Published:Updated:

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் என்.ஜி.மணிகண்டன்

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

தில்லி சுல்தான்களுக்கும் தக்காண நிஜாம்களுக்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தவர், முகலாய சாம்ராஜ்யங்கள் மாபெரும் வீழ்ச்சி அடைய முதல் அடி கொடுத்த பேரரசர் வீர சிவாஜி. அவர் இன்று நேரில் வந்தால்...

மராட்டியகுலத்தின் தெய்வ மங்கை எனப் போற்றப்பட்ட ராஜமாதா ஜீஜாபாய், தன் மகன் சிவாஜியினால் பெருமை பல அடைந்து இருக்க, சிவாஜியாக வேஷம் அணியப்போகும் தம் மக்களின் அழகைக் காண அன்னையர்கள் ஒரு வாரமாக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தனர். 'மாவீரனாய் வாள் வீசி, சிங்கம் போல் நடந்து வருவானோ... மீசை முறுக்கியும் மிரட்டுவான். அதுமட்டுமா, சிவாஜி என்று அழைத்தால், 'ஏன் அம்மா என்று குதிரையில் ஏறி வந்து நிற்பானோ!’ என்ற கனவுகள் எல்லாம் செப்டம்பர் 22-ஆம் தேதி காலை, கரூர் பரணி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் நிஜமாகி இருந்தன.

ஒரே மாதிரி உருவத்தில் வாள்களோடு வந்த பல வீர சிவாஜிகளைக் கண்ட பெற்றோர்கள் ஒரு கணம் மலைத்துப்போனார்கள். உற்சாகமாய் உலாவிய அவர்களில்...

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

நழுவிய மீசையை ஒட்டவைக்க மீண்டும் மீண்டும் ஒரு சிவாஜி முயன்ற காட்சியும்... இன்னொரு சிவாஜி, வழியில் விழுந்துவிட்ட மீசையைக் காணாமல் தேடிய காட்சியும் பெற்றோர்களைச் சிரிக்கவைத்தது.

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

தாத்தாவின் தோளில் சாய்ந்தபடியே வந்த ஒரு சிவாஜியை, பெரியவர் ஒருவர் கிண்டலடிக்க, கோபப்பட்ட சிவாஜி, இடுப்பில் இருந்த வாளை உருவிப் பாய, பக்கத்தில் நின்றவர்கள் விலகி ஓட, தலையில் இருந்த கிரீடம் காற்றில் பறக்க என ஜாலியாய் ஆரம்பித்தது சிவாஜியின் அவதாரம்.

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

சிறுவர்களுக்கு சிவாஜி வேஷம் அணிவிக்க டீச்சர்களுக்குள் நான் நீ என்ற போட்டி. உடைகள், நகைகள், மணிகள் என ஒவ்வொன்றாக அணிவிக்கும்போது மகிழ்ச்சியில் அவர்கள் உள்ளங்கள் துள்ளின. இரண்டு சிவாஜிகள்... 'எங்களுக்கு மீசையே வேண்டாம்’ என்று மறுக்க, அவர்களைச் சமாதானப்படுத்த நான்கு ஐந்து டீச்சர்கள் தேவைப்பட்டனர். கடைசியாக 'போட்டோவுக்காக மட்டும்தான் மீசை வைப்போம்’ என ப்ராமிஸ் வாங்கிக்கொண்டே முகம் காட்டினர். மேக்-அப் போட வெகுநேரம் ஆனதால், சில சிவாஜிகள் 'போங்கப்பா நீங்களும் உங்க மேக்-அப்பும்’ என உறங்கிப்போனார்கள். அவர்களை எழுப்புவதற்காகப் போராட வேண்டியது ஆயிற்று.

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !

பிறர் மனம் புண்படச் செய்யாத குணமும், பிற மதச் சம்பிரதாயங்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பாடும்,  யுத்த தந்திரங்களும், ஈடு இணையற்ற மன வலிமையும்கொண்டவர் சிவாஜி. நமது வரலாற்று நாயகன் சிவாஜியின் வீரம் என்றென்றும் தனித்துவமானது.

கரூர், பரணி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 2009-ம் ஆண்டு எம்.எம்.எம் அறக்கட்டளையின் மூலம் துவக்கப்பட்டு, சீரிய முறையில் கல்விப் பணி ஆற்றிவருகிறது. இங்கே கல்வியோடு மாணவர்களின் தனித் திறமை சோதிக்கப்பட்டு, சாதனை புரிய வழிவகுக்கப்படுகிறது. இங்கே அனைத்து ஆசிரியைகளும் சாரணியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ, மாணவியர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

இந்தப் பள்ளியின் தாரக மந்திரம் 'என்னால் முடியும்’, 'என் முயற்சியில் வெல்வேன்’ (I can, I will) என்பதுதான் என்கிறார் பள்ளியின் முதன்மை முதல்வர் சொ.ராமசுப்பிரமணியன்.  

அவதார் - வெற்றிநடைபோட்ட வீர சிவாஜிகள் !