Published:Updated:

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

Published:Updated:

ஜெனித்தா, 5-ஆம் வகுப்பு, விருதுநகர்.

சுட்டி மனசு !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு வீட்டுல கிளி, பூனை, கோழி வளர்க்க ரொம்ப ஆசை. ஆனா, எங்க அம்மா அதெல்லாம் வளர்க்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. சரி, மீன் மட்டுமாவது வளர்க்கலாம்னா அதுவும் வேண்டாமாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க வீட்டுல வளர்க்கிற பெட்ஸைப் பத்திச் சொல்றப்ப எனக்கு மனசுல ஏக்கமா இருக்கும். சரி, உயிரோடுதான் வளர்க்கக் கூடாது... பிடிச்ச பெட்ஸ் கலர் படங்களையாவது சேர்த்துவைப்போம்னு நிறைய வெட்டி சேர்த்துவெச்சு இருந்தேன். வீடு சுத்தம் பண்றேன்னு அம்மா அதையும் எடுத்துப் போட்டுட்டாங்க. ஏம்மான்னு கேட்டதுக்கு முதுகுல அடிச்சு, 'இனிமே வீட்டுல குப்பை சேர்க்காதே’னு சத்தம் போட்டாங்க. ஆனா, நான் இப்போ அவங்களுக்குத் தெரியாம சேர்த்துவெக்கிறேன் அங்கிள்!''

கமலி, 1-ஆம் வகுப்பு, திருச்சி.

சுட்டி மனசு !

'தினமும் காலையில் அம்மா என்னை அதட்டி மிரட்டிதான் எழுப்பிவிடுறாங்க. என்னை நல்லாத் தூங்கவேவிடுறதில்லை. 'கொஞ்ச நேரம் தூங்குறேன்’னு சொன்னா, முதுகுலயே அடிப்பாங்க. அப்பவே எனக்கு மூட் அவுட் ஆகிடுது. வலி தாங்காம அழும்போது மட்டும் என்னைத் தூக்கிவெச்சுக் கொஞ்சுவாங்க. இதை அடிக்கும் முன்னாடியே யோசிச்சு இருக்கலாம்ல?

ஸ்கூல்ல படிச்சுட்டு அப்பதான் வீட்டுக்கு வருவேன். வந்த உடனே 'ஹோம் வொர்க் எழுது’னு டார்ச்சர் பண்ணுவாங்க. என்னை ரெஸ்ட் எடுக்க, விளையாட விட மாட்டாங்க. அப்புறம், பைக்ல போறப்ப முன்னாடி உட்காரவைக்காம, அப்பாவுக்கு நடுவுல உட்காரவெச்சுக்கிறாங்க. இடைஞ்சலா இருக்குனு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இதனால, வண்டியில் போகும்போது வேடிக்கை பார்க்கவே முடியலை. 'நீ நல்லா மார்க் வாங்கினா, சாக்லேட் வாங்கித் தர்றேன்... புது பேக் வாங்கித் தர்றேன்’னு சொல்வாங்க. ஆனா, அவுங்க சொன்ன மார்க்கைவிட அதிகமா எடுத்தும் வாங்கித்தர மாட்டாங்க. நீங்களே சொல்லுங்க... இது சரியா?'

அ.மகேஷ், 1-ஆம் வகுப்பு, தேனி.

சுட்டி மனசு !

''மழைல நனைஞ்சுக்கிட்டே விளையாடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும் அங்கிள். ஆனா, அம்மா என்னை விட மாட்டாங்க. உடம்புக்கு முடியாமப் போயிரும்னு திட்டு வாங்க. வெளியில இருக்கிற என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடப் போயிருவேன்னு வீட்டு கேட்டை எப்போதும் பூட்டியே வெச்சுருவாங்க. ஸ்கூல் போகும்போதும் அப்பாகூடப் போறதால என் ஃப்ரெண்ட்ஸ்கூட பேசவே முடியல. ரொம்ப போர் அடிக்குது அங்கிள்!''

கு.கீர்த்தனா, 4-ஆம் வகுப்பு, புதுச்சேரி.

சுட்டி மனசு !

''எனக்கு அழகான டிரெஸ், கம்மல், வளையல்னு நிறைய நகைகள் புடிக்கும். ஆனா, ஸ்கூல்லதான் நகை போட அனுமதிக்க மாட்டாங்களே. அதனால் போட்டுகிட்டுப் போக முடியாத வருத்தம் தினமும் இருக்கும். அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலைக்குப் போறதுனால, நான் தனியாத்தான் ஸ்கூல் போறேன். நானேதான் டிரெஸ் பண்ணிக்கணும். எனக்குப் பிடிக்காத சாப்பாடா இருந்தாலும் அதையேதான் சாப்பிடணும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா, அப்பாவோட ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டு ஸ்கூல் வர்றாங்க, போறாங்க. நான் எப்போ அவங்க மாதிரி சந்தோஷமா இருக்கப்போறேனோ தெரியல. ஸ்கூல்விட்டு வரும்போதும் வீட்டுல யாரு முகத்தையும் பார்க்க முடியாம அழுகை அழுகையா வருது அங்கிள்!''

தொகுப்பு: வீ.சக்தி அருணகிரி,
நா.சிபிச்சக்கரவர்த்தி, ஆ.நந்தகுமார், மா.நந்தினி,
படம்: செ.சிவபாலன்