Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
மை டியர் ஜீபா !
##~##

''இதுக்குப் பதில் சொல்லு ஜீபா... சூடான பாத்திரத்தின் மீது தண்ணீர் பட்டதும், 'சொய்ங்’னு சத்தம் வருதே ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - மு.சையத் ஆஷிக், கீழக்கரை. 

''சூடான பாத்திரம், எரியும் விறகு இவை எல்லாம் அதிக வெப்ப நிலையில் இருக்கும். அவற்றின் மீது தண்ணீர் பட்டதும், உடனடியாகத் தண்ணீர் கொதிநிலையை அடைந்து, அந்த நொடியே ஆவியாக விரிவடையும். இந்த அதிவேக நிகழ்ச்சியினால் பாத்திரத்தைச் சுற்றி இருக்கும் காற்று வேகமாக அசைக்கப்படும். அப்போது காற்று எழுப்பும் சத்தம்தான் 'சொய்ங்.’ நாம் கைகளைத் தட்டும்போது எழுகிற 'டப்’ சத்தமும் காற்றின் அசைவே. இசை, பேச்சு என ஒலி சம்பந்தப்பட்ட எல்லாமே காற்றின் அசைவினால்தான் நடக்கிறது சையத். காற்று இல்லாவிட்டால் ஒலி என்கிற விஷயமே இருக்காது.''

''டியர் ஜீபா... இந்த உலகத்தில் எத்தனை வகையான பழங்கள் உள்ளன?

    - கூ.க.சங்கர் நாராயணன், பெரியநாயக்கன்பாளையம்.

மை டியர் ஜீபா !

  ''உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,000 வகையான பழங்கள் உள்ளன. பொதுவாக இவற்றை தனிப் பழங்கள், கூட்டுப் பழங்கள் (Aaggregate fruit) பலவகைப் பழங்கள் (Multiple fruits) என்று பிரிக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சில கிளைப் பிரிவுகளும், அந்தக் கிளைப் பிரிவுகளில் சில வகைகளும் உள்ளன. உதாரணமாக, தேங்காய் எளிய பழங்கள் பிரிவில் Drupe(உள் ஓட்டுப் பழம்) என்ற கிளைப் பிரிவின் ஒரு வகையே. பொதுவாக நாம் காய் என்று அழைக்கும் அவரை, பீன்ஸ் போன்ற பலவும் பழம் வகையில் அடங்கும். இன்னொரு சுவையான விஷயத்தையும் சொல்லட்டுமா... 'பழம்’ என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்கும்போது கவனித்துப் பார். ப என்கிறபோது வாய் குவிந்து பழத்தை வாய்க்குள்வைக்கும் வகையில் உள்ளது. ழ என்கிறபோது பழம் வாய்க்குள் செல்வதுபோலவும் ம் என்கிறபோது விழுங்கிய உணர்வும் ஏற்படுகிறது. எப்பூடி?!''    

  ''ஹலோ ஜீபா... சுவர்க்கோழி என்கிறார்களே, அது எப்படி இருக்கும்?''

    - ஆர்.கே. சந்தோஷ், சென்னை-87.

மை டியர் ஜீபா !

''சுவர்க்கோழி, சில்வண்டு எனத் தமிழிலும் சிக்ஷீவீநீளீமீt என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இவை, பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. இவற்றில் 900 வகைகள் உள்ளன. இவற்றில் பெரியது அதிகபட்சம் ஓர் அங்குலம் வரையே இருக்கும். உடலின் பெரும் பகுதி கருப்பு நிறத்திலும், அத்துடன் பழுப்பு, பச்சை போன்ற நிறங்களும் கலந்து இருக்கும். உடலின் மேல் பகுதியில் இருந்து அடி வயிற்றை மூடும் வகையில் இறக்கை காணப்படும். தன் உடலை சூடுபடுத்திக்கொள்ள, இந்த இறக்கையை இவை தேய்க்கும்போது ஏற்படும் சத்தமே ரீங்கார ஓசை. ஒரு சில்வண்டு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை முறை ரீங்காரம் செய்கிறது என்பதைவைத்து அந்த இடத்தின் வெப்பநிலையைக் கணக்கிட முடியுமாம்.''

''டியர் ஜீபா... நமக்கு நிலா பெரியதாகி சிறிது சிறிதாக மறைவதுபோல், வேறு கிரகத்தில் இருந்து பார்த்தால் பூமியும் அப்படித் தெரியுமா?''

   - பி.வந்தனா, தருமபுரி.

மை டியர் ஜீபா !

''கண்டிப்பாக வந்தனா. ஒரு கிரகத்தின் சுற்றுப் பாதையில் இன்னொரு கிரகமும் இருக்கும்போது இப்படியான தோற்றம் ஏற்படும். அந்த வகையில், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பார்க்கும்போது நிலவைப் போலவே பூமியும் தேய்ந்து மறைவதுபோல் இருக்கும். செவ்வாய்க் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.''    

''ஹாய் ஜீபா... மச்சம் எப்படி உருவாகிறது?''

- ச.சாய்பிரகாஷ், பீளமேடு

மை டியர் ஜீபா !

''நமது உடலில் இருக்கும் நிறமி செல்கள் புறத்தோல்களில் வெளிப்படுவதே மச்சமாக மாறுகிறது. 'பர்த் மார்க்’ என்று சொல்லப்படும் இவை, பிறந்தது முதல் இறுதி வரை உடலில் இருக்கும். அதே சமயம் சில மச்சங்கள் நாம் வளர வளர, அதுவும் பெரியதாகும். சில மச்சங்கள் வளர்ந்த பிறகும் புதிதாகத் தோன்றும். கடுகு அளவில் தொடங்கி பல வடிவங்களில் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என மச்சங்களில் 30 வகைகள் இருக்கு பிரகாஷ்.''    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism