Published:Updated:

சிக்கு...புக்கு...குக்கு !

சிக்கு...புக்கு...குக்கு !

பிரீமியம் ஸ்டோரி

ஹாய் சுட்டீஸ்...  காலிஃப்ளவர், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை வைத்து, இரண்டு ரெசிப்பிக்களை வசந்தா விஜயராகவன் இங்கே சொல்லித் தருகிறார். அம்மா கிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி சாப்பிட்டுப் பாருங்க! டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, இவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களையும் அவற்றின் சிறப்புகளையும் விளக்குகிறார்.

சிக்கு...புக்கு...குக்கு !

காலிஃப்ளவர் குல்ச்சா!

##~##

தேவையானவை: துருவிய காலிஃப்ளவர் - அரை கப், மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப், உப்பு - தேவையானது, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையானது.

செய்முறை: துருவிய காலிஃப்ளவர், சிறிது உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் இவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும்.  கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, 2 அல்லது 3 மணி நேரம் ஊற விடவும். மாவைச் சிறு உருண்டை அளவு  எடுத்து, கைகளால் பரத்தி, நடுவில் வதக்கிய காலிஃப்ளவர் சிறிது வைத்து, உருண்டையை மறுபடியும் மூடி, வட்டமாகத் தேய்த்து, தோசைக் கல்லில் இருபுறமும் நெய்விட்டு வாட்டி எடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல்    - 1000 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 145 கிராம்
ப்ரோட்டீன் - 27.5 கி
கொழுப்பு - 34 கி
கால்சியம் - 137 மில்லி கிராம்
இரும்பு - 11மி.கி
கொலின் - 127 மி.கி
பீட்டா கரோட்டின் - 825 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 72 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: காலிஃப்ளவரில் கார்போஹைட்ரேட் நிறைய கிடைக்கும். கொழுப்புச் சத்து, புரோட்டீன் ஆகியவையும் தேவையான அளவு கிடைக்கிறது. இது ஒரு சமச்சீர் உணவாகும். இதில் ரத்தத்தை உறையவைக்கும் சக்தி இருப்பதால், விளையாடும்போது கீழே விழுந்து அடிபடும் குழந்தைகளுக்கு, ரத்தம் சீக்கிரம் உறையும். காலிஃப்ளவரை அதிகம் சேர்த்துக் கொள்வதால், குடலில் ஏற்படும் கேன்சரைத் தவிர்க்கலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குண்டாக இருப்பவர்கள் நிறைய சாப்பிடலாம்.  

எள் அவல் பொரி வெல்ல சிக்கி!

சிக்கு...புக்கு...குக்கு !

தேவையானவை: அச்சு வெல்லம் அல்லது பொடித்த மண்டை வெல்லம் - அரை கப், எள் - ஒரு கப், அவல் பொரி - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துண்டுகள் - கால் கப், ஏலப்பொடி - அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில், சிறிது சிறிதாக எள்ளைப் பொரித்து எடுக்கவும். (பட படவென்று வெடிக்கும் நேரம்)

சிக்கு...புக்கு...குக்கு !
சிக்கு...புக்கு...குக்கு !

அதேபோல், அவலையும் பொரித்து எடுக்கவும். தேங்காய்த் துண்டுகளை லேசாக வதக்கிக் கொள்ளவும். கடாயைச் சூடாக்கி, அதில் வெல்லத் துருவலைப் போடவும். வெல்லம் இளகி, (கொஞ்சம் கூட தண்ணீர் விடக்கூடாது) 4 அல்லது 5 கொதி வரும்போது, தேங்காய்த் துண்டுகள், வேர்க்கடலை, எள், அவல், ஏலத்தூள் முதலியவற்றைச் சேர்த்து, கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறினதும், வில்லைகளாக எடுத்து வைக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1130 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 167 கிராம்
  ப்ரோட்டீன் - 29 கி
  கொழுப்பு - 72 கி
  கால்சியம் - 157.8 மில்லி கி
  இரும்பு - 20மி.கி
  பீட்டா கரோட்டின் - 137 மைக்ரோ கி
  ஃபோலிக் ஆசிட் - 60 மை.கி
  கொலின் - 46.5மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: எள்ளில் கால்சியமும் இரும்புச்சத்தும் நிறைவாகக் கிடைக்கும். இதைச் சாப்பிடுவதால் நல்ல எனர்ஜி கிடைக்கும். இதில் தாது உப்புக்கள் அதிகம் உள்ளதால், வளரும் குழந்தை களுக்கு மிகவும் நல்லது. வெல்லம் கலந்து செய்யப் படுவதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். எளிமையான, எளிதில் செரிமானமாகும் உணவுப் பொருள் இது. இதை காலை அல்லது மாலை வேளைகளில் குழந் தைகளுக்கு சிற்றுண்டியாகக்  கொடுக்கலாம்.

படங்கள்: து.மாரியப்பன்

மிளகுத் தோசை!

தேவையான பொருட்கள்: அரிசி1/2 கிலோ, மிளகு20 கிராம், தேங்காய்1மூடி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சுத்தம் செய்து, மூணு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அரைக்கவும். கடைசியாக மிளகு, தேங்காய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக்கொண்டு, தோசையாக வார்த்து எடுக்கவும். உடம்புக்கு ஆரோக்கியமான மிளகுத் தோசை தயார்! உங்களுக்குப் பிடித்த சட்னி எதுவானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு