Published:Updated:

சுட்டி மனசு

தொகுப்பு: நா.இள.அறவாழி, ஞா.அண்ணாமலை ராஜா, நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.நந்தினி

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஆ.மானஸா, யூ.கே.ஜி., அரவக்குறிச்சி.

''நான் வளர்ந்ததும் எங்க ராஜா மாமா மாதிரி போலீஸ் ஆகத்தான் ஆசை. அப்பாகூட டிரெஸ் எடுக்க கடைக்குப் போனப்ப அங்கே இருந்த போலீஸ் டிரெஸ் கேட்டேன்.  ஒண்ணும் வேணாம், நீ டாக்டர்தான் ஆகணும்னு சொல்லி, அப்பா வெள்ளைச்  சட்டைதான் எடுத்துக் கொடுத்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை.

வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ஐஸ் கடையில் எல்லாரும் ஐஸ் வாங்கிச் சாப்பிடுவாங்க. அப்பாகிட்ட நான் கேட்டா,  'ஐஸ் சாப்பிட்டா காய்ச்சலில் படுத்துக்க வேண்டியதுதான்’னு சொல்லுறாரு. எங்கப்பாவோட பார்க்கர் பேனாவை எடுத்து எழுதினா திட்டுறாரு. நான் சின்ன தப்புப் பண்ணினாக்கூட டாக்டர் கிட்ட கூட்டிட்டுப்போய் ஊசி குத்துவேன்னு சொல்லிப் பயமுறுத்துறாரு. வீட்டுக்கு வெளிய உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தா தலையில கொட்டுறாங்க. சின்னப் பிள்ளைதானே, தலையில கொட்டலாமா சொல்லுங்க அங்கிள்.''

சுட்டி மனசு

பாலகணேஷ், 3-ஆம் வகுப்பு, நரசிங்கம்பேட்டை.

''எனக்கு என் அக்காதான் அங்கிள் பிரச்னை. எல்லாரோட அக்காவும் பேசுவாங்க. ஆனா, என் அக்கா பேசாம இருந்தே என்னை மாட்டிவிட்டுருவா. நான் கொஞ்சமா பேசினாகூட, 'அக்கா எப்படி அமைதியா இருக்கா, நீ ஏன் பேசிக்கிட்டே இருக்கே’னு வீட்ல எல்லாரும் திட்டுவாங்க. எங்க அப்பா வெளிநாட்டுல இருக்காங்க. அதனால, எனக்கு சப்போர்ட் பண்ணக்கூட யாரும் கிடையாது.

சுட்டி மனசு

நான் எல்.கே.ஜி. படிக்கும்போது வேன் மாறி ஏறினதால ஆடுதுறை வரைக்கும் போயிட்டேன். அந்தச் சின்ன வயசுலயும் வீட்டு அட்ரஸ் கரெக்டா சொன்னதால வீட்டுக்கு வந்தேன். அப்பக்கூட என்னைப் பாராட்டாம, ஏன்டா வேன் மாறி ஏறினேனு திட்டினாங்க. டியூஷன் சொல்லித் தர்ற புவனா அக்காவே... 'பாலா நல்லாப் படிக்கிறான்’னு சொன்னாலும், எங்க அம்மா கேட்க மாட்டாங்க. எப்போதும் படிச்சுகிட்டே இருக்கச் சொல்றாங்க. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைக்கிள் வெச்சிருக்காங்க. நானும் ரொம்ப நாளா சைக்கிள் கேட்டுட்டு இருக்கேன். அதை யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்றாங்க. ஆனா, என் அக்கா சைக்கிள் கேட்கவே இல்லை, இருந்தும் அவளுக்கு வாங்கலாம்னு இருக்காங்க. ஊர்ல ரெண்டு அக்கா இருக்கிற என் ஃப்ரெண்ட்ஸுங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. ஆனா, ஒரே ஒரு அக்காதான் எனக்கு. ஆனா, நான் படுற பாடு இருக்கே... அது ரொம்பக் கொடுமை அங்கிள்!''

மோனிகா, 3-ஆம் வகுப்பு, புதுச்சேரி.

''நீ ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்கிறே... இப்படிச் சாப்பிட்டா  வீக் ஆயிடுவேனு அடிக்கடி அம்மா சொல்வாங்க. ஆனா, எனக்கு கீரை, காய்கறியைக் கண்டாலே பிடிக்க மாட்டேங்குதே.  என்ன செய்யறது அங்கிள்? நான் ஏதாவது சொன்னா, 'நீ சின்னப் பொண்ணு, உனக்கு என்ன தெரியும்?’னு கேட்கிறாங்க. அம்மா வேலைக்குப் போறாங்க. அதுனால, சீக்கிரமா எழுப்பி விட்டுருவாங்க. எந்திரிச்ச உடனே பிரஷ் பண்ணச் சொல்வாங்க. காலையில சாப்பிடுற நேரத்துல கொஞ்ச நேரம் டி.வி. ஸ்விட்சைப் போட்டாப் போதும், 'மோனிகா...!’னு ஓங்கி ஒரு கத்து. அவ்ளோதான்.

சுட்டி மனசு

தினமும் ஒரே ஸ்நாக்ஸா வச்சித் தர்றாங்க. எப்பப் பார்த்தாலும் க்ரீம் பிஸ்கட்தான். என்னோட ஃப்ரெண்ட்ஸ்லாம் சாக்லேட், டார்க் ஃபேன்ட்டஸினு வெரைட்டியா எடுத்துட்டு வருவாங்க. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குள்ளே வந்த உடனே 'டிரெஸ் அழுக்காயிரும். கழட்டு’னு சொல்வாங்க. நூடுல்ஸ் செஞ்சுதாம்மானு கேட்டா, ஒழுங்கா தோசையைச் சாப்பிடுனு சொல்றாங்க. தலையைப் பிச்சுக்கிறது தவிர நான் என்ன பண்றது அங்கிள்?''

ச.பாரதி, 7-ஆம் வகுப்பு, சென்னை.

'எனக்கு நிறைய புக்ஸ் படிக்க பிடிக்கும். எங்க அப்பா மாதா மாதம் புத்தகம் வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா, அதை உடனே படிச்சு முடிச்சுடுவேன். வேற புக்ஸ் வாங்கித் தாங்கன்னு கேட்டா, 'இந்தப் புத்தகத்தையே இன்னொரு முறை படி, கொஞ்சநாள் போகட்டும்’னு சொல்லிடுவாங்க. நான் படிக்க புக்ஸ்தானே கேட்கிறேன். இதைக்கூட வாங்கித் தரலைனா மனசு கஷ்டமாகாதா?

நான் கிளாஸ் ஃபர்ஸ்ட்  வந்தா,  ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் பிடிச்சதை வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா, சில சமயம் இரண்டாவது ரேங்க் எடுத்தா அவ்ளோதான், செமத்தியா திட்டு விழும். என்னோட தங்கச்சி என்ன தப்பு பண்ணாலும் என்னைத்தான்  திட்டுவாங்க. கேட்டா, 'அவ சின்னப் பொண்ணுடா, நீதான் விட்டுக் கொடுத்துப்போகணும்’னு சொல்றாங்க.

சுட்டி மனசு

என் ஃப்ரெண்ட்ஸ் ஸ்கூலுக்கு சைக்கிள்லதான் வர்றாங்க. நானும் ஸ்கூலுக்கு சைக்கிள்லயே போறேன்னு சொன்னா விடமாட்றாங்க அங்கிள். நான் மட்டும் இன்னும் ஸ்கூல் வேன்ல சின்னப் புள்ள மாதிரி போயிட்டு இருக்கேன். நான் பெரிய பையன் ஆகிட்டேன்னு சொன்னாப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க அங்கிள்.'

படங்கள்: எஸ்.தேவராஜன்,
ஜெ.வேங்கடராஜ், செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு