Published:Updated:

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

மா.நந்தினி, தெ.தீபிகா,படங்கள் : செ.சிவபாலன், ஜெ.வேங்கடராஜ்

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

மா.நந்தினி, தெ.தீபிகா,படங்கள் : செ.சிவபாலன், ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

எங்கள் தமிழ் ஐயா !

 ##~##

'எங்களுக்குத் தமிழ் மீது ஆர்வம் மிகுதியாகச் செய்தவர், சிவசுப்ரமணி ஐயாதான்’ என்று நெகிழ்கிறார்கள், சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இ.இளங்கோதை: ''ஆங்கில இலக்கணத்தைவிட தமிழ் இலக்கணம் கஷ்டம்னு சொல்வாங்க. ஆனா, எங்க சிவசுப்ரமணி ஐயா இலக்கணம் நடத்தும்போது, சினிமா பாடல்களோடும், நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளோடும் ஒப்பிட்டு நடத்துவார். தமிழ் இலக்கியம் நடத்தும்போது,  அந்தக் காலத்துக்கே கூட்டிட்டுப்போயிருவார்.''

ஆர்.விஷ்ணுகுமார்: ''சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழா நேரத்துல தமிழில் நிறையப் போட்டிகள் வைப்பார். தமிழைத் திருத்தமாகவும் தெளிவாகவும் பேசுறதுக்கு, அவரோட வகுப்பைத் தவறாமல் கவனித்தாலே போதும். செய்யுளைப் பாட்டு வடிவில் மெட்டு அமைச்சுப் பாடி நடத்தி, அசத்துவார்.''

ஆர்.லெட்சுமணன்: ''எனக்கு ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கவே பயமாக இருக்கும். என்னைத் தைரியப்படுத்தியது ஐயாதான். இப்ப எந்த ஆசிரியரா இருந்தாலும் தயங்காமப் பேசுறேன்.  விழாக்களில் அவர் தேசப்பற்றுப் பாடல்களைப் பாடும்போது சிலிர்ப்பா இருக்கும்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

ஆர்.ராமன்: ''ஐயா வகுப்பில் நாங்கள் தூய தமிழில்தான் பேசுவோம். நோட்டு, பேனா இல்லாத பசங்களுக்கு அவங்க சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பாங்க. பள்ளி இலக்கிய விழாக்களில் மாணவர்கள் மட்டும் இல்லாமல், ஆசிரியர்களையும் கலந்துக்கவைப்பாங்க.''

நிஸ்மினா பர்வீன்: ''சங்க இலக்கியத்தைச் சொல்லிக்கொடுக்கும்போது, நம்ம வாழ்க்கை முறையைப் பத்தியும், நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் அருமையாச் சொல்வார். அவருக்குப் பொம்மலாட்டக் கலை தெரியும். அதை எங்களுக்கும் சொல்லித் தருவார்.''

அனிதா என்றால் அன்பு !

அன்புகாட்டும் விதத்திலேயே ஆசிரியர்களையும் சக மாணவிகளையும் கட்டிப் போட்டிருப்பவர், சென்னை, செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி அனிதா. இவரிடம் அப்படி என்னதான் இருக்கிறது?  

பானுமதி (தமிழ் ஆசிரியை): ''அமைதி, அன்பு, அறிவு ஆகியவற்றின் அடையாளம், எங்கள் அனிதா. தமிழைப் பிழை இன்றிப் பேசுவதிலும் எழுதுவதிலும் அவளுக்கு நிகர் அவளேதான். ஆசிரியர்களைப் பார்த்ததும் புன்சிரிப்போடு சொல்லும் வணக்கத்துக்காகவே அவள் எதிரில் அடிக்கடி வரலாம்னு தோணும்.''  

கஸ்தூரி (ஆங்கில ஆசிரியை): ''ஒரு நல்ல மாணவராக இருக்க, நிறைய மார்க் எடுக்கணும் என்கிற அடிப்படை எதுவும் இல்லை. படிக்கும் ஆர்வம்தான் முக்கியம். அந்த வகையில், அனிதா குட் ஸ்டூடன்ட். ஆங்கில வார்த்தைகளை மிகவும் அழகாக உச்சரிப்பாள். அவளுக்கு ஒரு வார்த்தை புரியலைன்னா, உடனே டிக்ஷ்னரியைப் புரட்டிப் பார்த்து அர்த்தம் கண்டுபிடிச்சுட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பாள். ஆர்வம் இருக்கும் எல்லாருமே அனிதா மாதிரி குட் ஸ்டூடன்ட்ஸ்தான்.''

குட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்

பிரேமா (சமூக அறிவியல் ஆசிரியை): ''எல்லோரிடமும் அன்பாப் பழகுறதும் தன்னால முடிஞ்ச உதவியைச் செய்றதும் அனிதாகிட்ட இருந்து மத்தவங்க கத்துக்க வேண்டிய குணங்கள். யாராவது லஞ்ச் கொண்டுவரலைனா, தன்னோட சாப்பாட்டைப் பகிர்ந்துப்பா. அவளோட நிதானத்தைப் பார்த்தா, ஆச்சர்யமா இருக்கும். அவளோட விடைத்தாள், ஆரம்பம் முதல் இறுதி வரை முத்து முத்தான கையெழுத்துடன் ஒரே மாதிரியா இருக்கும். டென்ஷனே இல்லாம சுறுசுறுப்பா, திறமையா செயல்படுவா.''

சஹாய மேரி (உடற்கல்வி ஆசிரியை): ''அனிதா விளையாட்டிலும் கில்லி. எல்லாவிதமான போட்டிகளிலும் ஆர்வமாக் கலந்துப்பா. வெற்றிகளைப் பெருசாக் கொண்டாடவும் மாட்டாள். தோல்வி அடைஞ்சாலும் சோர்ந்துவிடாமல் இருப்பாள். வகுப்பை ஒழுக்கமா வழிநடத்த உதவுவாள். சக மாணவிகளை அன்பாலேயே அடக்கிடுவாள்.''