##~##

கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கும்போது பாடத்தைப் பற்றி எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

விளையாடும்போது நம் கவனம் முழுக்க அதில் மட்டுமே இருக்கிறது. ஆனால், படிக்கும்போது ஏன் விளையாட்டு ஞாபகம் வருகிறது? நமக்குப் பிடித்த பொழுதுபோக்கின் பக்கமே மனசு அதிகமாகச் சாயும். படிப்பையும் அப்படி இயல்பாக்கிக்கொள்ள பாடம் தவிர, பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் தனியாகப் படிக்கும்போது கொட்டாவி வரும். அதனால், பத்திரிகைகளில் இருக்கும் படங்களைப் பற்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் பேசுங்கள். அவர்களுக்கு உரக்க வாசித்துக் காண்பியுங்கள். வாசித்ததற்கு அர்த்தத்தையும் விளக்குங்கள்.  இது உங்களுக்குப் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

அப்புறம் என்ன? புத்தகங்களை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். புத்தகங்களும் உங்களை நேசத்துடன் அழைக்கும். பிறகு, நூலகத்துக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகச் சேர்ந்து புத்தகங்களை வீட்டுக்கும் எடுத்துவந்து படியுங்கள். முக்கியமாக, தாய்மொழியில் நிறைய வாசியுங்கள்.

'என்ன, எப்போ பாத்தாலும் தமிழே படிச்சுட்டு இருக்கே’ என்று யார் கிண்டல் செய்தாலும் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

இனி, நேசிப்பின் அடுத்த கட்டத்துக்குச் செல்வோம். எப்போதும் கையில் அல்லது பையில் ஒரு புத்தகத்தை வைத்து இருங்கள். பஸ்ஸில் போகிற நேரம், யாருக்காகவாவது காத்திருக்கிற நேரம்  படிப்பதில் செலவிடுங்கள். படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் தயாரியுங்கள். ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால், உடனே அதைப் பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள். படித்த புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் எழுதிவைக்கலாம்.

இப்போது எல்லாம் வாசிப்புக்கு எதிரியாக இருப்பவை டி.வி.யும் இன்டர்நெட் கனெக்ஷனும்தான். இந்த நாளுக்கு இவ்வளவு படிக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முதலில் 10 நிமிடங்கள் எனத் தொடங்கலாம். அந்த அளவுக்குப் படிக்கவில்லை என்றால், டி.வி. முன்னால் உட்காராதீர்கள்.

உங்கள் வீட்டில் உங்களைவிடச் சிறியவர்கள், தம்பி அல்லது தங்கை இருந்தால், அவர்களுக்குப் புத்தகம் படித்துக் காண்பியுங்கள். பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று கவனித்தால், எதிர்பார்க்காத அறிவுப் பொக்கிஷங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

இப்படிக் கதை மற்றும் பிற புத்தகங்களை நேசித்துப் படிக்க ஆரம்பித்ததும் பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்துப் பாருங்கள். நம்மை அறியாமல் ஓர் ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

ஞாபகசக்திக் குறைவு, அடிக்கடி மறந்துபோவது, முந்தைய நாள் படித்ததை நினைவுபடுத்திக்கொள்ள முடியாமல் போவது என்பன பலருக்கும் பிரச்னையாக இருக்கின்றன. இதற்கு ஒரு முக்கியமான காரணம்: தவறான வாசிப்புப் பழக்கங்கள்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

படிப்பு என்பது மூளைச் செயல்பாடு. இதற்கு, கவனத்தை ஒரே இடத்தில் குவித்துவைப்பது அவசியம். வாசிப்புப் பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கற்பதில் முன்னேற்றம் காண முடியும். இதை அடையும் பாதையில் நீங்கள் எடுத்துவைக்க வேண்டிய முதல் படிதான் தொடர்ந்து படிப்பது. வாயைச் சுத்தமாகவைத்துக்கொள்ள தினசரி பல் துலக்குகிறோம். பல் துலக்குவதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்கிறோம்.

இதேபோல வாசிக்கும் பழக்கத்தையும் மாற்றிக்கொண்டால், பள்ளி அறிவிலும் ஜெயிக்கலாம். கதை, கவிதை, இலக்கியம் போன்ற வெளி உலகிலும் ஜொலிக்கலாம்.

 (கற்போம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism