றால், க்ரீன் சிக்னல் கிடைத்த பிறகே கடக்க வேண்டும். மாறாக, அவசரமாகச் சென்றால் விபத்து நடக்கும். அங்கே 'விதி அவனைப் பலி வாங்கிடுச்சு’ என்று சொல்வதன் அர்த்தம்... 'சரியான வழிமுறையைப் பின்பற்றவில்லை. அதனுடைய பலனே இது’ என்பதுதான். ஆனால், மனிதர்களில் பலர் இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். தான் கவனக்குறைவாகக் கல்லில் இடித்துக்கொண்டு, 'கல் இடிச்சுடுச்சு’ என்பார்களே, அப்படி விதியின் மேல் பழி போடுகிறார்கள். விதி என்றால் என்ன என்று நீ சரியாகப் புரிஞ்சுக்கிட்டியா சித்ரா?''

''மை டியர் ஜீபா... தார் மூலம் சாலைகள் போடலாம் என்பதைக் கண்டுபிடிச்சது யார்?''

-டி. வேதிகா, மயிலாடுதுறை.

''க்ரூட் ஆயிலில் இருந்து எடுக்கிற கசடுதான் இந்தத் தார். குளிர்ந்த நிலையில் கெட்டியாக இருக்கும். சுமார் 230 டிகிரி சென்டிகிரேடுக்கு சூடாக்கினால் கருமையான திரவமாக மாறும். இதனுடன் சரளைக் கற்கள், மணல் போன்றவற்றைச் சேர்த்து சாலையை உருவாக்கியவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களே. 1845-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் தார் சாலை போடப்பட்டது. ஆனால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மொகஞ்சதாரோ கட்டடங்களில் சிமென்ட் போல் தாரைப் பயன்படுத்தி பூச்சு வேலை செய்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்''

''நம் வியர்வையில் நாற்றம் வீசுவது ஏன் ஜீபா?''

-செ.இளந்தென்றல், சேத்பட்.

''நம் வியர்வையில் இருப்பது 99 சதவிகிதம் நீர்தான். மீதி ஒரு சதவிகிதமே சோடியம் குளோரைடு போன்ற பொருட்கள். நீருக்கு எந்த மணமும் கிடையாது. உடம்புக்குள் இருந்து வியர்வை வெளியாகி, நம் வெளிப்புறத் தோல் மீது படிகிறது. அப்போது தோல் மீது இருக்கும் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளுடன் உப்பு கலப்பதால் நாற்றம் உண்டாகிறது. அதனால், வெளிப்புறத் தோலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை குளிப்பது. முகம், கை மற்றும் கால்களை அடிக்கடி தண்ணீரால் கழுவுவதன் முலம் நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.''