Published:Updated:

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

 ##~##

'வா, வந்து தாக்கு’ என்ற போர்க் குரலோடு ஆங்கிலேயரைத் தாக்கிய இளம் வீரன்; இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியில் தீப நெய்யாய் விழுந்த தியாகி பகத் சிங். அவர் இன்று நேரில் வந்தால்...

கோவில்பட்டி, எடுஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்துக்குள், வேனில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கினார்கள், சின்னச் சின்ன பகத் சிங்குகள். வழக்கமான யூனிஃபார்மில் வந்த மாணவ-மாணவிகள் அவர்களை மிரட்சியுடன் பார்த்துச் சிலையாய் நின்றனர். விளையாட்டு ஆசிரியரின் அரற்றும் விசில் சத்தம்கூட அவர்களை அசைக்க முடியவில்லை. அப்போது ஒரு பகத் சிங், ''நான் யார் தெரியுமா?'' என்று ஒரு யூனிஃபார்மில் இருந்த மாணவனிடம் வீராப்பாய் க்கேட்க, ''ஆமா... நீ யாருடா?'' என்று அவன் திருப்பிக் கேட்டான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சொல்லத் தெரியாமல் பக்கத்தில் நின்றவனைப் பார்க்க, ''பகத் சிங்குனு சொல்லுடா'' என்றதும் ''அவனுக்கே தெரியலடா...'' என்று அங்கே கேலிச் சிரிப்பின் ஒலி எழுந்தது.

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

''என்னலே, ராணுவ வீரனாட்டம்? என்று கேட்ட தன் தாத்தாவிடம், ''நாங்க எல்லாம் நாட்டுக்காகப் போராடப்போறோம்லே...'' என்று ஒரு பகத் சிங் சொன்னதும், ''பாரேன்... ஏம் பேரன் என்ன மாதிரியே வருவாம்லே...'' என்று சொல்ல, அவரை அதோடு விடாமல், பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து வந்து இறக்கிவிடவைத்தான் இன்னொரு பகத் சிங்.  

பல சிறுவர்களுக்கு பகத் சிங் உடை அணிவிப்பதற்குள், அவர்களின் குறும்புகளை அடக்க முடியாமல், ஆசிரியைகள் ரொம்பவே திணறிப்போனார்கள்.

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

ஒருவனுக்கு மீசை வைத்துவிட, அதை இன்னொருவன் அழித்துவிட, அதைக் கழுவிச் சுத்தம்செய்து வரைந்துவிடுவதற்குள், இன்னொருவனின் மீசை வியர்வையில் கரைந்தது. இப்படி மீசைகளின் சேட்டைகள் முடிந்த பின்...

காக்கி உடையில் கனகச்சிதமாய்த் தொப்பியுடன் மீசை, அப்படியே பகத் சிங்கின் கம்பீரம் எனச் சுட்டிகள் அணிவகுத்தனர்.

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

பெற்றோர்களுக்கு அனுமதி இல்லாததால், பகத் சிங் தோற்றத்தில் தம் பிள்ளைகளைக் காணும் ஆவலை போனில் கேட்டுத் தொந்தரவு செய்ய, அவர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துப்போனார் ஓர் ஆசிரியை.

கூட்டத்துக்குள் ஒரு பகத் சிங் அழுதுகொண்டு இருக்க, காரணம் கேட்டபோது... ''அவனுக்குத் துப்பாக்கி வேணுமாம் மிஸ்'' என்றனர். ''பிரின்ஸி சாருகிட்ட சொல்லி இருக்கேன். சிவகாசியில இருந்து இப்போ கொண்டு வருவாரு, நீ அழாதே!'' என்று சொன்னவுடன்தான் அழுகையை நிறுத்தினான் அந்த பகத் சிங்.

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !

சிறிய வயதில் அளவற்ற தேச பக்திகொண்டு, ஆங்கிலேயரைத் தமது அஞ்சா நெஞ்சத்தால் கலங்கவைத்தவர் பகத் சிங். விளையாடும் பருவத்தில் நாட்டுக்காக சிறைச்சாலை சென்று, தூக்குக் கயிறைத் துணிந்து ஏற்றவர் பகத் சிங். வரலாறு மறக்க முடியாத அந்த இளம் வீரனின் தேசப்பற்றில் நாமும் பற்றுவைப்போம்!

அவதார் - பராக் பராக் பகத்சிங் சுட்டிகள் !