Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
மை டியர் ஜீபா !
##~##

''ஹலோ ஜீபா... நீண்ட நாட்கள் இருக்கும் காகிதம் பழுப்பு நிறமாக மாறிவிடுவது ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  -வி.மகேஷ்குமார், சோமனூர்.

மை டியர் ஜீபா !

''காகிதத்தைத் தாயாரிக்கும்போது செல்லுலோஸ் எனப்படும் காகிதக் கூழ் உடன் சில ரசாயனப் பொருட்களைச் சேர்ப்பார்கள். அப்போதுதான் அந்தக் காகிதம் வெண்மை நிறத்தை அடையும். நாட்கள் செல்லச் செல்ல இந்த ரசாயனம் சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்களால் ஆவியாகிவிடும். அதனால், காகிதம் வெண்மை நிறத்தை இழப்பதுடன் ஒட்டுத் தன்மையையும் இழந்து உடைய ஆரம்பிக்கிறது.''

''டியர் ஜீபா... மனிதர்களுக்கு வயதானால் முடி ஏன் வெள்ளையாக மாறுகிறது?''

-சசி குமார், சுரேஷ் குமார், கோவை.

மை டியர் ஜீபா !

''நம் உடலில் சில வகை நிறமிகள் உள்ளன. இவையே கல்லீரல், இதயம், தோல் என ஒவ்வொரு பகுதிக்கும் அங்கே இருக்கும் செல்கள் மூலம் நிறத்தைக் கொடுக்கின்றன. இவற்றில் மெலனின் எனப்படுவது கறுப்பு நிறத்தை உருவாக்குகிறது. நம் மயிர்க்கால்களின் நடு அடுக்கில் உள்ள செல்கள், மெலனில் இருந்து கறுப்பு வண்ணத்தைத் தயாரித்து, முடியைக் கருமை ஆக்குகிறது. வயது ஆக ஆக, இந்தச் செல்கள் உருவாவது குறைவதால், தலைமுடி வெள்ளை நிறத்தை அடைகிறது. சிலருக்கு ஊட்டச் சத்து மற்றும் மரபணுப் பிரச்னையால், இளம் வயதிலேயே இந்தச் செல்கள் குறைவாக உருவாகும். அதுதான் இளம் நரைக்குக் காரணம்.''

''டியர் ஜீபா... எரிமலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா?''

- சி.ஐஸ்வர்யா, எலவமலை.

மை டியர் ஜீபா !

''எலவமலையில் இருந்து எரிமலைப் பற்றி சிந்திக்கும் ஐஸ்வர்யாவுக்கு முதலில் ஒரு சபாஷ். எரிமலையில் இருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் அப்படி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அதேபோல், ஹவாய் தீவில் கிலாவ் என்ற எரிமலை இருக்கிறது. அங்கே மண்ணுக்கு கீழே கிட்டத்தட்ட 700 டிகிரி ஃபாரன்ஹீட் நிலையில் இருக்கும் வெப்ப நீராவியைக் குழாய்கள் மூலம் எடுத்து மின்சாரமாக மாற்றுகிறார்கள். ஹும்... இங்கேயும் ஊருக்கு ஒரு எரிமலை இருந்தால், கரன்ட் பிரச்னை இருக்காதேனு தோணுதோ?''

''மை டியர் ஜீபா... நாணய முறையை முதல் முதலில் எங்கே கண்டுபிடிச்சாங்க?''

-எஸ்.சதீஷ், சேலம்.

மை டியர் ஜீபா !

''துருக்கியில் பழங்காலத்தில் அனடோலியா (கிழிகிஜிளிலிமிகி) என்று அழைக்கப்பட்ட இன்றைய லிடியாவில்தான் கி.மு.700-ல் முதல் முறையாக உலோகத்தால் ஆன நாணயம் வெளியிடப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. அப்போது லிடியாவை ஆட்சி செய்த கயிகாஸ் என்ற மன்னர் வெளியிட்ட இந்த நாணயங்கள் 25 சதவிகிதம் வெள்ளியும் 75 சதவிகிதம் தங்கமும் கலந்து செய்யப்பட்டன. அவரை விதை வடிவில் இருந்தன. பிறகுதான் மற்ற நாடுகளிலும் உலோக நாணயங்களை வெளியிட ஆரம்பித்தார்கள்.''

''ஹாய் ஜீபா... மழை நீர் சுத்தமானதுதானே? பிறகு ஏன் மழையில் நனைந்தால் சளி பிடிக்கிறது?''

- கே.பிரபாகர், திண்டுக்கல்.

மை டியர் ஜீபா !

''வானில் இருந்து கிளம்பும் மழை நீர் மிகவும் சுத்தமாகத்தான் இருக்கும் பிரபாகர். காற்று மண்டலத்தைத் தாண்டி கீழே வர வர, காற்றில் கலந்து இருக்கும் தூசிகள், பாக்டீரியா மழை நீருடன் சேருகின்றன. போதாக்குறைக்கு நகர்ப் பகுதியில் தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் வெளியேறும் புகையில் இருக்கும் ரசாயனக் கழிவுகள் காற்றில் கலந்து, மழை நீரை மேலும் அசுத்தம் செய்கின்றன. அந்த நீரில் நனையும்போது சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. உயரமான மலைப் பகுதியில் பெய்யும் மழையில் அசுத்தம் இருக்காது.''

மை டியர் ஜீபா !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism