Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

மாசுக்கு ஒரு முற்றுப்புள்ளி !மா.நந்தினி செ.சிவபாலன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

இன்று உலகில் எல்லோருமே மனதில் பயத்தோடுதான் ஒவ்வொரு நிமிஷத்தையும் கடந்துகொண்டு இருக்கிறோம். காரணம்... புவி வெப்பமயமாதல்.

இந்த நிலையில், வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் பசுமை இல்லா வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடும் நமக்கு நண்பன்தான் எனச் சொல்கிறார், சீர்காழி சபாநாயகர் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் நவின்ராஜ்.

''நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் அறிவியல் டீச்சர் சொன்ன வார்த்தை ரொம்ப யோசிக்க வெச்சது.  வாகனங்களில் இருந்து வெளியேறும் (கார்பன்-டை- ஆக்ஸைடு) நச்சுக் காற்றின் அளவு 31 சதவீதமாக அதிகரிச்சு இருக்குனு சொன்னாங்க. இதே நிலைமை தொடர்ந்தால் புவி வெப்பமயமாதலின் ஆவதின் காரணமாக கடல் நீர் அளவு உயர்ந்து,  நிலப் பகுதி குறையும் அபாயம் இருக்கு. இது சாதாரண விஷயம் இல்லைனு புரிஞ்சுகிட்டேன். இதைக் கொஞ்சமாவது தடுக்கலாம்னு யோசிச்சதுதான் இந்த கான்செப்ட்'' என அழுத்தமான குரலில் பேசுகிறார் நவின்ராஜ்.

சுட்டி விஞ்ஞானி

விண்ணை முட்டும் அளவுக்கு பெட்ரோல் விலை ஏறினாலும் தாறுமாறாய் பறக்கும் வாகனங்களுக்குப் பஞ்சம் இல்லை. இந்தச் சூழலில்தான் நவின்ராஜின் முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

''இனிமேல் தயாரிக்கப்படும் எல்லா வாகனங்களிலும் கார்பன்-டை- ஆக்ஸைடைச் சேமிக்கிற அளவுக்கு

சுட்டி விஞ்ஞானி

ஒரு சிறிய டேங்க் அமைப்பு இருந்தால் போதும். நாம் வெளியே செல்லகூடிய தூரத்துக்கு ஏற்ப டேங்கில் கால்சியம் ஹைட்ராக்சைடு நிரப்பி, பிறகு வெளியே எடுத்துச் செல்லலாம். வீட்டுக்குத் திரும்ப வந்ததும், டேங்கில் படிந்து இருக்கும் சுண்ணாம்பை எடுத்துப் பயன்படுத்தலாம்.  இப்படிச் செய்வதால் காற்று மாசுபடுதலைத் தடுக்கலாம். இதற்கான வாகன வடிவமைப்பையும் நானே யோசிச்சு வெச்சு இருக்கேன். இதேபோல் தொழிற்சாலைகளிலும் காற்று மாசுப்பாட்டைத் தடுக்கலாம்'' எனக் கண்கள் மின்னச் சொல்கிறார் நவின்ராஜ்.

''நவின்ராஜ் வகுப்பில் நடத்துவதைப் படிக்கிறதோட நில்லாமல், பிராக்டிகலாகவும் செஞ்சுப் பார்ப்பான். ரிமோட் மூலம் இயங்கும் ஒரு ஏரோபிளேனை செய்து இருக்கான். இப்போ காற்று மாசுபடுவதைத் தடுக்க இந்த கான்செப்டை சொல்லி இருக்கான். இதை நடைமுறைப்படுத்த நிறைய செய்திகளையும் சேகரிச்சுட்டு இருக்கான்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு.

''இன்றைக்கு நமக்கு வேலை சீக்கிரம் முடியணும்னு கண்டபடி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம். சிரமம் பார்க்காமல் இதை நடைமுறை செய்தால் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும்'' என்கிறார் நவின்ராஜ்.

சுட்டி விஞ்ஞானி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு