Published:Updated:

மீட்டிங்.... கார்ட்டூன் வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

மீட்டிங்.... கார்ட்டூன் வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

மீட்டிங்.... கார்ட்டூன் வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

மீட்டிங்.... கார்ட்டூன் வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

Published:Updated:

இரா.நடராசன்

 ஸ்கூபி-டூ நாயும் அதன் உற்ற நண்பன் ஷாகி (shaggy)யும் பின் சீட்டில் உட்கார்ந்திருக்க, அந்த வழக்கமான வேனை ஃபிரெட் ஜோன்ஸ் ஓட்டிக் கொண்டிருந்தார். கண்ணாடித் தோழி வெல்மா ஏதோ புத்தகம் வாசிக்க, டால்ப்ளென் பிளேக், சாலையில் ஒரு சுட்டி நின்று கைகாட்டுவதைக் கவனித்தார்.

டால்ப்ளென்: ஃபிரெட், அங்கே பார்... வண்டியை நிறுத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபிரெட்: ஓ... யார் அது?

(வண்டி நின்றது.)

மீட்டிங்.... கார்ட்டூன்  வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ
##~##

சுட்டி: ஹாய்! என் பெயர் அசோக்குமார். நான் ஈங்கூர், ஸ்ரீ கங்கா மேல்நிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். நான் உங்களோட கொஞ்சம் பேசலாமா? குறிப்பா... ஸ்கூபி-டூ கிட்ட பேசணும்.

டால்ப்ளென்: வா... இதுதான் சூப்பர் ஸ்கூபி-டூ. வண்டியில ஏறு (சுட்டி ஏற, வேன் கிளம்பியது.).

ஸ்கூபி-டூ: ம்... யாரு?

அசோக்குமார்: எங்கள் எல்லாருக்குமே ஸ்கூபினா பிடிக்கும்.

ஸ்கூபி-டூ: தேங்க்யூ! தேங்க்யூ! ஷாகி, பார்த்தியா நான்தான் ஃபேமஸ்!

அசோக்குமார்: ஓ! ஷாகியும் இங்கேதான் இருப்பான்னு நினைச்சேன்.

ஷாகி: ஹாய்... பிளீஸ் டூ மீட் யூ!

அசோக்குமார்: எப்பவும் இந்த மாதிரி வேன்ல தெரியாத புது இடத்துக்கே போறீங்களே..?

ஸ்கூபி-டூ: அதுதான் எங்களோட வேலையே. எங்கேயாவது பேய், பிசாசு இருக்கு... காத்துக் கருப்பு இருக்குன்னு யாராவது புரளியைக் கிளப்பி ஏமாற்றினால், நாங்க விட மாட்டோம்!

மீட்டிங்.... கார்ட்டூன்  வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

ஷாகி: அந்த இடத்தில் தங்கி துப்பறிந்து, ஏமாற்றியவர்களை போலீஸ்கிட்ட பிடிச்சுக் கொடுப்போம்.

அசோக்குமார்: ரொம்ப ரிஸ்க்கான வேலையாச்சே... இதை எப்போ ஆரம்பிச்சீங்க?

மீட்டிங்.... கார்ட்டூன்  வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

ஸ்கூபி-டூ: 1969-ல் முதல்ல வானொலி மூலமாதான் அறிமுகம். அதைச் செய்தது ஷார்டு சிம்ஸ் (Shard Sims).

வெல்மா: 'ஸ்கூபி-பேசும் நாய்’ என்று ஒரு சீரியல். அப்போ இருந்தே நாங்க ஒரு கேங். ஃபிரெட், டாஃபின் பிளாக் இருவரும் முதலில் இணைந்தனர். ஸ்கூபி-டூவை வளர்த்தது ஷாகிதான்.

ஃபிரெட்: எப்போதுமே ஒரு சதிகாரக் கும்பல் மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டுக் கொள்ளை அடிக்கும், அதை மீட்பதும் எங்கள் வேலை.

அசோக்குமர்: சில சமயம் பயங்கர ஆபத்துக்களில் இருந்து கூட மக்களை காப்பாத்தறீங்களே... முதலில் கார்ட்டூனா எப்போ வந்தீங்க?

ஸ்கூபி-டூ: என்னை வரைந்து காட்டியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்கா மோட்டோ (Takamoto).. ஆனால், உருவாக்கி அனிமேஷன் செய்தது எல்லாம் ஜோ ரூபி (Joe Ruby)மற்றும் கென்ஸ் பியர்ஸ் (Ken Spears)

பிளாக்: ஷாகி ஒரு பயந்தாங்கொள்ளி... அதைவிடப் பெரிய பயந்தாங்கொள்ளி ஸ்கூபி.

அசோக்குமார்: பட், கடைசியா எல்லாரையும் பிடிக்கிறது ஸ்கூபி-டூதான் இல்லையா? ரொம்ப வேடிக்கை. அது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். முதலில் கார்ட்டூன் படமா எப்போ அறிமுகம் ஆனீங்க?

ஷாகி: ஹெனா பார்பாரா 1976-ல் படமா எடுத்தாங்க. அதிலே இருந்து கார்ட்டூன் நெட்வொர்க்கில் இப்பவும் வந்து கலக்கிகிட்டு இருக்கோம்.

ஸ்கூபி-டூ: ஷாகி, வார்னர் பிரதர்ஸ்ஸை மறந்துட்டியே... 1979 முதல் மூன்று முறை சினிமாவா வந்து ஹிட் ஆனோமே.?

மீட்டிங்.... கார்ட்டூன்  வி.ஐ.பி.கள் ! ஸ்கூபி -டூ

அசோக்குமார்: நீங்க சுட்டிகளுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

ஸ்கூபி-டூ: எதையுமே பார்த்துப் பயப்படாதீங்க!

ஷாகி: எதையும் தைரியமா சந்தியுங்க!

வெல்மா: பேய், பிசாசுனு எதுவும் கிடையாது!

பிளாக்: எதையும் கேள்வி கேட்டு விளக்கமா புரிந்து படிக்கணும்!

ஃபிரெட்: ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது!

அசோக்குமார்: ரொம்ப தாங்க்ஸ்!

(வண்டி நின்றது. சுட்டிக்கு  கை அசைத்து விடை கொடுத்து கிளம்பினார்கள்).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism