'எங்க இங்கிலீஷ் டீச்சர் கலைச்செல்வி போல யாரும் இல்லை.’ இது திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சூட்டும் புகழாரம். 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துகிறார் ஆசிரியை கலைச்செல்வி.

ஷாலினி (6-ஆம் வகுப்பு): ''கலைச்செல்வி டீச்சர் பாடம் நடத்தும்போது பாவனையுடன் நடித்துக் காட்டுவார். பாடம் அப்படியே மனதில் பதியும். வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் சொல்லித்தருவார்.''

சரண்யா (10-ஆம் வகுப்பு): ''எனக்கு அப்பா, அம்மா இல்லை. பாட்டிதான் கூலி வேலை செஞ்சு படிக்க வைக்கிறாங்க. என் படிப்புச் செலவை கலைச்செல்வி டீச்சரே தர்றாங்க. நான் சாப்பாடு கொண்டுவராதபோது, ஸ்கூல் கேன்டீன்ல வாங்கித் தருவாங்க. எனக்கு அவங்க அம்மா மாதிரி.''

சாரா (10-ஆம் வகுப்பு): ''எனக்கு ரோல் மாடல், இன்ஸ்பிரேஷன் எல்லாமே கலைச்செல்வி டீச்சர்தான். 'அவங்க மாதிரி நாமும் இங்கிலீஷ் டீச்சராகி, ஸ்டூடன்ட்ஸ்கிட்டே நல்ல பேர் வாங்கணும்’கிறதுதான் என் ஆசை. உடம்பு சரியில்லைன்னாலும் அவங்க வகுப்பை மிஸ் பண்ண மாட்டேன்.''

கீர்த்தனா (6-ஆம் வகுப்பு): ''வாரம் ரெண்டு மணி நேரம் எங்களுக்குத் தனியா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுப்பார். ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வந்து, மெதுவாகக் கற்கும் மாணவிகளுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தருவார்.''

ஹரிதா (10-ஆம் வகுப்பு): ''நல்லாப் படிக்கிற ஸ்டூடன்ட்ஸ், படிக்காத ஸ்டூடன்ட்ஸ்னு பாரபட்சம் காட்டவே மாட்டார். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் சொல்லித் தருவார். அவங்க வீட்ல இருந்து சுண்டல், கடலை, பட்டாணியை அவித்து எடுத்துவந்து கொடுப்பார்.''

சங்கீதா (10ம் வகுப்பு): ''உலக நடப்புகள், சினிமா, டிவி, நியூஸ் பேப்பர் செய்திகள் என்று பல விஷயங்களையும் பேசி மனதுக்கு உற்சாகம் தருவார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக அவர்கிட்டே நிறைய சிடி, டிவிடிகள் இருக்கு. தவிர, அவர் வீட்டு நூலகத்தில் இருந்து புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார்.''

- அ.சாதிக் பாட்ஷா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

குட் ஸ்டூடன்ட் !

ஆசிரியர்களை அசத்தும் ஆனந்த் !

மயிலாடுதுறை, திருமணஞ்சேரி அருகே இருக்கிறது, கண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இங்கே எட்டாம் வகுப்புப் படிக்கும் ஆனந்த், தனது நற்பண்புகளால் ஆசிரியர்களை அசத்தி வருகிறார். அவரைப் பற்றி ஆசிரியர்கள்...

ரவிச்சந்திரன் (கணித ஆசிரியர்): 'வகுப்பில் சக மாணவர்களுக்குள் சண்டை வந்தால், ஆனந்த் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வான். அவனுடைய பொறுமையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது உண்டு. புதுசோ, பழசோ... நன்கு துவைத்து தூய்மையாய் உடுத்துவான். சுத்தம்தான் நல்ல சுகாதாரத்தைக் கொடுக்கும்னு அவனிடம் இருந்து மற்ற மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்.''

ஏகாம்பரம் (ஆங்கில ஆசிரியர்): ''பெயருக்கு ஏற்ற மாதிரி ஆனந்தமா எல்லாரிடமும் பழகக்கூடியவன். உதவும் பண்பு அவனிடம் அதிகம். படிப்பில் போட்டி இருக்கும்; பொறாமை இருக்காது. அவனுக்குத் தெரிந்த ஒரு செய்தியை எல்லாருக்கும் சொல்வான். பாடம் மட்டும் இல்லாமல் வெளியில் நடைபெறும் செய்திகளையும் வகுப்பில் பேச வேண்டும் என்று சொல்வான். அவனே நிறையப் பொதுச் செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பில் கலந்துரையாடல் நடத்துவான்.'

அருள்சக்தி (தமிழ் ஆசிரியை): 'ஆனந்த் ரொம்பப் பொறுப்பான மாணவன். பள்ளி நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டோடு வேலை செய்வான். முக்கியமாக சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் மும்முரமாக ஈடுபடுவான். ஆசிரியர்களுக்கே ஒரு தூண்டுகோலாக இருப்பான்.'

அல்லிராணி (அறிவியல் ஆசிரியை) : ''சமுதாயச் சிந்தனையும், அக்கறையும் அதிகம். வீண் வம்புக்குப் போறதோ, தேவை இல்லாமல் பேசுவதோ கிடையாது. எல்லாருக்கும் பிடித்த பையன். பாடம் நடத்தும்போது, அவன் கேட்கிற கேள்விகளும் சந்தேகங்களும் மற்ற மாணவர்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்.''

கார்த்திக் (ஒவிய ஆசிரியர்): 'ரொம்பச் சுறுசுறுப்பாக இருப்பான். புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம். படங்களை நன்கு வரைவான். வகுப்பைச் சுத்தமா வைத்துக்கொள்வது, சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவன். எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருப்பான். மொத்தத்தில் ஆனந்த் எல்லாத்துக்குமே உதாரணமானவன்.''

-மா.நந்தினி
படங்கள்: ஜெ.ராம்குமார்