Published:Updated:

கிராமத்து விளையாட்டு

ஒரு குடம் தண்ணி ஊத்தி...வீ.சக்தி அருணகிரி இரா.முத்துநாகு

கிராமத்து விளையாட்டு

ஒரு குடம் தண்ணி ஊத்தி...வீ.சக்தி அருணகிரி இரா.முத்துநாகு

Published:Updated:
##~##

சில விளையாட்டுகளில் மூளைக்கு வேலை இருக்கும்... சிலவற்றில் நல்வழிப்படுத்துகிற செய்தி இருக்கும். ஆனால், 'ஒரு குடம் தண்ணீர் எடுத்து ஒரு பூ பூத்தது’ விளையாட்டு முழுக்க முழுக்க ஆனந்த விளையாட்டு. இந்த விளையாட்டைக் கூண்டுக் கிளி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.

இது இருபாலருக்கான விளையாட்டாக இருந்தாலும் பெண் குழந்தைகளே அதிகம் விளையாடுவர். எத்தனை பேர் வேண்டு மானாலும் ஆட்டத்தில் சேரலாம். விளையாட்டைத் துவக்கும்போது, மற்ற விளையாட்டுகளைப்போல் அணி பிரிப்பது இல்லை. விளையாட ஆள் சேர்க்கும் வயதில் சற்றே பெரியவர்கள் கூண்டாகவும், மற்ற அனைவரும் கிளிகளாக... அதாவது பூக்களுக்குத் தண்ணீர் ஊற்ற வரிசையில் நிற்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயரமான இருவர் எதிர் எதிரே நின்று,  கைகளை நீட்டிப் பந்தல்போல் விரல்களால் பிணைத்துக்கொண்டு, ''எல்லோரும் தண்ணீர் எடுத்து வாங்க'' என்பார்கள். வரிசையாக நிற்கும் கிளிகள், ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து வந்து, கைகளைப் பிணைத்து இருக்கும் இருவருக்கும் இடையில் நுழைந்து செல்வார்கள்.

கிராமத்து விளையாட்டு

அப்படி முதல் நபர் நுழையும்போது, 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு ஒரு பூ பூத்ததாம்’ என்றும், இரண்டாவது ஆள் நுழையும்போது 'ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்ததாம்’ எனப் பாடுவார்கள். இதில் பத்தாவதாக நுழையும் ஆளைத் தங்களின் உயர்த்திய கைகளைக் கீழே கொண்டுவந்து, இறுக்கி வளைத்துத் தப்பிக்க முடியாமல் கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

கைகளுக்குள் சிக்கியவர், முண்டி அடித்துத் தப்பிக்க முயற்சிப்பார். ஆனால், அவரை விடாமல் அமுக்கிவிடுவார்கள். இப்படி அமுக்கிவிட்டால், அவர் அவுட். தப்பித்துவிட்டால், அவர் மறுபடியும் வரிசையில் வருவார். விளையாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேரையும்

கிராமத்து விளையாட்டு

கூண்டுக்குள் அழுத்திப் பிடித்து அவுட் செய்தால்தான், ஆட்டம் முடிவுக்கு வரும்.

ஆனால், ஆட்டம் தானாக முடியாது. அதனால், குழந்தைகளுக்கு பசி எடுக்கும் வரையிலோ அல்லது பெற்றோர்கள் வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வரையிலோ ஆட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஒருவரை இருவர் அழுத்திப் பிடிப்பதும், அவர்களிடம் இருந்து திமிறித் தப்பிப்பதும், அதில் ஏற்படும் மகிழ்ச்சியும் இந்த விளையாட்டில் முக்கியமாக இருந்தாலும், வீட்டுத் தோட்டத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் பூச் செடிகள், பூக்கும் தருணத்தில் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற செய்தியையும்  சொல்லுகிறது.