Published:Updated:

சிக்கு... புக்கு... குக்கு....

சிக்கு... புக்கு... குக்கு....

சிக்கு... புக்கு... குக்கு....

சிக்கு... புக்கு... குக்கு....

Published:Updated:
சிக்கு... புக்கு... குக்கு....
சிக்கு... புக்கு... குக்கு....

ஹாய் சுட்டீஸ்,  சோளம் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றைக் கொண்டு இரண்டு ரெசிப்பிக்களை வசந்தா விஜயராகவன் செய்யக் கற்றுத் தந்திருக்கிறார். அம்மாகிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்க! டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி,  இவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களையும் அவற்றின் சிறப்புகளையும் விளக்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைப் பட்டாணி வடை!

தேவையானவை: பச்சைப் பட்டாணி - 2 கப், வேர்க்கடலைப் பொடி - அரைக் கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், பச்சைமிளகாய், இஞ்சி விழுது - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையானது, பெருங்காயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பட்டாணியைக் கொற கொறப்பாக அரைக்கவும். இதனுடன் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, பொடித்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை மாவு, உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கெட்டியாகக் கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சிக்கு... புக்கு... குக்கு....
##~##

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1000 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 73 கிராம்

புரோட்டீன் - 40 கி

கொழுப்பு - 61 கி

கால்சியம் - 107 மில்லி கிராம்

இரும்பு - 8.3 மி.கி

கொலின் - 61 மி.கி

பீட்டா கரோட்டின் - 282 மைக்ரோ கி

ஃபோலிக் ஆசிட் - 28 மை.கி

டயட்டீஷியன் கமென்ட் : இதில் எல்லாச் சத்துக்களும் கலந்து உள்ளன. புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். பீட்டா கரோட்டின் இருப்பதால் வைட்டமின்-சி கிடைக்கிறது. மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொலின் தேவையான அளவு கிடைக்கிறது. தாது உப்புக்களும் தேவையான அளவு கிடைக்கிறது. எண்ணெயில் பொரிக்கப்படுவதால், இதை ஒல்லியான சுட்டிகள் தயக்கமின்றிச் சாப்பிடலாம். குண்டாக இருக்கும் சுட்டிகள் அடைபோலச் செய்து சாப்பிடலாம். இதனால், உடலைக் குண்டாக்கும் எண்ணெய்ச் சத்து குறையும். இதை அப்படியே தனியாகச் சாப்பிடாமல், புதினா அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதைக் காலை அல்லது மாலையில் சாப்பிடலாம்.

சோள உப்புமா!

சிக்கு... புக்கு... குக்கு....

தேவையானவை: துருவிய சோளம் - 2 கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சைமிளகாய் (கீறியது) - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன் (தலா) எண்ணெய் - தேவையானது, பெருங்காயம் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, வேர்க்கடலை - 2 டீஸ்பூன், தண்ணீர் - 6 கப்.

செய்முறை: துருவிய சோளத்தை ஆறு கப் தண்ணீர் விட்டுக் கொஞ்சம் கொதிக்கவிட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். கொஞ்சம் தண்ணீர் வற்றிக் கெட்டியானதும் ஒரு தட்டில் போட்டு பரப்பிவிடவும். அடுத்து, வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து, கடுகைப் போடவும். வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வறுத்து,  உப்பு சேர்க்கவும். தட்டில் இருக்கும் சோளத்துருவலை வாணலியில் போட்டு எல்லாவற்றையும் கொஞ்சம் கிளறவும்.  மேலாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி சூடாகப் பரிமாறவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1475 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 216 கிராம்

புரோட்டீன் - 41 கி

கொழுப்பு - 49 கி

கால்சியம் - 100 மில்லி கி

இரும்பு - 10.2 மி.கி

பீட்டா கரோட்டின் - 300 மைக்ரோ கி

கொலின் - 21.5 மை.கி

ஃபோலிக் ஆசிட் - 79   மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: மக்காச் சோளத்தில் இருந்து செய்யப்படுவதால், இதில் நல்ல எனர்ஜி கிடைக்கும். கொழுப்புச் சத்து, புரதச்சத்து, கால்சியம் ஆகியவை தேவையான அளவு கிடைக்கும். சோளத்தில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகக் கிடைக்கும். இது ஒரு நல்ல சமச்சீர் உணவாகும். எளிதில் ஜீரணமாகும். இத்துடன் சென்னா கறி அல்லது ஊறுகாய் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.  

          படங்கள்: து.மாரியப்பன்

 டைமண்ட் சப்பாத்தி ஸ்வீட்!

சப்பாத்திக்கு மாவு பிசைந்து அது மிஞ்சிப்போய் விட்டால், அதைச் சப்பாத்தி போன்றே தேய்த்துக் கொள்ளவும். டைமண்ட் வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். அதைக் காயவைத்து, ஜாடியில் போட்டுவைத்துக் கொள்ளவும்.

சிக்கு... புக்கு... குக்கு....

மாலையில் குழந்தைகள் டிபன் கேட்கும்போது, ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காயை அதில் வறுத்து, பின் பால்விட்டுச் சூடானவுடன் சர்க்கரை சேர்த்து, டைமண்ட் வடிவ சப்பாத்தியை அதில் போட்டு  மிதமாக வேகவிட்டு இறக்கினால், சுவையான மினி சப்பாத்தி ஸ்வீட் ரெடி! இதை மைதா மாவிலும் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism