''டியர் ஜீபா... திருக்குறள் புத்தகத்தில் 496-வது குறளின் பொருள்... 'நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது, கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது’ என்பது. அப்படி என்றால், திருவள்ளுவர் காலத்திலேயே கப்பல் இருந்ததா?''

-பா.மகேஷ்பாபு, திருப்பூர்.

''ஆதி மனிதன், தனது பயணத்தில் குறுக்கிட்ட நீர்நிலைகளைக் கடக்க நினைத்தபோதே கப்பலின் பயன்பாடு தோன்றிவிட்டது மகேஷ். ஒடிந்த மரக் கிளைகள் தண்ணீரில் மிதப்பதைக் கண்ட மனிதன், மரங்களை வெட்டி... அவற்றைக் கொடிகளால் இணைத்து நீரில் மிதக்கவிட்டு அதில் பயணம் செய்தான். பிறகு துடுப்புகளைப் பயன்படுத்தினான். அடுத்து, காற்றை எதிர்த்துச்செல்லும் பாய்மரக் கப்பல்கள் வந்தன. பண்டைய எகிப்தியர்கள் கி.மு.3,000-ம் ஆண்டுகளிலேயே பெரிய பெரிய கப்பல்களை உருவாக்கிப் பயணம் செய்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் மொகஞ்சதாரோ நாகரிகத்தில் கப்பல்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. வள்ளுவர் பிறந்தது 2,000 வருடங்களுக்கு முன்புதான். அதிலும் அவர் வசித்ததாகச் சொல்லப்படுவது கடற்கரைப் பகுதியான மயிலாப்பூரில். அதனால், திருக்குறளில் கப்பல் வந்தது ஆச்சரியமே இல்லை.''

''ஹாய் ஜீபா... என் அப்பா சாப்பாட்டில் இருக்கும் கறிவேப்பிலையைச் சாப்பிடச் சொல்கிறார். அதை எப்படிச் சாப்பிடுவது?''

-வி.ஞானகுரு, திருமுல்லைவாயல்

''கறிவேப்பிலையில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கிறது ஞானகுரு. அது நம் எலும்பின் உறுதிக்கு மிகவும் உதவும். கண், பற்கள் சம்பந்தமான குறைகளுக்கும் நல்லது. கறிவேப்பிலையைப் பார்த்ததுமே எடுத்துக் கீழே போடும் பழக்கத்தை மாற்றிக்கொண்டு, அதை உணவோடு உட்கொள்வது ஆரோக்கியத்தை அளிக்கும். இலையாகச் சாப்பிடக் கஷ்டமாக இருந்தால், அம்மாவிடம் சொல்லிப் பொடியாகவோ, துவையலாகவோ செய்து சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம்.''

''ஹாய் ஜீபா... வீடு, கடை ஆகியவற்றை விற்பதைபோல் ஊர், நாடுகளையும் விற்பார்களா?''

-எஸ்.சிந்துஜா, தேவகோட்டை

''சிந்துஜாவுக்கு எந்த நாட்டை வாங்கிப் போடுவதாகத் திட்டம்? இந்தக் காலத்தில் அதற்கு எல்லாம் சாத்தியம் இல்லை. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'நாடு விற்பனைக்கு’ பிசினஸ் நடந்துகொண்டுதான் இருந்தது. உதாரணமாக, 1854-ல் ரஷ்யாவுக்கும் ஃப்ரான்ஸுக்கும் போர் நடந்தது. அதில் தோற்ற ரஷ்யா, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, தன்னிடம் இருந்த குளுகுளுப் பிரதேசமான அலாஸ்காவை விற்பதாக அறிவித்தது. 1867-ல் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சீவார்ட், 7 லட்சம் டாலருக்கு வாங்கி, அமெரிக்காவுடன் இணைத்தார். அதன் பிறகு அலாஸ்கா பகுதியில் தங்கமும், எண்ணெய்க் கிணறுகளும் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இன்று வரை அமெரிக்காவுக்கு லாபம் தந்துகொண்டு இருக்கிறது அலாஸ்கா.''

''ஹலோ ஜீபா... ஸ்கேட்டிங் கருவியைக் கண்டுபிடிச்சது யார்?

-ஆர்.ஐஸ்வர்யா, பவானி

''பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் மெர்லின் (John joseph merlin) இசைக் கருவிகளைத் தயாரிப்பவர். ரொம்பவும் ஜாலியான மனிதர். ஏற்கெனவே இருக்கும் பொருட்களில் ஏதாவது சிறுசிறு மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார். 1760-ல் ஒரு கண்காட்சி நடந்தது. அங்கே வருபவர்களைக் கவர்வதற்காக, வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தார். தனது காலணியில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, வயலின் வாசித்தவாறே ஹாலில் ஒரு ரவுண்ட் வந்தார். அப்போது, நிலை தடுமாறி அங்கே இருந்த பொருட்கள் மீது மோதிக்கொண்டதில் பெரும் சேதத்தை உண்டாக்கிவிட்டார். பலரும் கேலியாகச் சிரித்தனர். ஆனால், ஸ்கேட்டிங் கருவிக்கு அதுவே ஆரம்பமாக இருந்தது.''

''டியர் ஜீபா... மனிதர்களைப் போலவே விலங்குகளும் உணவை ரசித்துச் சுவைக்குமா?''

-ஞா.கிஷோர், பழனி

''உணவின் சுவையை அறியவைப்பது நாவில் இருக்கும் சுவைமொட்டுகளே. மனிதர்களைவிட அதிகமான சுவைமொட்டுகள் உடைய விலங்குகளும் உண்டு. உதாரணமாக, மனிதனின் நாவில் இருக்கும் சுவைமொட்டுகள் சுமாராக 9,000. ஒரு பன்றியின் நாவில் இருக்கும் சுவை மொட்டுகள் சுமார் 15,000. ஆனால், மனிதர்களின் ரசனையுடன் யாராலும் போட்டியிட முடியாது கிஷோர். காரணம், மனிதன் மட்டுமே ஒரு உணவுப் பொருளுடன் வெவ்வேறு பொருட்களைச் சேர்த்துச் சமைத்து, மேலும் சுவையான உணவாக மாற்றிச் சாப்பிடுகிறான்.''