##~##

'வட்டம், சதுரம், முக்கோணம்... இவை மட்டுமே வரையத் தெரிந்தால் போதும், உலகத்தில் உள்ள அத்தனை உருவங்களையும் வரைந்துவிட முடியும்’ என்று உரக்கக் கூறியவர், நவீன ஓவியங்களின் தந்தை பாப்லோ பிக்காஸோ.

இந்த மூன்று உருவங்களை ஒன்றுடன் மற்றொன்றை இணைத்தும், சற்றே உருமாற்றியும் சில ஓவியங்களை இங்கே எளிமையாக வரைந்துகாட்டி இருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்துக்களும் இப்படித்தான் இந்த மூன்று வடிவங்களின் ஒரு பகுதியாகவோ அல்லது முழு வடிவமாகவோ, சில சமயங்களில் இரண்டு வடிவங்கள் சேர்ந்தோ உருவாகின்றன. உதாரணமாக, ஆங்கில எழுத்தான 'ளி’ ஒரு முழு வட்டமாக, அல்லது நீள் வட்டமாக அமைகிறது. அதே வட்டம் பாதியாக இருப்பின், சி என்கிற ஆங்கில எழுத்தாக வடிவம்பெறுகிறது. சதுரத்தின் பாதி, லி என்கிற ஆங்கில எழுத்தையும், 'ட’ என்கிற தமிழ் எழுத்தையும் குறிக்கின்றது.

முத்தான கையெழுத்து
முத்தான கையெழுத்து

'க’ என்கிற தமிழ் எழுத்தில் சதுரம், அரை மற்றும் முக்கால் வட்டம் அமைவதையும் காண முடிகிறது. எனவே, ஒவ்வோர் எழுத்தையும் ஓர் ஓவியம் போலவே நினைத்துக்கொண்டு  எழுதலாம். இன்னும் சொல்லப்போனால், எழுதாதீர்கள்; வரையுங்கள்!

சாய்கோடு, நேர் கோடு, வளை கோடு இவைதான் உலகின் அனைத்து மொழிகளின் வடிவத்துக்கு அடிப்படை. இந்த ஆரம்ப எழுத்துப் பயிற்சியை மீண்டும் மீண்டும் எழுதிப் பழகுவதால் கைநிதானம், வடிவத்தை சிதைக்காமல் எழுதுதல் மற்றும் இடைவெளி விட்டு எழுதுதல் ஆகியவற்றை பழக முடியும்.

முத்தான கையெழுத்து

முன் பக்கத்தில் ஒரு பயிற்சித் தாளைக்  கொடுத்து இருக்கிறோம். அதில் எழுதிப் பழகலாம். அல்லது அந்தப் பக்கத்தை நகல் எடுத்தும் எழுதலாம். அனைத்து வயதினரும் இதை ஆரம்பப் பயிற்சியாக எழுதிப் பார்க்கவும். இதற்காக, கட்டம் போட்ட 'ப்ளாக்’ நோட்டுப் புத்தகம் (BLOC NOTE BOOK) கடைகளில் கிடைக்கிறது. அதை வங்கிக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் இரண்டு பக்கங்களாவது வரைந்து பழகுங்கள். பேனா அல்லது பென்சில் மூலம் வடிவம் மாறாமல் பயிற்சி செய்தால், ஒரு நிதானம் உங்களை அறியாமலேயே உங்களுக்குள் உருவாகும்.

(எழுதுவோம்...)

முத்தான கையெழுத்து
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism