துப்பாக்கி சுடுதல் போட்டியில், உலக அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் இன்னும் வலுவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் அஜய் நித்திஷ். மதுரை, எஸ்.டி.எச். ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் நித்திஷ், குவித்து இருக்கும் பதக்கங்கள் ஏராளம்.

''மூணாவது படிக்கும்போது ஒரு நாள் பீச்ல பலூன் ஷூட்டிங் பார்த்தேன். அப்பாகிட்ட இருந்து திரும்பத் திரும்ப காசை வாங்கிட்டுப்போய் ஒரு கடையில் இருந்த எல்லாப் பலூன்களையும் சுட்டுத் தள்ளிட்டேன். அப்புறம், என் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே நடந்துச்சு. அதிலும் துப்பாக்கி சுடுதலில் நான்தான் முதல் பரிசு வாங்கினேன். அதைப் பார்த்து என்னோட ஆசிரியர், 'இவனை ஷூட்டிங் கிளாஸ்ல சேத்துவிடுங்க’னு அப்பாகிட்ட சொன்னார். அதுக்கு அப்புறம்தான் என் அப்பா, மதுரை ரைஃபிள் கிளப்ல என்னைச் சேர்த்தார்'' என்கிறார் நித்திஷ்.

கடந்த வருடம் சென்னையில் நடந்த 'ஸ்டேட் லெவல் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்ற நித்திஷ், இந்த வருடம் நடந்த போட்டியில் ஐந்து தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.

''எல்லாத்துக்கும் மேல் சமீபத்தில் புனேவில் ஒலிம்பிக் ஷூட்டர் ககன் நரங் நடத்தின, 'கன் ஃபார் க்ளோரி’ நேஷனல் லெவல் போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய மூணு லெவலிலும் கோல்டு மெடல் வாங்கினேன். இதில் இந்தியா முழுக்க 300 பேர் கலந்துகிட்டாங்க. தமிழ்நாட்டில் இருந்து ஏழு பேர் கலந்துக்கிட்டோம். அதில் நான்தான் முதல் இடம் வந்தேன்''. என்று பூரிக்கிறார் அஜய் நித்திஷ்.

இவரது பயிற்சியாளர் வேல்ஷங்கர், ''அஜய் இங்கே வந்து சேரும்போது விளையாட்டுத்தனமா இருந்தான். ஒரு இடத்துல நிக்க மாட்டான். ஆனா, பயிற்சி ஆரம்பிச்சதும் கவனம் முழுக்க அதில் குவிஞ்சுடும். அவனோட பெற்றோரின் அர்ப்பணிப்பும் அஜயின் வெற்றிக்கு முக்கியக் காரணம். கொஞ்சமும் சலிப்பு இல்லாமல், எந்த நேரமும் எந்த இடத்துக்கும் அவனைக் கூட்டிட்டு வருவாங்க. இந்த ஊக்கம் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைச்சா நிறையப் பதக்க வீரர்கள் தோன்றுவார்கள்'' என்கிறார்.

அஜயின் பெற்றோர் பழனிச்செல்வம், ஷியாமளா பேசும்போது, ''அவனைச் சின்ன வயசுல இருந்து எல்லா விளையாட்டிலும் சேர்த்துவிட்டோம். ஸ்கேட்டிங், டென்னிஸ், செஸ், ஸ்விம்மிங், கராத்தே என எல்லாத்திலும் பரிசுகள் வாங்கினான். ஆனாலும் ஏதாவது ஒரு விஷயத்தில் முழுக் கவனம் செலுத்துவதே உலக அளவில் தெரியவைக்கும்னு நினைச்சோம். அப்பதான் ஷூட்டிங் அவனுக்குச் சரியான சாய்ஸ்னு தெரிஞ்சது. இந்த விளையாட்டுக்குத் தேவையான ஒரு துப்பாக்கியை அவனுக்கு வாங்கிக் கொடுத்தோம். நிறையப் பெற்றோரிடம் படிப்பு மட்டுமே வெற்றி என்கிற எண்ணம் இருக்கு. நம் குழந்தைகளுக்குப் பிடிச்ச விஷயத்தில் ஊக்கப்படுத்தணும். அது எந்தத் துறையா இருந்தாலும் நம் ஊக்கம் அவங்களை சாதிக்கவைக்கும்'' என்கிறார்கள்.

''ஷூட்டிங்குக்கு பயன்படுத்தும் உடைகள் ஏழு கிலோ எடை இருக்கும். அதைப் போட்டுட்டு நடக்கிறதே கஷ்டமா இருக்கும். அதே டிரெஸில் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்வேன். இன்றைக்கு உலக அளவில் சாதனைகள் செய்து இருக்கும் எல்லோரும் சிரமங்களைக் கடந்து வந்தவங்கதானே? நாளைக்கு நானும் அந்தப் பட்டியலில் நிச்சயம் இருப்பேன்'' என்று சொல்லும் அஜய் நித்திஷ் வார்த்தைகளில் நம்பிக்கை மிளிர்கிறது!