##~##

ரியாஸ் பள்ளிக்குப் போய்க்கொண்டு இருந்தான். வழியில் ஒரு கடை வாசலில் சுரேஷ் 'கேங்’ அரட்டை அடித்தவாறு நின்று இருந்தது. ரியாஸுக்கு சுரேஷ் கோஷ்டியில் சேர வேண்டும் என ரொம்ப நாள் ஆசை. சுரேஷையும் அவனுடைய நண்பர்களையும் பார்த்தாலே, எல்லா மாணவர்களும் பயப்படுவார்கள். அவர்களிடம் அப்படி ஒரு கெத்து. ரியாஸைப் பார்த்ததும் சுரேஷ் கை அசைத்து அழைத்தான்.

'வா ரியாஸ். எதுக்கு ஸ்கூலுக்குப் போய் வேஸ்ட் பண்றே? வர்றியா பார்க்குக்குப் போவோம். அங்கே கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு நூன் ஷோ  போகலாம்' என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரியாஸுக்கு மனம் குழம்பியது. அவனுக்கு வகுப்பை கட் அடிக்கப் பிடிக்கவில்லை. தன் மீது நம்பிக்கைவைத்து இருக்கும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் ஏமாற்ற இஷ்டம் இல்லை. அதே சமயம் சுரேஷின் நட்பைப் பெறுவதற்கு கிடைத்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தையும் இழக்க மனம் வரவில்லை. ரியாஸ் கொஞ்சம் யோசித்தான். பிறகு, ''வேணாம். நீங்க போய்ட்டு வாங்க'' என்று சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

உங்களை தெரியுமா உங்களுக்கு ?

இந்தச் சம்பவத்தில் இருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?

சுரேஷ§ம் அவனது நண்பர்களும் ரியாஸின் சம வயது உள்ளவர்கள். பள்ளியை கட் அடித்துவிட்டு அவர்களுடன் சினிமாவுக்குப் போகலாமா என்று ரியாஸுக்கு ஒரு சஞ்சலம் வந்தததே அதுதான் சம வயது சவால். ஆங்கிலத்தில் பீர் பிரஷர் (Peer Pressure)..

உங்களை தெரியுமா உங்களுக்கு ?

'அவன் நன்றாகப் படிக்கிறான். நிறையப் போட்டிகளில் பரிசு வாங்குகிறான். அதைப் போல நாமும் பெயர் வாங்க வேண்டும்’ என்று ஒருவருக்குத் தோன்றலாம். இது வரவேற்கத்தக்கது. ஆனால், தவறு செய்யும் ஒருவனைப் பார்த்து, தானும் அதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அபாயமானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கும் முடிவில்தான் நமக்கான சவால் இருக்கிறது.

சம வயது உள்ளவர்களுடன் நமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள் கிறோம். நமக்கும் அவர்களுக்கும் ஒரே மாதிரியான விருப்பங்களும் வெறுப்புகளும் இருப்பதை உணர்கிறோம். அவர்கள் நம் நண்பர்களாக இருக்கலாம். நம் நடத்தையில் அவர்கள்தான் வலுவான மாற்றத்தை ஏற்படுத்து கிறார்கள்.

பொதுவாக, வளரிளம் பருவத்தில் (adolescence) சம வயது நண்பர்கள் குடும்பத்தினரைவிடவும் மிக முக்கியமான நபர்களாகத் தெரிவார்கள். இந்தச் சம வயது நண்பர்கள் நம்மை ஏற்றுக்கொள்வதை மிகவும் முக்கியமானதாக நினைப்போம்.

நீங்கள் உங்கள் சம வயதுக் குழுவினருடன் இருக்கும்போது, எதைப் பற்றிப் பேச விரும்புவீர்கள்?

உங்களை தெரியுமா உங்களுக்கு ?

விளையாடுவதுபற்றி, சினிமா, முதல் நாள் பார்த்த கிரிக்கெட் மேட்ச், புதிதாய் வந்த வீடியோ கேம்ஸ் மேலும் படிப்புபற்றி...

உங்கள் தோழர் அல்லது தோழி செய்யச் சொல்வதை நீங்கள் செய்வீர்களா?

'இல்லை’, 'எப்போதாவது’, 'அடிக்கடி’, 'எனக்குப் பிடிக்காவிட்டாலும்’ இதில் ஏதாவது ஒன்றுதான் உங்கள் பதில்.

நீங்கள் செய்ய விரும்பாததை எப்போதாவது உங்கள் நண்பர்கள் வற்புறுத்திச் செய்யவைத்து இருக்கிறார்களா? அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

கஷ்டமாக இருந்து இருக்கலாம். அந்தச் சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல் இருந்து இருக்கலாம். அவர்கள் சொல்வதை நீங்கள் அலட்சியப்படுத்தி இருக்கலாம். சம்பந்தப்பட்ட நண்பரையும் சூழ்நிலையையும் நீங்கள் தவிர்த்து இருக்கலாம்.

மேலே சொன்னவற்றில் எது நல்லது என்பதை யோசித்துப்பாருங்கள்.

இந்தச் சம வயது சவால், சில சமயங்களில் நல்ல விதமாகவும் அமைவது உண்டு. பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டீம் அமைத்தல், கூடிப் படித்தல், நம் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் முனைப்பு காட்டுதல் போன்றவை சம வயது நண்பர்கள் மூலமே கிடைக்கின்றன.

வளரிளம் பருவத்தில் தோழர்களை உருவாக்கிக்கொள்வது என்பது ஒரு வளர்ச்சிக் கட்டம். இதுதான் உங்கள் பிற்கால ஆளுமையை ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கை வகிக்கும்.

'உன் நண்பர்களைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்று ஒரு பழஞ்சொல் உண்டு. சம வயதுக் குழுவினரை உருவாக்கிக்கொள்வதில் பல காரணிகள் உண்டு. ஒரே விதமான ஆர்வங்கள், பொழுதுபோக்குகள், கருத்துகள் இருப்பது. வாழ்க்கையைப் பற்றி ஒரே மாதிரி யோசிப்பது. ஒன்றாகச் சேர்ந்து பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பது. ஒருவரோடு இருக்கும்போது நாம் சந்தோஷமாக உணர்வது.  

உங்களை தெரியுமா உங்களுக்கு ?

வளரிளம் பருவத்தில் சம வயதுக் குழுவினர்களால் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதங்களிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எப்படி?

ஷிபள்ளிக்கு ஒழுங்காகப்போவது, பள்ளிச் செயல்பாடுகளில் பங்கெடுப்பது.

ஷிபடிப்பில் ஒரு பெரிய குறிக்கோளை வகுத்துக்கொண்டு அதை நோக்கிச் செல்வது.

ஷிவிளையாட்டுக் குழுக்கள் அல்லது ஓட்டப் பந்தயம், பள்ளி இசைக் குழுவில் சேர்வது, பள்ளி விவாத மேடைகளில் பங்கெடுப்பது.

ஷிபிற்கால வாழ்வுக்கான இலக்குகளை  நிர்ணயிப்பது. தன் வாழ்க்கையைப் பற்றி தானே முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது.

ஷிதேவைப்படும் சமயங்களில் பிறரின் உதவியையும் கேட்டு வாங்கிக்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்வது.

இவை எல்லாமே சம வயதில் கிடைக்கும் நேர்மறை விஷயங்கள்.

பள்ளிக்கு கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போவது.

நண்பர்களோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது, பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்களுக்கு பணிந்து நடக்காமல் இருப்பது.

தேவை இல்லாத வயதில் 'எனக்கு மொபைல் போன் வாங்கிக் கொடு’ போன்ற கோரிக்கைகளை வைப்பது.

ராகிங் செய்வது, மாணவியரைக் கேலிசெய்வது, பலவீனமான மாணவர்களை வம்புக்கு இழுப்பது...

இவை எதிர்மறை விஷயங்கள்.

மொத்தத்தில் இந்தச் சம வயது சவாலை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே நம் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

நீங்கள் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

(கற்போம்)  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism