வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இருக்கிறார், திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சுகுணன்.

''நான் 5-ஆம் வகுப்புப் படிக்கும்போது பள்ளியில் நடந்த விளையாட்டுக்கான திறனாய்வுப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அதில் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து எந்த விளையாட்டில் தகுதி உடையவர்னு தேர்வு செய்வாங்க. என்னை அத்லெடிக்ல செலெக்ட் செய்தாங்க. என் அண்ணன் சூரஜ், ஸ்டேட் லெவல் கபடி பிளேயர். 'உனக்கு வாலிபால்தான் செட் ஆகும்’னு என் அண்ணன் சொன்னான். எங்க வாலிபால் ஸ்பெஷல் கோச் ஜவஹலால் சார்கிட்ட சேர்ந்தேன். முதலில் மாநில அளவில் செலக்ட் ஆனேன். ஜவஹர்லால் சார் என்னை மாவட்ட கோச் முனுசாமி சாரிடம் அறிமுகப்படுத்தினார். இந்த வருடம் தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்டோர் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்று தேசிய வீரர் ஆனது சந்தோஷமாக இருக்கு'' என்கிறார் சுகுணன்.

பள்ளி முதல்வர் ஜகதீஸ்வரி ''சுகுணனோட அப்பா ராணுவத்தில் இருந்ததால் காஷ்மீரில் வேலை. இந்தப் பள்ளியில் சேரும்போது சுகுணனுக்குத் தமிழ் தெரியாது. ஆனால், கொஞ்ச நாளிலேயே தமிழ் கற்றுக்கொண்டு வகுப்பில் முதல் மார்க் வாங்கினான். அப்போது இருந்தே தனியாத் தெரிய ஆரம்பிச்சான்'' என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.

சுகுணனின் பயிற்சியாளர்களில் ஒருவரான அண்ணாமலை ''சுகுணனுக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு. சரியான நேரத்துக்கு பயிற்சிக்கு வந்துருவான். வெளி மாநிலத்துக்குப் போகும்போது யாருக்கும் ஹிந்தி பேசத் தெரியலை. அப்போ இவன்தான் ஹிந்தியில் பேசி வழி நடத்தினான். அதோடு தான் ஜெயிக்கணும்னு மட்டும் இல்லாமல் அவனோட ஃப்ரெண்ட்ஸுக்கும் வாலிபால் ஈஸிதான்னு சொல்லிக்கொடுத்து 15 பசங்களை மாநில அளவில் பங்கேற்க வெச்சிருக்கான். கேரம் போர்டு ஸ்டேட் லெவல் பிளேயர். செஸ் நல்லா ஆடுவான். அதுக்கும் அழைச்சுட்டுப் போகலாம்னு இருக்கோம்'' என்றார்.

''என்னோட ரோல் மாடல் சச்சின். கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிச்ச கேம்'' என்கிற சுகுணன் ''என்னடா சம்பந்தமே இல்லாம இருக்குதேனு பார்க்குறீங்களா? எல்லா விளையாட்டும் விளையாடணும்னு என் அண்ணா எனக்குக் கத்துக்கொடுத்து இருக்கிறார். நாம எப்பவுமே ஆல்ரவுண்டரா இருக்கணும்னு சொல்வார். எதுவா இருந்தாலும் ஒரு கை பார்க்கிற என் அண்ணா சூரத், என்னோட ஒரு ரோல் மாடல்தான். எப்படி ஜாலியா இருந்தாலும் படிக்கிற நேரத்துல படிக்கணும், விளையாட்டுன்னா சின்சியரா இறங்கி அடிக்கணும்'' என்கிறார் சுகுணன்.

அடிச்சு அசத்துங்க சுகுணன்!

உங்கள் பள்ளியிலும் இவரைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால், எங்களுக்கு எழுதுங்கள். அவரை அறிமுகப்படுத்த சுட்டி விகடன் தயாராக இருக்கிறது. அவரது பெயர், வகுப்பு, பள்ளி முதல்வர் மற்றும் முழு முகவரியுடன்... செல் நம்பரையும் குறிப்பிடவும்.