Published:Updated:

புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !

படிப்பாளி

புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !

படிப்பாளி

Published:Updated:
புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !
##~##

கிரிக்கெட்டில் டெண்டுல்கர் போல் தமிழ்ச் சிறுவர் படைப்பு உலகில் வாண்டுமாமா. நம் அப்பா, அம்மா சுட்டிகளாக இருந்தபோதே  சிறுகதைகள், படக் கதைகள், தொடர்கள், அறிவியல் மற்றும் வரலாற்றுச் செய்திகள் என எல்லா வகைகளிலும் பல செஞ்சுரிகளை அடித்தவர். அவருடைய அற்புதமான 30 சிறுகதைகளின் தொகுப்பு 'அப்பா... அப்பா... கதை சொல்லு.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடினமான அறிவியல் விஷயங்களையே துப்பறியும் கதையைப்போல் விறுவிறுப்புடன் எழுதுபவர் வாண்டுமாமா. கதைகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? 'கனவு பலித்தது’ என்ற முதல் சிறுகதையே 'அட’ என ஆச்சர்யப்படுத்துகிறது. காரணம், இந்தக் கதைக்கு முடிவே இல்லை. கடைசி வரியைப் படித்து முடித்ததும் முதல் வரிக்குச் சென்றுவிடுவோம்.

புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !

'மந்திரப் பறவை’ கதையில் வரும் மாயாஜாலங்கள் திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருவனவாகும்.

புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !

இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியின் வாழ்வில் நடந்த நிஜக் கதையான 'பாதையை மறித்த பூதம்’ ஆரம்பத்தில் நம்மைப் பயமுறுத்தி, இறுதியில் சஸ்பென்ஸை உடைக்கிறது. இதே போல், 'ஆவி உலவும் அரண்மனை’, 'நடுக்காட்டில்’ போன்ற கதைகளும் த்ரில்லர் ட்ரீட்.

மனிதநேயம், உயிர்களிடம் காட்டும் அன்பு ஆகியவற்றை அழகாகச் சொல்லும் 'அதிர்ஷ்டப் பந்து’ போன்ற கதைகளும் உள்ளன. விலங்குகளின் அட்டகாசம் இல்லாமல் ஒரு கதைத் தொகுப்பு உண்டா? 'பந்தய விளையாட்டு’ என்ற கதையில், குதிரை முதல் கோழிக் குஞ்சு வரை நம்மை ரசிக்கவைக்கின்றன.

தெளிவான எழுத்து நடை, பக்கத்துக்குப் பக்கம் ஓவியம், நேர்த்தியான வடிவமைப்பு என எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும் புத்தகத்தின் ஒரே குறை, எழுத்துப் பிழைகள். தலைப்புகளில்கூட பிழை இருப்பதைக் கவனித்து இருக்கலாமே!

 அப்பா... அப்பா... கதை சொல்லு!
ஆசிரியர்: வாண்டுமாமா
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17
விலை:

புக் கிளப் ! - முடிவு இல்லா ஆச்சர்யம் !

80/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism