Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

Published:Updated:

கே.கணேசன்

ஹாய் சுட்டீஸ்... போனமுறை நாம் உலகின் மிக உயரமான இடத்தை அடைந்ததன் மூலம் இமாலயப் புகழ்பெற்றவரைக் காப்பி அடித்தோம். இந்தமுறை தண்ணீரை வெற்றி கொண்டவர், உங்களில் கிட்டத்தட்ட சமவயதுடைய ஒருவரையே  காப்பி அடிக்கப் போகிறோம். அதாவது, உங்களின் அண்ணன் வயதே இருக்கும் வீர்தவல் விக்ரம் கடே(Veerdhaval Vikram Khade)தான் நாம் காப்பியடிக்கப் போகும் நபர்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 1995... மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரத்தில் உள்ள பி.ஜி.டி. நீச்சல் குளம். நான்கு வயது குட்டிச் சிறுவன் ஒருவன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளான். அதை எத்தனை ஆர்வத்துடன் செய்கிறான் பாருங்கள். நீச்சலில் ஒரு வகையான ஃப்ரீஸ்டைல் முறையைத்தான் பயிற்சிஎடுத்து வருகிறான்.

##~##

அவன் பிறந்த சில மாதங் களுக்குள் அவனது அம்மா இறந்து விட்டார். அப்பா விக்ரம் கடே ஒரு கூடைப்பந்தாட்ட வீரர். மகாராஷ்டிரா அணிக்காக ஆடிவருபவர். எளிமையான குடும்பம் ஆதலால், உணவு வகைகளும் எளிமையாகவே இருந்தன. ஆனால், காய்கறிகள், பழங்களை அதிகமாகக் கொடுத்தார் அப்பா. அவை நல்ல சக்தி அளிப்பவையாக இருந்தன (காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும் சுட்டிகள் கவனிக் கவும்). வீர்தவல் மற்ற சுட்டிகளைவிட உயரமாக வளர்ந்தான். தன்னைப் போல கூடைப் பந்தாட்ட வீரர் ஆக்காமல் நீச்சலில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அவனது அப்பா!

நீச்சல் பழக வந்தபோது, அந்த நீச்சல் குளத்தின் பளிங்கு போன்ற நீல நிறத் தண்ணீரையும் அதில் சூரிய ஒளிபட்டு தகதகப்பதையும் ஆர்வத்துடன் பார்த்தான்.  அப்பா அவனைத் தண்ணீரில் குதி என்றதுமே தயக்கம் இல்லாமல் குதித்து, நீரில் மூழ்கி, பின் மேலெழுந்து வந்தான். அவனுக்கு தண்ணீரைப் பார்த்தால் பயமாக இல்லை. அவன் பெயரிலேயே  இருக்கும் 'வீர்’ என்றால் தைரியசாலி என்று பொருள்.

அவ்வளவுதான்! அன்று முதல் ஆரம்பித்த அவனது நீச்சல் பயணம், இதோ சமீபத்தில் சீனாவின் குவாங்சூ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் பெற்றுத் தருவது வரை தொடர்ந்து இருக்கிறது. இது ஒன்றும் எளிதில் கிடைத்த வெற்றி அல்ல. இந்த வெற்றியின்  பின்னால் வீர்தவலின் கனவும், அவனது தந்தையின் கனவும் இருக்கிறது.

காப்பி அடிக்கலாம் வாங்க !

பி.ஜி.டி. நீச்சல் குளத்தில் ஒருநாள், வீர்தவல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் அவனது தோழர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நீச்சல் பயிற்சியை மறந்துவிட்டான். பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் தாம்லே, அவனை அழைத்து, 'பயிற்சியின் போது இப்படி மனதை அலையவிடக் கூடாது. மனதை ஒருமுகப் படுத்தி பயிற்சி யில் ஈடுபட்டால் தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும்’ என்று கடிந்து கொண்டார்.

அது முதல் நீச்சல் பயிற்சிகளை முனைப்புடன் செய்ய ஆரம்பித்தான் வீர்தவல். ஒருமுகப் படுத்தப்பட்ட பயிற்சிக்குப் பலன் உடனேயே கிடைத்தது. அவனது பதினோரு வயதில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 50, 100, 200 மீட்டர் பந்தயங்களில் இரு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலமும்  பெற்றான். அவனது வீட்டு வரவேற்பறை முழுவதும் பதக்கங்களால் நிரம்ப  ஆரம்பித்தது.

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டாலும், வீர்தவல் படிப்பிலும் கெட்டி. விளையாட்டில் பெறும் வெற்றிகள் மட்டுமே வாழ்க்கையல்ல, பள்ளிக் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு நாளில் காலை 5 மணிக்கு எழுந்ததில் இருந்து இரவு 10 மணி வரைக்குமான கால அட்டவணை போட்டு அதன்படி செயல்பட்டான். பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றான்.

2005-ல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதுடன், குழுப் போட்டியான தொடர் நீச்சல் போட்டிகளில் ஒரு தங்கமும், ஒரு வெண்கலமும் இந்திய அணி பெறுவதற்குக் காரணமாக இருந்தான்.

போட்டிகளில் வீர்தவலின் நீச்சல் திறமையை கவனித்த பயிற்சியாளர் நிஹார், நவீன வசதிகள் கொண்ட நீச்சல் குளத்தில் பயிற்சி செய்தால், இன்னும் பெரிய வெற்றிகளை அடையலாம் என்று சொல்லி, வீர்தவலை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தார்.

ஆஸ்திரேலியாவில் 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு நமது தேசிய சாதனை நேரத்தை முறியடித்தான். இதன் மூலம், 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றான். மேலும் ஒரு சாதனையாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றான். இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர், ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்டவன் என்ற சாதனையை நிகழ்த்தினான்.

அதேபோல, சமீபத்தில் சீனாவின் குவாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தான். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நீச்சலில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றான்.

கோலாப்பூர் என்றாலே அழகிய காலணிகள் தான் நம் ஞாபகத்துக்கு வரும். தனது நீச்சல் திறமையால் அதை மாற்றி, வீர்தவல் கடேயின் பெயர் நினைவுக்கு வரும்படி சாதனை புரிந்து இருக்கிறான்.  

எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வீர்தவல் கடேயின் வாழ்க்கையை நாம் 'காப்பி அடிக்கலாம் வாங்க!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism