Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !
##~##

''டியர் ஜீபா... உலகிலேயே உயரமான மனிதர் யார்? குள்ளமான மனிதர் யார்?''

 -சு. அருள் செல்வராஜ், சென்னை.

''இப்போதைக்கு துருக்கி நாட்டின் சுல்தான் கோசன் (Sultan kosen) என்பவர்தான் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறார். இவரது உயரம் எட்டு அடி மூன்று அங்குலம். உலகின் குள்ளமான மனிதர்களில், நிறையப் பேர் கின்னஸில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்ஜி (Jyothi amge). 18 வயதாகும் இவரது உயரம், இரண்டு அடி மூன்று அங்குலம் மட்டுமே. அதிக வயதானவர்களில் குள்ளமான மனிதராக கின்னஸ் சாதனை படைத்து இருப்பவர், நேபாளத்தின் ரிம்கோஹ்லி (Rhimkholi). 21.5 அங்குலம் இருக்கும் இவரது வயது 72.

மை டியர் ஜீபா !

''ஹலோ ஜீபா... நாம் கனவு காணும்போது நமது கண்கள் அதைப் பார்க்குமா?''

   -கு.நந்தினி, தேவராயன்பாளையம்

''நமது மூளையில் படிந்து இருக்கும் பல எண்ணங்களின் வெளிப்பாடே கனவு. அப்படி எண்ணங்கள் வெளிப்படும்போது நமது விழிகள் முன்னும் பின்னுமாக அசைந்து, அந்தச் செயலைப் பின்தொடரும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு விழிகளின் வேக இயக்கம் (Rapid eye movement) என்று பெயர். இப்படி அதிகபட்சம் 20 நிமிடங்கள் விழிகள் அந்த நிகழ்ச்சியைக் கவனிக்கும். இதில் ஒரு சுவையான விஷயம் என்ன தெரியுமா நந்தினி? கனவு தோன்றும் இடமும் மூளைதான். நாம் கண் விழித்த பிறகு 'அம்மா இன்னிக்கு என் கனவுல...’ என்று சொல்லவைப்பதும் அதே மூளைதான்.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் என்கிறார்கள்... அப்புறம் எதற்காகப் பயிர்களுக்கு உரம் இடுகிறார்கள்?''

-ஆர்.சரண்யா, மயிலாடுதுறை

''ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சூரிய ஒளி, வாயு மண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, பூமியில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் ஆகியவற்றால் இலைகளில் உள்ள பச்சையத்தில் தாவரங்கள் தயாரிக்கும் உணவுதான் கார்போ ஹைட்ரேட். தாவரங்கள் தனக்கு வேண்டிய தாது உப்புக்களைப் பூமியில் இருந்தே பெற்றுக் கொள்ளும். பூமியில் இடத்துக்கு ஏற்றவாறு இவற்றில் சில சத்துகள் குறைவாக இருக்கும். அந்தந்த மண்ணுக்கு ஏற்ற இடத்தில் தானாக வளரும் தாவரத்துக்கு உரம் தேவை இல்லை. அதே தாவரத்தை ஓர் இடத்தில் இருந்து எடுத்து வந்து இன்னோர் இடத்தில் வைக்கும்போது, சத்துக் குறைபாடு ஏற்படும். அப்போது அந்தச் சத்து நிறைந்த இயற்கை அல்லது செயற்கை உரம் தேவைப்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் ஒரே மாதிரியான தாவரத்தைத் தொடர்ந்து பயிர் செய்யும்போது, அந்த மண்ணில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும். இதனாலும் உரம் தேவைப்படுகிறது.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... கன்னத்தில் கைவைத்தால் தூக்கம் வரும்னு சொல்றாங்களே நிஜமா?''

-எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி

''கன்னத்தில் கைவைப்பதற்கும், தூக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சௌமியா. அப்படித் தூக்கம் வரும் என்றால், தூக்க மாத்திரையே யாருக்கும் தேவைப்படாதே. எந்த வேலையும் செய்யாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு இருந்த யாராவது இப்படிக் 'கிளப்பி’ இருக்கலாம். அந்தப் புண்ணியவானை அந்த இடத்தைவிட்டுக் கிளப்பி, சுறுசுறுப்பாக வேலை செய்யவிட்டால், தூக்கம் போய்விடும்.''

''ஹலோ ஜீபா... இருபத்தொன்பதில் இருந்து 29-ஐக் கழித்தால் மீதி 9 வரும் எப்படி? சொல்லு பார்ப்போம்!''

-ந.பிருந்தா, கழுக்காணிமுட்டம்.

''அடடா பிருந்தா... இது எல்லாம் ஜுஜூபி புதிர். சொல்றேன் பார்த்துக்க...இரு பத்தொன்பது (19 19= 38). அதில் இருந்து 29-ஐ கழித்தால் 38-29= 9. எப்பூடி?!

அடுத்த கட்டுரைக்கு