Published:Updated:

சுட்டி மனசு

தொகுப்பு: ஆ.அலெக்ஸ்பாண்டியன் க.பிரபாகரன், கே.அபிநயாபடங்கள்: எஸ்.தேவராஜன், செ.சிவபாலன், ர.அருண் பாண்டியன்

சுட்டி மனசு

தொகுப்பு: ஆ.அலெக்ஸ்பாண்டியன் க.பிரபாகரன், கே.அபிநயாபடங்கள்: எஸ்.தேவராஜன், செ.சிவபாலன், ர.அருண் பாண்டியன்

Published:Updated:

கே.சிவப்பிரசன்னா, 6-ஆம் வகுப்பு, புதுக்கோட்டை.

சுட்டி மனசு
##~##
''எனக்கு ஃப்ரெண்ட்ஸ்கூட இருந்தா, ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் அப்பா அம்மாவுக்குப் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்கன்னு அப்பா என்னோட ஸ்கூலுக்கு வந்து வேற செக்ஷன் மாத்தி ஏற்பாடு செஞ்சிட்டார். அங்கே யாரும் அவ்வளவாப் பேச மாட்றாங்க. சரி டியூஷன்லயாவது என் ஏரியா பசங்க இருக்காங்கனு இருந்தேன். அதுவும் போச்சு. இப்ப டியூஷனும் மாத்திட்டாங்க. நான் எவ்ளோ சொல்லியும் அழுதும் கேக்க மாட்டேன்கிறாங்க. வீட்டுல இருந்தா ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடப் போறேன்னு என்னை ரொம்ப தூரத்தில் இருக்கிற டியூஷன்ல சேர்த்துவிட்டாங்க. நைட் 8.30 மேலதான் வீட்டுக்கு வர்றேன். மார்னிங் வாக்கிங் போறேன்னு சொல்லிட்டு ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கப் போவேன். அதுக்கும் இப்ப எங்க அப்பா பெரிய செக் வெச்சுட்டாரு. மார்னிங் ரன்னிங் பிராக்டீஸ்க்கு சேர்த்துவிட்டாரு. 'படிப்புதான் முக்கியம். ஃப்ரெண்ட்ஸ் எப்ப வேணும்னாலும் கிடைப்பாங்க’னு சொல்றார். எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஐ மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ்!''

கிஷோர் குமார், 7-ஆம் வகுப்பு, திருச்சி.

சுட்டி மனசு

''நான் ரொம்ப அமைதியான டைப் அங்கிள். அதிகமாப் பேச மாட்டேன். ஆனா தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு யாரைப் பாத்தாலும், 'அங்கிளுக்கு ஹாய் சொல்லு, அவங்களோட பேசு’னு தொல்லை பண்றாங்க. நான் சொல்லலைனா, வீட்டுக்கு வந்ததும் திட்டுறாங்க. எனக்குப் பிடிக்கலைனா, விட்டுட வேண்டியதுதானே... எங்க அப்பா பைக் வெச்சுருக்காரு அங்கிள். ஆனா வண்டியில என்னைப் பின்னாடி வெச்சுக் கூட்டிட்டுப் போனதே இல்லை. எப்பக் கேட்டாலும் வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்,  அப்புறம் பார்க்கலாம்னே சொல்றாரு. குட்டிக் குட்டி சீசாக்கள், ஊஞ்சல்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால ஸ்கூல்ல, வெளியில எங்கே பார்த்தாலும் விளையாடுவேன். 'இன்னமும் என்னடா விளையாட்டு சின்னப் புள்ளை மாதிரி?’னு திட்டுறாங்க. லீவ் நாள்ல அவங்க எங்கயாச்சும் போகணும்னா, என்னை மட்டும் வீட்டுல தனியா விட்டுட்டுப் போயிடறாங்க. பத்து நிமிஷத்துல வந்துருவோம்னு போறவங்க, வர்றதுக்கு அரை நாள் ஆகும். ஏன் என்னையும் கூட்டிட்டுப்போனா என்னவாம் அங்கிள்? ஏழாவது படிக்கும்போதே காலையில் ரெண்டு மணி நேரம், சாயந்திரம் ரெண்டு மணி நேரம்னு டைம் டேபிள் போட்டுப் படிக்கச் சொல்றாங்க. என்ன கொடுமை அங்கிள் இது? பத்தாவதை நினைச்சாலே வயித்தைக் கலக்குது. போலீஸ் மாதிரி மிரட்டுறதை எப்பதான் மாத்திக்கப்போறாங்களோ..!''

ஜெ.கனிமொழி, U.K.G. கடலூர்.

சுட்டி மனசு

''நான் ஸ்கூலில் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா, அப்பா ஒரு நாள்கூட ஸ்கூல் பக்கம் வந்ததே இல்லை. என் ஃப்ரெண்ட்ஸுங்க அவங்க அப்பாவோடு வந்து டாட்டா சொல்லி முத்தம் கொடுக்கிறபோது, எனக்குப் பொறாமையாவும், ஏக்கமாகவும் இருக்கும். அப்பாகிட்டக் கேட்டா வேலை இருக்குனு சொல்வாரு. என்னைவிட அவருக்கு வேலைதான் முக்கியமாகப் போச்சுபோல. எங்க அம்மா, காலையிலே ஸ்கூலுக்கு லேட்டாத்தான் கிளப்பிவிடுவாங்க. அதுமட்டும் இல்லாம சாயங்காலம் டியூஷன்ல இருந்தும் என்னை லேட்டாத்தான் கூட்டிட்டு வருவாங்க. நான் டியூஷன்விட்டு வர்ற வழியில் எனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் நிறைய விற்கும். அம்மா இதுவரை ஒரு நாள்கூட வாங்கித் தந்தது இல்லை. கேட்டா ஜுரம் வரும்னு சொல்வாங்க. பெரிய ஆளா ஆனப்புறமா அங்கிள் அதை எல்லாம் தேடிப் பிடிச்சு சாப்பிட முடியும்? அப்போ மட்டும் ஜலதோஷம் வராதா? எனக்குப் பிடிச்ச 'சோட்டா பீம்’ பார்க்க விடவே மாட்டாங்க. ஆனா, அவங்க மட்டும் சீரியல் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. இதைவிட நானும் என் தம்பியும் மண்ல விளையாடினா அம்மாவுக்குப் பிடிக்காது. குடுகுடுனு  ஓடியாந்து  கையிலே  பட்டுனு அடிப்பாங்க. அப்ப எனக்கு அழுகை அழுகையா வரும்!''

மு.லோகேஸ்வரி, 2-ஆம் வகுப்பு, கடலூர்.

சுட்டி மனசு

''எனக்கு பீச்சுக்குப்போய் ஜாலியா ஊஞ்சல் ஆடிக்கிட்டே ஐஸ்கிரீம் சாப்பிடணும்னு ரொம்ப ஆசை. அதோடு எங்க ஊர்ல நடக்கிற சர்க்கஸுக்குப்போய், அங்கே இருக்கிற ஜோக்கர் அங்கிளைப் பார்க்க ஆசை. ஆனா, அம்மா ஒரு நாள்கூட பீச்சுக்குக் கூட்டிட்டுப்போனது இல்லை. கேட்டா, அப்பா வந்து கூட்டிட்டுப் போவாருனு அம்மா சொல்வாங்க. ஆனா, எங்க அப்பா மலேசியாவில் இருக்கிறதால, அவருகிட்ட போன்ல பேசுறப்ப எல்லாம் அழுகை பொங்கிப் பொங்கி வரும். அப்பாவைப் பார்க்கணும்போல இருக்கும். 'நாளைக்கு வர்றேன் நாளைக்கு வர்றேன்’னு அப்பா ஏமாத்திட்டே இருக்காரு. ஸ்கூல்ல நான் எப்பவுமே வேகமா எழுதுவேன். 'பொறுமையா நிறுத்தி நிதானமா எழுது’னு எங்க மிஸ் அடிக்கிறாங்க. ஆனா, வீட்ல 'மெதுவா எழுதாதே... அதுவே பழக்கமாயிரும்’னு அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க. அடிக்கடி கடைக்குப் போகச்சொல்லி தொந்தரவு பண்ணுவாங்க. சாப்பிடுறப்பவும் ஏதாவது கண்டிஷன் போட்டுட்டே இருப்பாங்க. எங்க அப்பா வந்தாதான் என் பிரச்னை தீரும்னு நினைக்கிறேன்!''